நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்!

in 2023 நவம்பர்

தலையங்கம் :

நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்!

அல்லாஹ்  தான்  நாடியோருக்கு

“…நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கை யாளர்களாக  இருந்தால்,  நீங்கள்தாம்  மிக்க  மேலானவர்கள்.”    (3:139)

தற்போதைய இந்தியாவில் நியாயமான தைக்கூட எதிர்த்து முஸ்லிம்கள் குரல் கொடுக்க தயங்குபவர்கள் என்ற நிலையாகி வருகின்றது. நாட்டின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின்  பிரதிநிதித்துவம் கொஞ்ச கொஞ்சமாக  குறைந்து கொண்டு  வருகிறது.

மதச்சார்பற்ற கட்சிகள் என பெருமை பேசுகின்ற கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டும் என்று நினைக்கிறதே தவிர முஸ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வேட்பாளர் தேர்வில் தருவதில்லை. அவர்களின் உரிமைகளை கூட தருவதில்லை. இது தெரிந்தே  செய்யப்படுகிறது.

பெரும்பான்மையான ஊடகங்கள் திட்டமிட்டே முஸ்லிம்களின் உண்மையான செய்திகளை புறக்கணிக்கின்றன. அல்லது உள் தாளில் மூலைகளில் சிறு செய்தியாக வெளி யிடுகின்றன. முஸ்லிம் சமுதாயத்தை குறி வைத்து நடத்தப்படும் வெறுப்புப் பரப்பரப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம்  தந்து பரப்புகின்றன.

வெறுப்பு நிறைந்த திரைப்படங்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் முஸ்லிம் வெறுப்பு நிறைந்த  பேச்சுக்கள்  தினம்  தினம்  வெளியிடப்படுகின்றன.

இவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டே முஸ்லிம்களின் ஒவ்வொரு நாளும்  விடிகிறது.

நமக்காக மட்டுமே நாம் வாழும்போது வாழ்க்கை எளிதாக தோன்றும். ஆனால் பிறர் நலனுக்காகவும் நல்ல சிந்தனைகளோடு வாழும்போது மனித குலத்திற்கு பயனளிக்கும். அத்தகைய உணர்வுள்ளவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். இது தனி வாழ்க்கைக்கும் சரி, பொது வாழ்க்கைக்கும் சரி. ஆனால் அதற்கு தடையாக இருப்பது பயஉணர்வு.

பயம் என்பது முற்றிலும் தவறானது அல்ல. அது இயல்பானதும் கூட. சில நேரங்களில் தேவையானதும் கூட, ஏன் என்றால் பயம் மனிதனுக்கு சுயக் கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும். மேலும் முன்னெச்சரிக்கையாக செயல்பட துணையும் புரியும். கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்கிற ஒழுக்கத்தையும்  தரும்.

ஆனால் பயம் அதிகமானால் ஆபத்தானது. பயத்திலேயே வாழ்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல் அற்றவராக மாறிவிடுவார்கள். இந்த நிலைதான் பெரும்பான்மையான  முஸ்லிம்களிடம்  இருக்கிறது.

பயத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை இஸ்லாம் கற்று தந்துள்ளது. அதற்கு சிறந்த வழி ஆழமான இறை நம்பிக்கை, அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும். அவன்  நாடாமல்  எதுவும்  நடக்காது.

எந்தவொரு அரசியல் கட்சியும் முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர்களால் தீங்கு எதுவும் செய்ய முடியாது.

ஒருபோதும் அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே  சார்ந்திருப்பார்களாக.    அல்குர்ஆன் 9:51

இத்தகைய  நம்பிக்கை  முஸ்லிம்களுக்கு  இருக்க  வேண்டும்.

அரசியல் கட்சிகளில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மையே. நடந்து முடிந்த தேர் தல்கள் கடந்து சென்றவை. அதனை இனி நாம் ஒன்றும் செய்யமுடியாது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் (2024ம் ஆண்டு) மனித குலம் முழுவதும் நலமோடும், வளமோடும் வாழ இதுவரை நடந்தது போல்  முஸ்லிம்கள் பிரிந்து பிரிந்து தனித்தனியாக இல்லாமல் ஒன்று சேர்ந்து ஒரே தலைமையின் கீழ் முஸ்லிம்களை ஆதரிக்கும் கட்சிக்கு பதவிகள் எதுவும் பேரம் பேசாமல் முஸ்லிம்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து வாக்குறுதி மட்டும்  பெற்று  வாக்களித்து  வெற்றிப் பெற   செய்வது  அவசியம். 

இதன்மூலம் முஸ்லிம்களின் ஒன்றிணைந்த வாக்குகள் பலம் பெருகும் முஸ்லிம்களின் ஒற்றுமையில் இறைவனின் பொருத்தமும் கிடைக்கும். முஸ்லிம்களின் வாழ்வில்  அமைதி  திரும்பும். இன்ஷா  அல்லாஹ்.

Previous post:

Next post: