இப்லீஸை வழி கெடுத்தது அல்லாஹ்வா?

in 2023 டிசம்பர்

குர்ஆனும்மொழி பெயர்ப்பும்…. (2)

இப்லீஸை வழி கெடுத்தது அல்லாஹ்வா?

அபூ அஹமத், ஒரத்தநாடு

ஏதேனும் தொழில் நிறுவனத்தில் வேலை செய்பவர் அந்த நிறுவனத்தின் சட்டங்களுக்கு மாற்றமாக ஒரு பெரும் தவறை செய்துவிட்டால் அந்த நிறுவனத்தின்  உரிமையாளர் மன்னிக்க முடியாத தவறு செய்தவரை பார்த்து இனி உனக்கு இங்கு வேலை இல்லை, வெளியேறு  என்றுதான்  கூறுவார்.  இதுவே  எதார்த்தம்.

அவ்வாறு வெளியேற்றிய உரிமையாளரைப் பார்த்து நான் தவறு செய்ததற்கு காரணம் நீங்கதான். நான் இல்லை என்று கூறினால் யாராவது இதை சரி எனக்  கூறுவார்களா?

அதுபோல தவறு செய்த இப்லீஸைப் பார்த்து (கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்ததால்) சுவனத்திலிருந்து  அல்லாஹ்  வெளியேற்றினான்.

ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று நாம் வானவரிடம் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். (அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தனர்) ஆனால் இப்லீஸ் மறுத்துப் பெருமையடித்தான், அல்லாஹ்வின் கட்டளையை மீறுபவனாக ஆகி விட்டான். அல்குர்ஆன் 2:34

தன்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்த இப்லீஸையும், கட்டளையை மீறிய ஆதம், ஹவ்வா  ஆகிய  மூவரையும்  சுவனத்திலிருந்து  வெளியேற்றினான்.

ஆதம், ஹவ்வா இருவரும் தங்களை வெளியேற்றியதற்கு கைசேதப்பட்டார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் தன்னை வெளியேற்றிய அல்லாஹ்வைப் பார்த்து சொன்னதாக குர்ஆனில் கீழ்க்கண்ட வாறு  மொழி பெயர்த்துள்ளார்கள்.

“”அவன் கூறினான் : என் இரட்சகனே! திண்ணமாக என்னை நீ வழிகெட்டவனாக ஆக்கியதால் இப்பூமியிலுள்ள வற்றை அவர்களுக்கு நான் அழகுபடுத்தி அவர்களுள் உன் தூய்மையான வரை  தவிர  மற்றவர்கள்  அனைவரையும்  வழிகெடுப்பேன்  அல்குர்ஆன் 15:39,40 

(ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத், அரபி கல்லூரி, வேலூர்)

மேற்கண்ட மொழிப் பெயர்ப்பையும் இதர மொழிப் பெயர்ப்பையும் இங்கே சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். 

அவைகள் : 

1, ஜான் ட்ரஸ்ட் =

இப்லீஸ், என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால்….”

2. ணூய்வீ  =

என் இறைவனே! நீ என்னை வழி பிறழச்  செய்ததால்….”

3. திரியயம் பிரிண்டர்ஸ் =

என்னுடைய  ரப்பே:  நீ  என்னை  வழி  தவறச்  செய்ததின்  மீது  ஆணையாக

4. ஸலாமத்  பதிப்பகம் =

என்னுடைய  இறைவா!  நீ  என்னை  வழிதவறச்  செய்ததன்  மீது  சத்தியமாக…”

5. ன்Pமூதி  =   மூன்  பப்ளிசர்ஸ் :

என்  இறைவா!  என்னை  நீ  வழிகேட்டில்  விட்டதால்…”

6. அப்துல் ஹமீது பாக்கவி =

(இப்லீஸ், இறைவனை நோக்கி) “”நீ என்னை  வழிகேட்டில் விட்டுவிட்டதால்…”

மேற்கண்ட குர்ஆன் மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழி பெயர்த்ததில் இப்லீஸ், அல்லாஹ்வை குற்றம் சொல்வதைப் போல் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

மேற்கண்டவாறு மொழி பெயர்த்தது சரி என்றால் வழிகெடுத்தது அல்லாஹ்வாக இருப்பதால் எப்படி வெளியேற்ற முடியும்? மற்றும் தவறு செய்தவர்களை  எப்படி  தண்டிக்க முடியும்?

குர்ஆனின் புனித தன்மையை காப்பாற்றுவதாக நினைத்து ஏனைய நூல்களை மொழிப் பெயர்ப்பு செய்வது போல் வார்த்தைக்கு வார்த்தை குர்ஆனை மொழி பெயர்ப்பு செய்கின்றார்கள்.

அதாவது,

மனிதன் தன் காலில் முள் குத்திவிட்டால்முள் குத்திவிட்டதுஎன்று முள்ளின் மீது பழி சுமத்துவான். அதுபோலத் தான் இப்லீஸும் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் அல்லாஹ்வின் மீது பழி சுமத்தியதை சரி காண்பதாக மொழி பெயர்ப்பில் தவறு செய்கின்றார்கள்.

அல்லாஹ்  ஒருபோதும்  இப்லீஸை  வழி கெடுக்கவில்லை  என்பதே  உண்மை.

எவ்வாறு  என்றால்,

நீ என்னை வழிகெடுத்தாய்என்பதற்கு பதிலாக நான் வழிகேட்டில் செல்ல என்னை நீ விட்டுவிட்டதால் என்று மொழி பெயர்த்திருந்தால் பொருத்தமாக  இருந்திருக்கும்.

இப்லீஸ் செய்த தவறுக்கு அல்லாஹ் காரணமில்லை. ஏனெனில், 

உனக்கு நான் ஏவியபோது (கட்டளையிட்டபோது) நீ பணியாமலிருக்கும்படி உன்னைத் தடுத்தது  எது?  என்று  அல்லாஹ்  கேட்டான்.

நான் அவரைவிட (ஆதமை விட) மேலானவன். என்னை நெருப்பால் படைத்தாய், அவரைக் களிமண்ணால் படைத்தாய்என்று இப்லீஸ் (பெருமையாக) கூறினான்.   அல்குர்ஆன் 7:12

மேற்கண்ட வசனப்படி தவறு செய் தது இப்லீஸ் தானே தவிர அல்லாஹ் இல்லை என்பது தெளிவாக  தெரிகிறது.

மேலும்  அல்லாஹ்வின்  நியதி  என்னவென்றால்,

“….உங்கள் இறைவன் கிருபைச் செய்வதை தன்மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்துவிட்டு அதற்கு பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக்கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்)மன்னிப்பவனாகவும், மிக்க  கருணையுடையவனாகவும்  இருக்கின்றான்.’      (அல்குர்ஆன் : 6:54)

Previous post:

Next post: