புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

in 2023 அக்டோபர்

புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

அபூ அப்தில்லாஹ்

செப்டம்பர்  மாத  தொடர்ச்சி….

புரோகிதர்களில் பெரும்பாலானோர் இதில் மூன்றாம் வகையான கடுமையான லஞ்சமும், பெரும் மோசடியுமான காரியங்களைத்தான் செய்து வருகின்றனர். முன்னர் குறிப்பிட்டது போல் குர்ஆன், ஹதீதை சரியாக பிரச்சாரம் செய்ய, தொழ வைக்க, பாங்கு சொல்ல, குர்ஆன் ஓதிக் கொடுக்க, மார்க்கம் கற்றுக்கொடுக்க இவற்றிற்கு மக்களிடம் கூலி வாங்குவது லஞ்சமாகும். அதே சமயம் கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது, ஸலாத்து நாரியா, தர்கா சடங்குகள், பீர், முரீது, மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள் இவற்றின் பெயரால் வாங்கும் கூலி கடுமையான லஞ்சத்தோடு பெரும் மோசடியுமாகும். காரணம் அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றிச் சிலர் சாதிப்பது போல் இங்கு அல்லாஹ்வை ஏமாற்றி இவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. எனவே இவை அனைத்தும் மோசடிகளிலேயே பெருத்த மோசடியாகும் என்பதை மக்கள் புரிய வேண்டும். இவற்றைக் காலம் காலமாகச் செய்துவரும் புரோகிதர்கள்முல்லாக்கள் எவ்வளவு பெரிய கொடிய ஹராமில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்துவது கடமையாகும். மக்களும் கூலி கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்வது  அவசியமாகும்.

அது மட்டுமல்ல; இன்றைய மக்களில் மிகக் கடுமையான ஹராம்களில் மூழ்கி, உள்ளம் இறுகி மிக மோசமான நிலையில், மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட புரோகிதர்களைவிட வேறு யாரும் இருக்க முடியாது. உதாரணமாக வருடம் 365 நாட்களும் ஒருவன் பன்றிக் கறி சாப்பிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் சாப்பிடும் மற்ற உணவுகள் ஹலாலாக இருக்க வாய்ப்புண்டு. அவனது குடிப்பு, உடை, வீடு மற்றவை அனைத்தும் ஹலாலாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்களின் உணவு, குடிப்பு, உடை வீடு இப்படி அனைத்தும் ஹராமாகவே இருக்கும் என்பதில் ஐயமுண்டோ? ஆக வருடம் 365 நாட்களும் பன்றிக்கறி சாப்பிடும் ஒருவனை விட இவர்கள் கேடுகெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை விட ஹராமில் மூழ்கி இருக்கும் வேறு யாரையாவது இவர்களால் காட்ட முடியுமா? மக்களிடையே கேடுகெட்ட வர்கள் என்று யாரையயல்லாம் இவர்கள் அடையாளம் காட்டுகிறார்களோ அவர்கள் அனைவரையும் விட கேடுகெட்ட நிலையில் தான் இவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் உபதேசத்தைக் கேட்டு முஸ்லிம்கள் உணர்வு பெறமுடியுமா? மிக உன்னதமான முஸ்லிம் சமுதாயம் இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் மர்மம் இப்பொழுதாவது  புரிகிறதா?

ஓர்   உதாரணம் :

இவர்கள் ஹராமிலேயே முழுக்க முழுக்க மூழ்கிவிட்டதால், இவை ஹராம் என்பதையும் மறந்துவிட்டார்கள். புரோகிதர்களின் நிலையே இதுவென்றால் அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மக்களின் நிலை எப்படி இருக்கும்? எளிதாகப் புரிய உதாரணம் ஒன்று சொல்லுகிறோம். ரோட்டில் ஒருவர் தமது மகனுடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பயங்கரமான விபத்து. அவரோடு வந்த அவரது மகன் லாரியில் அடிபட்டு மண்டையில் பலத்த காயத்தோடு வீழ்ந்து கிடக்கிறான். அவர் அப்படியே அதிர்ந்து விடுகிறார்; கை கால்கள் பதறுகின்றன. தடுமாறுகிறார். அவசர அவசரமாக ஒரு டாக்சியைப் பிடித்து வேகமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். போய்ச் சேரும் வரை அவருக்குப் பொறுமை இல்லை. ஒரு வழியாகப் போய் அவசர சிகிச்சைப் பிரிவில் மண்டை உடைந்த மகனைச் சேர்த்தும் விட்டார்.  

ஆனால் அங்கு பணி புரிகிறவர்களோ எவ்வித பதட்டமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக, வெகு அலட்சியமாகச் செயல்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து அவருக்குத்தான் ஆத்திரம் பீரிட்டு வருகி றது. அவர்களோ அலட்டிக் கொள்வதாக இல்லை. காரணம் என்ன? விபத்து சாதா ரண விபத்தா? இல்லை. பின் என்ன காரணம்? அவர்கள் அன்றாடம் இதைப்போல் இன்னும் இதைவிட கடுமையான நிலையிலுள்ள பல கேஸ்களைப் பார்த்துப் பார்த்து அவர்களது உள்ளம் மறத்துவிட்டது. அவர்களில் இறந்தவர்களை சர்வசாதாரணமாகப் பிணவறைக்கு அனுப்பிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் தினசரி அனுபவம் அவர்களை இவ்வாறு செயல்பட வைக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் சாப்பிடுவது ஹலாலான  உழைப்பைக்  கொண்டு.

ஆனால் ஹஜ்ரத்துகள் அன்றாடம் ஹராமான உணவை உண்டு அவர்களின் உள்ளமே இறுகிவிட்டது, மறத்துவிட்டது. எனவே அவர்கள் செய்வது தவறாகவே அவர்களுக்குப் படுவதில்லை. அவர்கள் அதை தவ றாக உணர்ந்தால் அல்லவா மக்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறார்கள். எனவே மக்களும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கூலிக்குச் செய்வதன் தீமையை உணராது இருக்கிறார்கள். அதனால் சமுதாயமே அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மவ்லவிகளின் உள்ளம் இறுகிக் கடினமாகி விட்டது, கல்லாகிவிட்டது என்பதற்கு அவர் களிலிருந்தே ஆதாரம் தரமுடியும். புரோகிதக் கல்வி கற்பிக்கும் மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள், அதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் இன்னும் மார்க்கத்தை விற்க ஆரம்பிக்கவில்லை. எனவே அவர்களின் உள்ளங்கள் இறுகவில்லை, கல்லாகவில்லை. எனவே அங்கிருந்து வெளிவரும் இளம் மவ்லவிகளிடையே உண்மையை அறிந்து கொள்ளும் தாகம் இருக்கவே செய்கிறது. சிர்க், பித்அத் பற்றிய வெறுப்பும் அவர்களின் உள்ளங் களில் இருக்கவே செய்கிறது. மதரஸாவில் பட்டம் பெற்று வெளியே வந்து பள்ளி களில் இமாமாகப் பணி புரிய ஆரம்பிக்கும். இந்த இளம் மவ்லவிகள் ஆரம்பத்தில் ஜும்ஆ மேடைகளிலும், மற்றும் பயான்களிலும் சிர்க், பித்அத்தைக் கண்டித்துப் பிரசாரம் செய்கின்றனர். அவர்களில் சிலர் இதில் மிகக் கடுமையாகச் செயல்படுவதையும்  காணலாம்.

அப்படி சிர்க், பித்அத்தை மிகக் கடுமையாகச் சாடிய அந்த மவ்லவிகளே ஒருசில வருடங்களில் தலைகீழாக மாறி சிர்க், பித்அத்தை மிகக் கடுமையாக ஆதரிப்பதைப் பார்க்கலாம். இந்த நிலைக்குக் காரணம் என்ன? அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, அதைக் கொண்டு வயிற்றை நிறைத்ததால் அவர்கள் உள்ளம் இறுகி கல்லாகிவிட்டது. பனீ இஸ்ரவேல் ஆலிம்களை எச்சரித்துள்ள நிலைக்கு இவர்களும் ஆளாகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட பல மவ்லவிகளை நாம் அறிவோம். உங்களில் பலரும் அறிந்திருக்க முடியும். அவர்கள் பிழைப் பிற்கு வேறு வழியின்றி மனம் உறுத்தும் நிலையிலேயே அந்த சிர்க், பித்அத்களை ஆதரிக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அது உண்மையானால் அவர்களால் சொல்ல முடியாத உண்மைகளைச் சொல்பவர்களை அதாவது சிர்க், பித்அத்களை கண்டிப்பவர்களை பகிரங்கமாக ஆதரிக்க முடியாவிட்டாலும் மெளனமாக இருந்து விட்டுப் போகலாமே. ஆனால் அவர்கள் அதற்கு மாறாக சத்தியத்தைச் சொல்பவர்களை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பவர் களாக அல்லவா இருக்கிறார்கள்? இதுவே அவர்களின் உள்ளங்கள் இறுகி கல்லாகிவிட்டன  என்பதை  நிரூபிக்கவில்லையா?

ஹராமில்  ஊறியவனின்  துஆ:

ஒரு மனிதன் நீண்ட பிரயாணம் செய்து, புழுதி படிந்தவனாக, பரட்டைத் தலையாக, இரண்டு கைகளையும் உயர்த்தி இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். ஆனால் அவனது உணவும் ஹராமானதாக உள்ளது; அவன் அருந்திய பானமும் ஹராமானதாக உள்ளது; அவன் அணிந்துள்ள ஆடையும் ஹராமானதாக உள்ளது. இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளப்படும்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி, நூல்: முஸ்லிம்.

இந்தச் சமுதாயத்திற்கு உயர்வும், மதிப் பும் இப்பூமியில் வசதியாக வசிப்பதும் உள் ளது என்று நற்செய்தி கூறுவீராக! அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய அமலை (செயலை) இவ்வுலகிற் காக (பொருளுக்காகச்) செய்தால் மறுமையில் அவருக்கு எந்தப் பயனுமில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: உபைபின் கஃபு(ரழி), நூல்: அஹ்மது, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகி.

இந்த இரண்டு ஹதீத்களின்படி மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் மவ்லவிகள் மிகவும் இழிவான கேவலமான தரங்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். அவர் களுக்கு எப்படி நேர்வழி கிடைக்கும்? மற்றவர்களுக்கு எப்படி நேர்வழி காட்ட முடியும்? நிதானமாகச்  சிந்தியுங்கள்.

அவர்களின் இழிநிலையை வல்ல அல்லாஹ் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதைப்  பாரீர்:

எவர், அல்லாஹ் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து, அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கவுமாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும்  வேதனையும்  உண்டு.”

அவர்கள் தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையை யும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச்  சகித்துக்கொள்ளச்  செய்தது  எது?    (அல்குர்ஆன் 2:174,175)

அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையைப் பெறுவதுஎன்பது குர்ஆனை அச்சடித்து சொற்பத் தொகைக்கு விற்பது என்று விளக்கம் சொல்லும் முல்லாக்களும் இருக்கிறார்கள். உண்மை யில் இப்பணிக்கு மறுமையில் மகத்தான கூலி இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிவித்திருக்க, அதை மறைத்து அப்பணிகளுக்கு அற்பமான இவ்வுலகில் கூலி பெறுவதை யும், அதற்கென்றே சத்தியத்தை மறைப்பதையுமே அல்லாஹ் இங்கு குறிப்பிட்டுள்ளான்.

இதற்குக் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இறைநெறி நூலிலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவி லேயே இருக்கின்றனர்.”  (அல்குர்ஆன் 2:176)

இந்த இறை மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்கள் அதாவது பிரசாரம், இமாமத், பாங்கு சொல்லல், குர்ஆன் ஓதிக்கொடுத்தல், மார்க்கம் கற்றுக் கொடுத்தல் போன்ற இவற்றிற்குக் கூலி வாங்குபவர்கள், சத்திய மார்க்கத்தில் பிளவை உண்டாக்குபவர்கள்; மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள் என்று மக்களைக் கூறு போட்டுச் சுரண்டுவார்கள் என்பதையும் தெளிவுபடுத்து கிறது. மேலும் சிரமத்தைப் பார்க்காமல் 2:79,159, 3:77, 5:13, 9:9 இறைவாக்குகளைத் திறந்து பார்த்து இந்த புரோகிதர்கள் அடையப் போகும் இழிவையும், கேவலத்தையும், நரக வேதனையையும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களா முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட முடியும்? எண்ணிப்  பாருங்கள்.

பெரியதொரு  ஆச்சரியம் :

நமக்கு ஆரம்பத்தில் பெரியதொரு ஆச்சரியக் குறி உள்ளத்தில் இருந்து வந்தது. அதாவது தர்கா சடங்குகள், தக்லீது பற்றி அவற்றின் கெடுதிகள் பற்றி மக்கள் மன்றத்தில் குர்ஆன், ஹதீத் ஆதாரங்களை எடுத்து வைத்தபோது முகல்லிது மவ்லவிகள் துணிந்து எம்மீது பச்சையாக அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். அதேபோல இயக்கப் பிரிவுகளின் கெடுதிகளை குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள் கொண்டு எடுத்து வைத்தபோது தெளஹீது மவ்லவிகள் எம்மீது படு அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். அமானித மோசடி, பிறருக்குச் சொந்தமானதை அபகரித்துக் கொண்டோம் என்றெல்லாம் அவதூறு பரப்பி மக்களை நம்ப வைத்து அவர்களைச் சத்தியத்தை விட்டும்  திசை  திருப்பி  விட்டனர்.

மார்க்கம் கற்ற மவ்லவிகள், குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள், அரபி மொழி கற்று குர்ஆனையும், ஹதீதையும் அவற்றின் மூல அரபு மொழியில் பார்த்து உணர்ந்த மவ்லவிகள் எப்படி மனம் துணிந்து பொய் சொல்ல முடிகிறது? பொய்ச் சத்தியம் செய்ய முடிகிறது? அதுவும் அல்லாஹ் மீது ஆணையிட்டுப் பொய்ச் சத்தியம் செய்ய முடிகிறது? அவதூறு பரப்ப முடிகிறது? என்ற கேள்விக்குறியே அது. ஆனால் மேற்படி இறைவாக்குகளை ஆராய்ந்த பின்னரே பிரச்சார பணிக்கு, இமாமத் செய்ய, பாங்கு சொல்ல, மார்க்கம் கற்றுக் கொடுக்க அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாகக் கூலி வாங்கி அதைச் சாப்பிடுவதால், வயிற்றை நரக நெருப்பால் நிரப்புவதால், அவர்களின் உள்ளம் இறுகிக் கல்லாகி, அதனால் துணிந்து பொய் சொல்லவும், அல்லாஹ் மீது ஆணையிட்டுப் பொய்ச் சத்தியம் செய்யவும், அவதூறு பரப்பவும் தயாராகி விடுகிறார்கள்; ஷைத்தானின் பட்டாளமாகவே செயல்படுகிறார் கள்  என்ற  உண்மை  புலப்பட்டது.

குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள்!” (நபிமொழி) (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)

எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களி டமே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார் கள்.” (நபிமொழி)         திர்மிதி, அஹ்மத்

கசப்பான  உண்மை:

இங்கு இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் வெளியிடாமல் இருக்க முடியாது. அதாவது மார்க்கத்தைத் தங்களின் பிழைப்பாக ஆக்கிக்கொண்ட குற்றத்திற்காக முகல்லிது மவ்லவிகளை விட தெளஹீது மவ்லவிகளோ, மிகவும் கடுமையாகப் பிடிப்படுவார்கள். காரணம் முகல்லிது மவ்லவிகளின் அச்செயலுக்கு அவர்களின் வறுமையும், கையாலாகாத நிலையும் ஒரு காரணமாக இருக்கிறது. அவர்கள் கல்வி பயின்ற மதரஸாக்களில் குர்ஆன், ஹதீதுக்கு முரணான மோசடிக் கல்வி கற்றுக்கொடுப்பதால், அவர்கள் சுயமாகத் தொழில் கற்று தன் கையே தனக்குதவி என பிழைக்கத் தெரிந்துவிட்டால், அந்த மோசடிக் கல்வியை அடையாளம் தெரிந்து கொள்வார்கள்; அதனைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீத் வழிக்கு வந்துவிடுவார்கள்; புரோகிதக் கல்வி ஒழிந்து விடும் என்ற அச்சத்தில் அவர்களைத் தொழில் கல்வி கற்பதற்கு அனுமதிப்பதில்லை; தொழில் கல்வி கற்றால் அதிலேயே மூழ்கி விடுவார்கள். மார்க்கத்தை மறந்து விடுவார்கள் என்று அவர்களின் குருமார்கள் போலிக் காரணம் கூறு கின்றனர். அதுபற்றி விரிவாகப் பின்னால் வேறொரு கட்டுரையில் பார்ப்போம். அதனால் முகல்லிது மவ்லவிகள் வேறு வழியின்றி கையறு நிலையிலுள்ளனர். பிழைப்பிற்குப் புரோகிதத்தை விட்டால் வேறு வழியில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ மிக குறைவுதான். இன்றைய விலைவாசியில் ஒரு கணவன், மனைவி இரு குழந்தைகள் என்றால் குறைந்த கணக்குப் படி பார்த்தாலும் 10,000/ ரூபாயாவது தேவைப்படும். கிடைப்பதோ ஐயாயிரம் கூட இல்லை. துண்டு விழும் தொகையைச் சரிகட்ட கத்தம், ஃபாத்திஹா, மெளலூது, தர்கா சடங்கு என்று ஈமானை (விசுவா சத்தை) அடகு வைக்க வேண்டிய நிர்பந்த நிலை. அப்படியும் அவரது மனைவி மக்கள் வயிறாற சாப்பிடுவது கிடையாது. பசி பட்டினிதான். அவர்களின் நிலை உண்மை யிலேயே பரிதாபத்திற்குரியதுதான். அவர் கள் செய்வது தவறு என்பதை அவர்கள் உணர்ந்தாலும் அவற்றை விட்டு விடுபட்டு வரமுடியாத  பரிதாப  நிலை.     (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: