இறைவன் இவ்வுலகை கண்காணிக்கிறானா?

in 2023 டிசம்பர்

இறைவன் இவ்வுலகை கண்காணிக்கிறானா?

A.N. திருச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்  ஒருவன்,

அல்லாஹ்  தேவைகள்  அற்றவன்,

அல்லாஹ்  சோர்வு  அற்றவன்,

அல்லாஹ்  தூக்கம்  இல்லாதவன்,

அல்லாஹ்  மறதி  இல்லாதவன்,

அல்லாஹ் வீண் விளையாட்டுகளில் ஈடுபடாதவன்,

அல்லாஹ் மனிதனை மீண்டும் உயிர் கொடுத்து  எழுப்புபவன்,

அல்லாஹ் வானம், பூமி, கடல், நெருப்பு, காற்று, மனிதன், ஜின், மலக்குகள், மலைகள், சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதர கோள்கள், விலங்கினங்கள், இதர உயிரிணங்கள், தாவரங்கள் இன்னும் கண் ணுக்கு தெரிந்தது, தெரியாதது இவைகள் அனைத்தையும்  படைத்தவன்.

மேற்கண்ட தன்மைகள் கொண்டவன் தான் இறைவனாக இருக்க முடியும் என்பதை உலக முஸ்லிம்கள் எவரும் மறுப்பதில்லை. இவ்வளவு சிறப்புக்குரிய ஒருவன் இறைவன் மட்டுமே என்று நம்பிக்கையும்  வைத்துள்ளார்கள்.

மேலும் தான் தொழுவதையும், நோன்பு வைப்பதையும், தான தர்மங்கள் செய்வதையும் இன்னும் பல நன்மையான காரியங்கள் செய்வதையும் இறைவன் கண் காணிக்கின்றான் (பார்க்கின்றான்) என்று நம்புகின்றார்கள்.

ஆனால் மேற்கண்ட நன்மையான காரி யங்களை செய்பவர்களும்/செய்யாதவர் களும் தான் தவறு செய்யும்பொழுது மட்டும் இறைவன் பார்க்கவில்லை என்று நினைக்கிறார்கள்?

என்னவொரு அபத்தமான நம்பிக்கை; நன்மை செய்யும்பொழுது பார்க்கின்ற இறைவன் தீமை செய்யும்பொழுது பார்ப் பதில்லை (கண்காணிக்கவில்லை) என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறிவீனம், இந்த அறிவீனம்தான் அனைத்து தவறுகளுக் கும்  மூலக்காரணம்.

மனிதன் என்னை ஏமாற்றவில்லை; அவன் தன்னை தானே ஏமாற்றிக் கொள் கிறான்  என்பதாக  அல்லாஹ்  கூறுகிறான்.

பூமியிலும், வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தன் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ் வொரு நிமிடமும் அவன் அதை கண் காணித்துக்  கொண்டே  இருக்கிறான்.’ அல்குர்ஆன் 55:29

அதாவது ஒவ்வொரு நிமிடமும் வானம், பூமி அதில் உள்ளவைகள் அவனது கட்டளைப்படி செயல்படுகின்றதா என் பதை தொடர்ந்து கண்காணிப்பவனாக இருக்கிறான். அது மட்டுமல்ல அவனுடைய செயல்பாடுகள் ஒரே நிலையில் இருப்ப தில்லை, ஒவ்வொரு நிமிடமும் அதன் நிலைமைகளை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே  இருக்கின்றான்.

எவ்வாறு எனில் என்னைத் தவிர கீழ்க் கண்ட ஐந்து வி­யங்களின் முழுமையான ஞானம் வேறு எவருக்கும்/எதற்கும் தெரி யாது என்பதாக அல்லாஹ் தன் வழிகாட் டும் நூலில் (குர்ஆனில்) சவால் விடுகிறான்.  (குர்ஆன் 31:34)

அவைகள் :

1. இறுதித் தீர்ப்பு நாள் (உலக முடிவு நாள்) எப்பொழுது  என்பது.

2. அவனே மழையைப்  பொழிய வைக்கிறான்.

3. கருவறையில் உள்ளது என்ன என்பது தான் மட்டுமே அறிவேன் என்கிறான்.

4. நாளைய தினம் என்ன நடக்கும் என்பது தான் மட்டுமே அறிவேன் என்கிறான்.

5. எங்கே? எப்படி? எப்பொழுது? யார் யாரெல்லாம் மரணம் அடைவார்கள் என் பதும்  நானே  அறிவேன்.

விளக்கம் :

1. இறுதி நாள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதன் நாட் கள் படிப்படியாக நெருங்கி கொண்டே யிருக்கிறது. இறைவன் அதனை அறிந்த தாலும், கண்காணிப்பவனாக இருப்பதாலும் தான் அந்த நாள் தனக்கு மட்டுமே தெரியும்  என  கூறுகிறான்.

2. அவனே மழையைப் பொழிய வைக்கிறான் என்பதற்கு நமது வானிலை அறிக்கையே  சான்று.

உதாரணமாக,

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழை யும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கறது. அதன் காரணமாக புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் பெரும்பாலான இடங் களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

(மக்களே! இதற்கு பேர் முன் அறிவிப்பாம்; இதற்கு ஒரு தனி துறை, அதற்கு பெயர்: (னிசிவீசிநுயூநுஸிநுறூணூளீபுஸி ளீசிஹிவீசியூ) வானிலை ஆய்வு மையம். இதற்காக கோடிக்கணக்கன பணம்  செலவு  செய்யப் படுகிறது)

3. கருவறையில்  உள்ளது :

அதாவது ஆணுடைய உயிர் அணுக் களும், பெண்ணுடைய உயிர் அணுக்களும் ஒன்று சேருமா? சேராதா? என்பது முதல் அந்த உயிரின் இறுதி நாள் வரை நானே அறிவேன்  என்கிறான்.

(நான்கு மாதத்திற்கு பிறகே ஸ்கேன் மூலம் பார்த்ததை பெரிய கண்டுபிடிப்பாக மனிதன் பெருமைப்படுகிறான். அவ்வளவே மனித  அறிவு)

4. நாளைய  தினம்  என்ன  நடக்கும்?

இதற்கான  சமீபத்திய  உதாரணம் :

அக்டோபர் மாதம் 7ம் தேதி என்ன நடக்கும் என்பது இஸ்ரேலுக்கு தெரிய வில்லை, தன்னை உலக அறிவாளி என்றும், உலகிலேயே அதி நவீன உளவுதுறையும், ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன என்று பெருமை பேசியவர்களின் இழிநிலையை அல்லாஹ் உலகத்திற்கு பாடமாக காட்டி யுள்ளான்.

5. மரணம்  (இவைகள் உதாரணமே)

A. ஜெப கூட்டங்கள் பல நடத்தி கோடி கோடியாக சம்பாதித்து பலரின் நோயைப் போக்குவதாக கூறிய பால் தினகரன் பல நாள் மருத்துவமனையில் இருந்து (எப்போது தன் மரணம் என்று தெரியாமல்) உயிரை  விட்டார்.

B. உலகமே என் கைக்குள் என்று சொல்லி கையை சுழற்றி விபூதியும், வாயிலி ருந்து லிங்கமும் எடுத்த புட்டபர்த்தி சாய்பாபா சுவாசக் கோளாறால் தன் மரணம் எங்கே? எப்போது என்று தெரியாமல் மருத்துவ மனையில் உயிரிழந்தார். (முன் கூட்டியே  தெரியவில்லை)

C. நான் கடவுளின் தூதுவர், எனக்கு கடவுளிடமிருந்து (அல்லாஹ்விடமிருந்து) நேரடியாக செய்தி (வஹீ) வருகிறது எனச் சொன்ன மிர்சாகுலாம் என்பவர் தன் மரணம் எப்போ என்று தெரியாமல் கடைசி யில் தலைகுப்புற கீழே விழுந்து இறந்து போனார்.

எல்லா மனிதரையும் போல பிறந்தார் கள், உண்டார்கள், உறங்கினார்கள், அதே போல் எல்லா மனிதனையும் போல இறந்து போனார்கள் இறந்துபோனது ஆச்சரிய மான வி­யம் அல்ல! எங்கே? எப்படி என்பது  இவர்களுக்கும்  தெரியவில்லை.

இறப்பு என்ற ஒன்று வந்து இவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி தானே (மரணத்தை) அறிவேன் என்பதை அல்லாஹ்  நிரூபித்துவிட்டான்.

ஆக இவ்வுலகத்தை நேற்றும், இன்றும், நாளையும் இறைவன் கண்காணிக்கின்றான் என்பதில்  எந்த  சந்தேகமும்  இல்லை.

Previous post:

Next post: