அப்பாவி குழந்தைகளை அநியாயமாக கொல்லும் பிர்அன்கள் 

in 2023 டிசம்பர்

அப்பாவி குழந்தைகளை அநியாயமாக கொல்லும் பிர்அன்கள் 

S.H. அப்துர் ரஹ்மான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பு டையோனுமாகிய அந்த இறைவனின் பெயரால்..

இது இறை நூலாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இறைநூலை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அந்த இறைவனின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டு வருவீராக!)

அந்த இறைவன் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.

இவர்கள் மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அந்த இறைவனின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகின்றார்கள். இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே  இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பிவைத்தோம்; அந்த இறைவன் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான். தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும், ஞானமுடைய வனாகவும்  இருக்கின்றான்.

நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பி வைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின்பால் கொண்டுவாரும், அந்த இறைவனின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராகஎன்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலத்துவோர் எல்லோருக்கும்  படிப்பினைகள்  இருக்கின்றன.

மூஸா தம் சமூகத்தாரியம்; ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அந்த இறைவன்) உங்களைக் காப்பாற்றியபோது, அந்த இறைவன் உங்களுக்குப் புரிந்த அருள்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது  என்று  கூறினார்.

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்என்று உங்களுக்கு இறைவன் அறிவித்ததையும்  (நினைவு கூறுங்கள்).

மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்தபோதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அந்த இறைவன் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்என்றும்  கூறினார்.

உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப்பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அந்த இறைவனைத் தவிர(வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அந்த இறைவன் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த்தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம். அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கின்றீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்  என்று  கூறினார்கள்.

அதற்கு, (இறைவன் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள்வானங்களையும், பூமியையும் படைத்த அந்த இறைவனைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான். (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள்நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்எனக் கூறினார்கள்.

(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை; எனினும் அந்த இறைவன் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அந்த இறைவனின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை; இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அந்த இறைவனின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்என்று கூறினார்கள்.

அந்த இறைவனின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக் கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அந்த இறைவனின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்)

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்என்று கூறினார்கள். அப்போதுநிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு  அறிவித்தான்.

நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்

ஆகவே, (த் தூது)வர்கள் அந்த இறைவனின் உதவியை நாடினார்கள; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான். (இறைநூல் 14:1-15)

பூமியில் பலஹீனப்படுத்தப்பட்டோருக்கு உபகாரம்  செய்யும்  இறைவன்.

இவை தெளிவான இறைநூலின் வசனங்களாகும்.

நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நாம் மூஸாவுடையவும், ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு படித்து காண்பிக்கின்றோம்.

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர் களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை  பலஹீனப்படுத் தினான். அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான். நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில்  ஒருவனாக  இருந்தான்.

ஆயினும் பூமியில் பலஹீனப்படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கி விடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.

இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப் பற்றி எ(வ்வி­யத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).  (இறைநூல் : 28:2-6)

இறைவனிடமே நிச்சயமாக நாம் பாதுகாவல்  தேடவேண்டும்:

மூஸா(அலை) நம்மிடமிருந்து சத்தி யத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது, அவர்கள்இவருடன் இறை நம்பிக்கை கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்என்று கூறினார்கள்; மேலும் இறை மறுப்பாளர்களின் சதி வழிகேட்டிலன்றி  வேறில்லை.

மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்; “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது, இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்  என்று,

மூஸா கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்            இறைநூல் : 40:25-27 

Previous post:

Next post: