குழந்தைகளிடம் எப்படி…? 

in 2023 நவம்பர்

குழந்தைகளிடம் எப்படி…? 

சேரியான்

மறு பதிப்பு :

மாற்றுமத பெற்றோர்கள், தங்களின் குழந்தைகள் தங்களை சரிவர கவனிப்பதில்லை, மரியாதையுடன் நடத்துவதில்லை. திருமணமாகி விட்டால் மனைவி பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோர்களை, கூட பிறந்தவர்களை விட்டுவிட்டு தனிக்குடித் தனம் போய் விடுகிறார்கள். அல்லது பெற்றோர்களை கவனிக்க முடியாத காரணத்தால் முதியோர் இல்லத்தில் பணம் கொடுத்து சேர்த்து விட்டு பிள்ளைகள் மனைவியுடன் சந்தோசமாக வாழ்கிறார்கள். இதில் ஒருசில முஸ்லிம்களும் அந்த முதியோர் இல்லத்தில் காண முடிந்தது. இதற்கு காரணம் என்ன?

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோர்களை குழந்தைகள் பராமரிக்கா மல் பாசமில்லாமல் ஒருசில குழந்தைகள் இருப்பதற்கு  காரணம்  இரண்டு:

  • இஸ்லாத்தை குர்ஆன் ஹதீத் அடிப்படையில் பெற்றோர்கள், குழந்தைகள் விளங்காதது.
  • குழந்தைகள் மேல் பாரபட்சம் காட்டுவது.

இந்த இரண்டு காரணங்களால் பெற்றோர்கள் குழந்தைகளை மதிப்பதில்லை. பெற்றோர் களிடம் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி பல கட்டுரைகள் அந்நஜாத்தில் வெளிவந்துவிட்டதால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதை அனைத்து சமுதாயத்திற்கும் எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான். உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவியரை அல்லாஹ் ஆக்கி உள்ளான்; உங்கள் மனைவியரிலிருந்து ஆண் மக்களையும், பெண் குழந்தைகளையும் உங்களுக்கு அவன் ஆக்கி உள்ளான். (அல்குர்ஆன் 16:72)

மனிதர்களே! நீங்கள் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர் கள். அவர்களுக்கும் நாமே (உணவை) வாழ்க்கை தேவைகளை வழங்குகிறோம். நிச்சய மாக அவர்களை கொலை செய்வது பெரும்  குற்றமாக  இருக்கிறது. (அல்குர்ஆன் 17:31)

இன்று ஸ்கேன் மூலம் ஆண்/பெண் என்று மருத்துவர்கள் கூறுவதை வைத்து கருவிலேயே குழந்தைகளை அழித்து விடுவது அதுவும், பெண் குழந்தையை தூக்கி பல இடங்களில் போடுவது, கொலை செய்து விடு வது அல்லாஹ்விடத்தில் மாபெரும் குற்றமாக உள்ளது என்பதை 17:31 வசனம் நமக்கு உணர்த்துகிறது. பெற்றோர்களில் அதிகமான வர்கள் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் மேல் அதிகம் பாசம் அன்பு காட்டி வருவதை நாம் பார்க்கிறோம். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஆண் குழந்தைகள் கடைசி வரை பெற்றோர்களை கவனிக்காது. பெண் குழந்தைகள்தான் பெற்றோர்களை கண்காணிப்பார்கள் என்ற தவறான எண் ணத்தை கூறுகிறார்கள். இது இஸ்லாத்தின் பார்வையில் தவறானதாகும். பெண் குழந்தைகளே இல்லாத பெற்றோர் களை ஆண் குழந்தைகள் கவனிப்பதையும், பாசம் காட்டுவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். வெளிநாடுகளில் பணி புரியும் ஆண் குழந்தைகள் திருமணம் ஆகி பல குழந்தைகள் இருந்தும் பெற்றோர்களை கவனிப்பதையும், பெற்றோர்கள் இறந்துவிட்ட செய்தி கிடைத்தால் பணச் செலவை கூட பாராமல் இரவோடு இரவாக விமானம் மூலமாக வந்து பெற்றோர்கள் ஜனாஸாவில் கலந்து கொள்ளும் பிள்ளை  களும் இருக்கிறார்கள். நாம் பார்க்கிறோம். சில நாடுகளில் உள்ள பெற்றோர்கள் ஆண் குழந்தை பிறந்தால் (வரதட்சனை வாங்குவதற்காகவே) சந்தோசப்படுகிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் (மஹர் வாங்குவதற்காகவே) மகிழ்ச்சியடைகிறார் கள். இது இஸ்லாத்தின் அடிப்படையில் தவறாகும். ஆண் குழந்தை யானாலும் பெண் குழந்தையானாலும் சந்தோசப்பட வேண்டும். குழந்தையே இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அவன் நாடியவர்களுக்கு பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண் மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன். தான் விரும்பியதை செய்ய மிக்க  ஆற்றலுடை யவன். (அல்குர்ஆன் 42:49,50)

நபி(ஸல்) கூறுகிறார்கள்: மனிதர்களுக்கு (சொல், செயல்) மூலம் கருணை காட்டாதவன் எவனோ அவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டன். அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரழி),  நூல்கள்: புகாரி:7376, முஸ்லிம்:4638

என் தந்தை பUர் என்னை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் போய், நான் எனது குழந்தைகளில் இந்த மகனுக்கு இதை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமது மற்ற குழந்தைகளுக்கும் அதை கொடுத்தீரா என்று கேட்டார்கள். இல்லை என்றார். அவர்களுக்கும் போய் அதை கொடு எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு பUர் (ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்: 3327.

மேற்கண்ட ஹதீத் அடிப்படையில் குழந்தைகளிடம் பெற்றோர்கள், ஏற்ற தாழ்வின்றி சரிசமமாக அந்தஸ்து வழங்கி நீதமாக நடந்து கொண்டால், இன்ஷா அல்லாஹ்! குழந்தைகள் பெற்றோர்களை புறக்கணிக்க மாட்டார்கள். பெற்றோர்களை ஆண் பிள்ளைகள் சமீப காலமாக வெறுப்பதற்கு காரணம் இஸ்லாத்தை குர்ஆன் ஹதீத் அடிப்படையில் குழந்தைகள் செயல்படுவதை கண்டபடி திட்டுவதும், சொத்தில் பங்கு இல்லை என்று மிரட்டுவதும், வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் நீ என் பிள்ளை இல்லை என்று கூறுவதும், தாடி வைப்பதை கேவலமான முறையில் விமர்சிப்பதும், தன் பிள்ளை வெளிநாட்டில் சம்பாரித்து அனுப்பும் பணத்தை இஸ்லாம் அனும திக்காத சிர்க் பித்அத் போன்ற காரியங்களில் செலவிட்டு வீண் விரயம் செய்வதாலும், குழந்தைகள் பெற்றோர்கள் மேல் வெறுப்படைகிறார்கள். பெற்றோர்கள் காஃபிர்களாக இருந்தாலும் சிர்க்/பித்அத் செய்தாலும் பிள்ளைகள் அவர்களுக்கு உள்ள கடமைகளை செய்யவேண்டும். நிச்சயமாக வீண் விரயஞ்  செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானே தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:27)

அடுத்து ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் மேல் அதிகம் அன்பு, பாசம் காட்டுவது போல், மகனின் பேரக் குழந்தைகளை விட மகளின் பேரக் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் காட்டி பாரபட்சமாக பெற்றோர்கள் நடந்து கொள்கிறார்கள். மகன் இல்லற சுகம் அனுபவிப்பதை வெறுத்தும், மகள் இல்லற சுகம் பெறும்போது மகிழ்ச்சி யடைகின்றனர். தன் மகனைப் போல் தன் வீட்டுக்கு தாய் வீட்டின் எல்லா சுகத்தையும் தியாகம் செய்துவிட்டு தன் மகனுக்கு சுகம் தர வந்த மருமகளிடம் பெற்றோர்கள் பாரபட்சம் காட்டி நடப்பதாலும் தான் அதிகமான ஆண் குழந்தைகள், தனிக்குடித்தனம் போவதை பார்க்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.

மேலும் எவ்வளவு சம்பாதித்து அனுப்பினாலும் பெற்றோர்களுக்கு போதும் என்ற மனம் இல்லை. மேலும் மேலும் பணம் வேண்டும் என்ற மனமே மேலோங்கி உள்ளது பெற்றோர்களிடத்தில்.

மகள் தன் மருமகனோடு இருந்து விட்டு குளித்தால் சந்தோசப்படும் பெற்றோர்கள் மருமகள் தன் மகனோடு இருந்து விட்டுக் குளித்தால், தினம் தினம் குளிக்க வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். ஹலாலான தன் மனைவியிடம் சந்தோசமான உறவு கொள்ள முடியாத குழந்தைகள் மாமியார் வீட்டோடு (பெற்றோர்களை விட்டு விட்டு) போய் விடுகிறார்கள். குழந்தைகளுக்கு பல வகையில் துன்பம் கொடுப்பதால் தான் குழந்தைகள் பெற்றோர்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதே உண்மை. இந்நிலையை பெற்றோர்கள் மாற்றிக் கொண்டு பாரபட்சம் காட்டாமல் ஆண் குழந்தைகளிடம் பெற் றோர்கள் நடந்து கொண்டால் இன்ஷா அல்லாஹ்! குழந்தைகள் பெற்றோர்களை வெறுக்கமாட்டார்கள். தனி குடித்தனமும் போகமாட்டார்கள். முதியோர்கள் இல்லத்திற்கு உங்களை அனுப்பமாட்டார்கள். (தனிக்குடித்தனம் போவதை இஸ்லாம் கண்டிக்கவில்லை) எனவே பெற்றோர்களும் பிள்ளைகளும் குர்ஆன், ஹதீதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் பெற்றோர்களை கடைசி வரை வைத்து கவனிப்பார்கள். பெற்றோர்களும் ஆண்/பெண் குழந்தைகள் என்று பாரபட்சம் காட்டாமல் இருந்தால் குழந்தைகள் பெற்றோர்களின் தியாகத்தை உணர்ந்து மதித்துசீஎன்று கூட சொல்லாமல் நடக்க உருவாகி விடுவார்கள்.  இன்ஷா அல்லாஹ்.  

அல்லாஹ் கூறுகிறான் : ஆணாயினும், பெண்ணாயினும், மூஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களை செய்தாலும் நிச்சயமாக அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க வாழ்க்கை வாழச் செய்வோம். (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நாம் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:97)

அல்லாஹுத்த ஆலாவின் கட்டளைப்படியும், நபி(ஸல்) வழிகாட்டுதல்படியும் பெற்றோர்களும், குழந்தைகளும் நடந்து ஈருலகில் அல்லாஹ்வின் மகத்தான கூலியை பெற  அல்லாஹ்  அருள்புரிவானாக.  ஆமீன்!

Previous post:

Next post: