குர்ஆனும் – மொழி பெயர்ப்பும்!

in 2023 நவம்பர்

குர்ஆனும்மொழி பெயர்ப்பும்!

அபூ அஹமத், ஒரத்தநாடு

இவ்வுலகில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றின் ஒவ்வொன்றிலும் சில சிறப்புகள் இருக்கின்றன. பல மொழிகளின் ஆயிரக்கணக்கான சில நூல்கள் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று வரை  வந்துகொண்டே  இருக்கின்றன. 

பொதுவாக வேறு ஒரு மொழியில் உள்ள நூலை பிற மொழிகளில் மொழிப் பெயர்க்கப்படு வது எதனால் என்றால் அந்த நூலானது பெரும்பாலோருக்கு பயனுள்ளதாகவும் அல்லது படிக்க சுவாரசியமாகவும் இருப்பதே காரணம். ஆயினும் உலகில் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்டவை  மூன்றே  மூன்று  நூல்கள்  தான்.

அவை :

ENGLISH DICTIONARY

BIBLE

QURAN

மேலே குறிப்பிட்டுள்ள முதல் இரண்டு நூல்களைப் பற்றிய பயன்கள் நம் கட்டுரை யின் நோக்கமில்லை. மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள குர்ஆனைப் பற்றி மட்டுமே இதில் விவரிக்கப்படும். குர்ஆன் மொழி பெயர்ப்புகள் பல வெளிவந்திருந்தாலும் 100 சதவீதம் பூர்த்தி செய்யப்படவில்லை.

  • மொழி பெயர்ப்பில் தவறு ஏற்பட காரணங்கள் :
  • முதலாவது :
  • குர்ஆன் மொழிப் பெயர்ப்பை பொறுத்த வரை முஸ்லிம்களை மையமாக வைத்தே மொழிப் பெயர்க்கப்படுகிறது. இந்த தவறு குர்ஆன் மொழிப் பெயர்ப்பு தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. சுமார் 10க்கு மேற்பட்ட தமிழ் மொழிப் பெயர்ப்புக்கள்  வந்தும்  இதே  நிலைதான்  நீடிக்கிறது.
  • பெரும்பாலான தமிழ் மொழிப் பெயர்ப்புக்கள் அரபி மூலத்திலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யாமல் உருது மொழியில் மொழியாக்கம் (தர்ஜுமா) செய்யப்பட்ட நூலி லிருந்தே தமிழ் மொழிப் பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
  • உருது மொழியில் இதுவரை சுமார் 92 மொழியாக்கம் (தர்ஜுமா) வெளிவந்துள்ளது. இவற்றில் எதில் கவரப்பட்டு படித்தார்களோ அதையே  தமிழில்  மொழி  பெயர்த்தார்கள்.
  • உதாரணமாக: அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்கள் அரபியிலிருந்து உருது மொழியில் மொழியாக்கம் (தர்ஜுமா) செய்ததை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறார்கள். இன்னும் பல உள்ளன. அவைகளில் சில இங்கு  குறிப்பிடவே   தகுதி  அற்றவை.
  • இரண்டாவது :
  • சில மொழி பெயர்ப்பாளர்கள் அறிவியல் ஞானம் இல்லாமல் மொழிப் பெயர்த்தது.
  • உதாரணமாக :  (ஜான் ட்ரஸ்ட் வெளியீடு)
  • அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அவர்கள் இதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள்.  (அல்குர்ஆன் 47:24)

இந்த மொழிபெயர்ப்பு தவறாகும். “இதயம்என்பது பம்பிங்  செய்கின்ற உடலிலுள்ள ஒரு உறுப்புத்தானே தவிர அதற்கு சிந்திக்கின்ற ஆற்றல் எல்லாம் இல்லை. சிந்திப்பது  உள்ளம்  மட்டுமே.

மேற்கண்ட வசனத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு என்னவாக இருக்க வேண்டும் என்றால், இந்த குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களின் உள்ளங்களில் பூட்டு போடப்பட்டுள்ளனவா? இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும். (சில மொழிப் பெயர்ப்புகளில் மட்டுமே  இதுபோன்று  சரியாக உள்ளது)

இன்னும் இதுபோல பல தவறுகள் உள்ளன. அவற்றில் மற்றொன்று “…அல்லாஹ்அர்ன்மீது அமர்ந்தான்…’     அல்குர்ஆன் 13:2

மேற்கண்ட வசனத்திற்கு மொழியாக்கம் செய்தபோதுஅர்ஷ்என்றால் நாற்காலி என்று மட்டும் பொருள் புரிந்துகொண்டு மனிதர்களில் இருக்கின்ற அரசர்கள் நாற்காலியில் அமர்வது  போல்  அல்லாஹ்வை  நாற்காலியில்  உட்கார  வைத்துள்ளார்கள்.

இந்த  தவறுக்கு  காரணம்:

உவமான வடிவில் சொல்லப்பட்ட வார்த்தைக்கு நேரடி மொழிபெயர்ப்பைக் கொடுத்தும்; மேலும் மக்கள் மத்தியில் குர்ஆனை முழுமையாக விளங்காது என்ற நிலைக்கும் கொண்டு வந்துவிட்டார்கள்.

அர்ஷ்  என்பது அனைத்தையும் கட்டுப்படுத்தும் அல்லாஹ்வின் வல்லமையை குறிக்கும்  ஒரு  சொல்லாகும்.

அதாவது அல்லாஹ் தான் படைத்த அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இயக்கி வருவதாக  மொழி பெயர்த்திருக்க வேண்டும்.  (பார்க்க : 7:54, 10:3, 20:5, 25:59, 32:4, 57:4)

அர்ஷ்என்ற வார்த்தை குர்ஆனில் மேற்கண்ட வசனங்களில் சுமார் 6க்கும் மேற்பட்ட இடங்களில்  வந்துள்ளன)

மூன்றாவது :   (கொள்கை  முடிவுக்கு  ஏற்றால்போல்  மொழி  பெயர்ப்பது)

மொழிப் பெயர்ப்பாளர்கள் தான் சார்ந்திருக்கின்ற கொள்கைக்கு ஏற்றவாறு மொழிப் பெயர்ப்பை செய்தது. அதாவது சுன்னத் வல்ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் புதிதாக முளைத்த (19) பத்தொன்பது இவைகளில் அவர் எதை சார்ந்திருக்கின்றாரோ அதற்கு ஏற்றால் போல்  மொழிப் பெயர்ப்பை  செய்தது.

இது  இறைநூல்  என்பதை  மறந்து  இயக்கம்  வளர  உதவும்  நூலாக  மாற்றி  வருகிறார்கள்.

இதைப்பற்றி விரிவாக எழுதுவதாக இருந்தால் ஒரு தனி நூலே எழுதவேண்டும். கட்டுரையின்  சுருக்கத்தை  கருதி  விவரிக்க முடியவில்லை.

சுருக்கமாக சொல்வதாக இருந்தால், “இது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்கும் அறிவுரை  தவிர   வேறு  இல்லை    அல்குர்ஆன் 68:52

என்று  அல்லாஹ்  சொன்னதையே  மொழி பெயர்ப்பாளர்கள்   மறந்து  விட்டார்கள்

மேற்கண்ட தவறுகள், மற்றும் வேறு சில முக்கிய காரணமும் மொழி பெயர்ப்புகளில் தவறு ஏற்பட காரணமாகவும் இருந்து வரு கிறது. அவற்றில் ஆரம்பத்திலிருந்து இருந்து வருவது

இஸ்ரேலியக் கதைகள்எல்லா மொழி பெயர்ப்புகளிலும் ஊடுறுவியது. அதாவது வேதக்காரர்களான யூதர்கள், கிருஸ்தவர்களிடமிருந்து முஸ்லிம்களை வந்தடைந்த தகவல்களுக்கு  இஸ்ராயிலியாத்து  (இஸ்ரேலியக் கதைகள்)  என்று  பெயர்.

நபித்தோழர்கள் (சஹாபாக்கள்) பலர் ஆரம்பத்தில் யூத, கிருஸ்தவ மதங்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் ஆவார்கள். பின்னர் இஸ்லாத்தில் இணைந்து குர்ஆனையும் தெரிந்து கொண்டார்கள். குர்ஆனில் முந்தைய பல சமூக மக்களின் நிகழ்ச்சிகள், வரலாறுகள் எடுத்துரைக்கப்படுவதை கண்ட அவர்கள் பிற்காலத்தில் விளக்கி கூறுகையில் பழைய வேதங்களில் அவர்கள் தெரிந்து வைத்திருந்ததையும் சேர்த்து குர்ஆனின் சில வசனங்களுக்கு விளக்கமாக கூறியுள்ளார்கள். இந்த விளக்கங்களேஇஸ்ராயிலியாத்துஎன்ற  பெயரில்  குர்ஆன்  விரிவுரையில்  புகுந்துவிட்டன.

இந்த விரிவுரையின் காரணமாக மொழிப் பெயர்ப்பில் பல்வேறு கருத்துக்கள் உருவாயின. இது  ஆரம்ப  காலத்திலிருந்து  இன்று  வரை  தொடர்கிறது.

குர்ஆன் நேருக்கு நேர் பேசுவது போல் அருளப்பட்ட இறை வழிகாட்டி நூலாகும். மொழிப் பெயர்க்கும்போதும் நேரிடையாக பேசுவது போல் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மொழி பெயர்ப்பாளர்கள் சிலர் மற்ற நூல்களை மொழிப்பெயர்ப்பு செய்வது போல் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து அதனைப் படிக்கும்போது உயிரோட்டம் இல்லாமல் செய்துவிட்டனர். குர்ஆனின் புனித தன்மையை காப்பற்றுவதாக நினைத்து இந்த தவறை செய்து வருகின்றனர். மேலும் அதனை திரும்ப, திரும்ப அரபியில் ஓதுவது மட்டுமே வணக்கமாகவும், கூலிக்காகவும், பரக்கத்திற்காகவும்  ஓதுவதாக  ஆக்கிவிட்டார்கள்.

குர்ஆனை படிக்கும்போது (ஓதும்போது) சிந்தனையற்ற பார்வை இல்லை என்றால் அதை படித்தாலும் மனித குலத்தில் எந்தவொரு மாற்றத்தையும்  செய்ய முடியாது. 

அல்லாஹ்வும்  அவ்வாறுதான்  கூறுகிறான்.

தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர் களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழமாட்டார்கள்  அல்குர்ஆன்  25:73

Previous post:

Next post: