அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்!

in 2023 டிசம்பர்

அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்!

அபூ இஸ்ஸத்,  இலங்கை

முஃமின்களைக் காப்பாற்றுவது அல்லாஹ்வின்  கடமையாகும் :

அல்லாஹ் இறை நம்பிக்கை கொண் டோரின் பாதுகாவலன் ஆவான். (3:68) என்று தூயோன் அல்லாஹ் சொல்கின்றான்; அதாவது; தனது தூதர்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் பாதுகாப்பு நல்குகின்றான் என்பதாகும்.  (தஃப்சீர் இப்னு கஸீர் 2:122-124)

முஃமின்களை அதாவது; இறை நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது இது மாண்பு மிக்க அல்லாஹ் தனக்குத் தானே  விதித்துக் கொண்ட  கடமையாகும்.  (தஃப்சீர் இப்னு கஸீர் : 4:571-573) 

அல்லாஹ்  தனக்குத்தானே  விதித்துக் கொண்ட  கடமையாகும் :

இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது. (30:47) என்று உயர்ந்தோன் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இது பெருந்தன்மையோடும் கருணை அடிப்படையிலும் அல் லாஹ் தனக்குத்தானே விதித்துக் கொண்ட கடமையாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:147-149)

மறைமுகமாகப்  பாதுகாப்பளித்து  உதவியும்  புரிவான்:

நிச்சயமாக அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டோரை(த் தீயோரின் தீங்கிலிருந்து) காப்பாற்றுவான். (22:38) இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் தன் அடியார்களில் தன்னையே முழுமையாகச் சார்ந்து தன்னிடமே மீண்டுவருவோரை, தீயோரின் தீங்கை விட்டும், கெட்டவர்களின் சதியை விட்டும் தான் தூர அகற்றுவதாகத் தெரிவிக்கின்றான். மேலும் அவர்களுக்கு மறைமுக மாகப் பாதுகாப்பளித்து உதவியும் புரிவான் (22:38, தஃப்சீர் இப்னு கஸீர் 6:89) மற்று மோர் வசனத்தில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். 

அல்லாஹ் தன் அடியார்களுக்குப் போதுமானவன் இல்லையா?   (39:36) 

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவனே  போதுமானவன்:

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவனே  போதுமானவன்.   (65:3)

இறை நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக(ச் சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர். (எதிரிகளால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இது) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன்மீது விதியாக்கிக் கொண்ட தாக கூறியதாகும். (எனவே) அல்லாஹ்வை விடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (9:111) அதாவது, கொடுத்த வாக்குறுதியை அழகிய முறையில் நிறைவேற்று பவன் அல்லாஹ்வை விட வேறு யாரும் கிடையாது. ஏனெனில் அவன் வாக்கு மீறவே மாட்டான்.  (தஃப்சீர் இப்னு கஸீர் 4:407-410) 

நிச்சயமாக  அல்லாஹ்  வாக்கு  மீறமாட்டான்:

அல்லாஹ்  வாக்கு  மீறமாட்டான். (3:9) 

எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித் ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதி களில் மீறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்). (அல்குர்ஆன் 3:194) அதாவது, உன் தூதர்கள் அறிவித்த உனது வாக்குறுதி நிச்சயமாக நடந்தே தீரும்.   (தஃப்சீர் இப்னு கஸீர் 2:340-349)

நிச்சயமாக அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் (13:31) என்று கூறுகின்றான். அதாவது, தனது தூதர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும், இம்மையிலும், மறுமையிலும், உதவி செய்வேன் என்று தான் வாக்களித்ததை அல்லாஹ் மீறவே மாட்டான்.  (தஃப்சீர் இப்னு கஸீர் 4:898-902) 

(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுகின்றவன் என ஒருபோதும்  நீர்  எண்ணிவிடாதீர்!   (14:47) 

அல்லாஹ் வாக்கு மீறமாட்டான். (39:20) எனப் பல இடங்களில் உறுதி அளித்துள்ளான். 

என்றென்றும்  அவனே  மிகச்  சிறந்த  பாதுகாவலன் :

அல்லாஹ்வை (இறுக)ப் பற்றிக் கொள் ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் அவன் மிகச் சிறந்த உதவி யாளன். (அல்குர்ஆன் :22:78, 2:257, 3:173, 7:155,196, 8:40, 9:51, 12:101, 34:41) அதாவது; அல்லாஹ்வைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவனிடமே உதவி தேடுங்கள், முழுக்க முழுக்க அவனையே சார்ந்திருங்கள். “அவனே உங்களுக்குப் பாதுகாவலன்அதாவது; அவனே உங்களுக்கு உதவி புரிபவன் எதிரிகளிடமிருந்து காத்து உங்களுக்கு உதவி புரிபவன், எதிரிகளிடமிருந்து காத்து உங்களுக்கு வெற்றியளிப்பவன். “பாதுகாவலர்களில் அவனே சிறந்தவன்  (தஃப்சீர் இப்னு கஸீர் : 6:137-143)

அல்லாஹ்வே இறை நம்பிக்கை கொண்டவர்களின்  பாதுகாவலன் :

அல்லாஹ்வே இறை நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ (வழிகெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றன; அவர்களே  நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.   (அல்குர்ஆன்  2:257)

பாதுகாப்பாளர்களில் அவனே மிகச் சிறந்தவன், உதவியாளர்களில் அவனே மிகச் சிறந்தவன் :

அவர்கள் மறுத்துப் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ்வே உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்; (அல்குர்ஆன் 8:40) அதாவது; அந்த இறைமறுப்பாளர்கள் உங்களுடன் விரோதம் பாராட்டுவதிலும் உங்களுடன் போர் புரிவதிலும் நீடித்து நின்றால்அல் லாஹ்வே உங்களுடைய பாதுகாவலன்அதாவது அவனே உங்களின் எசமானும் உங்களுடைய பகைவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவனும் ஆவான். பாதுகாப்பாளர்களில் அவனே மிகச் சிறந்தவன் உதவியாளர்களில் அவனே மிகச் சிறந்தவன் என்பதைப்  புரிந்து கொள்ளுங்கள்.   (தஃப்சீர் இப்னு கஸீர்: 4:99-105)

அவன் தான் எங்களுடைய மிகச் சிறந்த பாதுகாவலன் என்று  (நபியே!)  நீர்  கூறும்:

(நபியே! அவர்களிடம்) “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன் றும்) எங்களை அணுகாது; அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்என்று நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51) அதாவது; நாங்கள் அனைவரும் அல் லாஹ்வின் நாட்டத்திற்கும் திட்டத்திற்கும் கீழே இருக்கிறோம். அவனே எங்கள் பொறுப்பாளன். அதாவது; எங்கள் அதிபதியும் எங்கள் புகலிடமும் அவனே. எனவே இறை நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும். அதாவது; நாங்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறோம். அவனே எங்களுக்குப் போதுமானவன் பொறுப்பாளர்களில் அவன் நல்லவன் என்று கூறுவீராக என இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.    (தஃப்சீர் இப்னு கஸீர் 4:296, 297)

இறைத்தூதர் யூஸுஃப்(அலை) அவர்களின் பிரார்த்தனை :

என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்திருக்கிறாய், கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்றுத் தந்தாய்; வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிரார்த்தித்தார்) (அல்குர்ஆன் 12:101) இது வாய்மையாள ரான யூஸுஃப் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை ஆகும். அன்னாருக்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகள் முழுமையான போது இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். பெற்றோருடனும் சகோதரர்களுடனும் அவரை அல்லாஹ் ஒன்றுசேர்த்தான் அன்னாருக்குக் கண் குளிர்ச்சியை வழங்கினான். நபித்துவத்தையும் அரசாட்சியையும் சேர்த்து வழங்கி அவருக்கு அல்லாஹ் அருள் புரிந்தான்.   (தஃப்சீர் இப்னு கஸீர் 4:821-824)

அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான்  உங்கள்  பாதுகாவலன்:

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப்பெற்றுள்ளது) இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் தொழுகையை நிலைநிறுத் துங்கள் இன்னும் ஜகாத்தைக்  கொடுத்து வாருங்கள்.

அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த உதவியா ளன் . (அல்குர்ஆன் 22:78) அதாவது; அல்லாஹ்வைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவனிடமே உதவி தேடுங்கள் முழுக்க முழுக்க அவனையே சார்ந்திருங்கள். “அவனே உங்களுக்குப் பாதுகாவலன்அதாவது; அவனே உங்களுக்கு உதவி புரிபவன் எதிரிகளிடமிருந்து காத்து உங்களுக்கு வெற்றியளிப்பவன். “பாதுகாவலர்களில் அவனே சிறந்தவன்எதிரிகளை விட்டும் காத்து உதவி புரிவோரில் அவனே மிகச் சிறந்தவன்.   (தஃப்சீர் இப்னு கஸீர்  6:137-143)

Previous post:

Next post: