முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்-

in 2023 டிசம்பர்

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து

எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர்,  இலங்கை.

நவம்பர்  மாத தொடர்ச்சி…..

இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களும் முஸ்லிம்களில் ஒருவராக இருக்கவேண்டும் என்பதாகவே அல்லாஹ்வால்  ஏவப்பட்டார்கள்:

ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்துவிட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்க வில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) “முஸ்லிம்களில்ஒருவனாக இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன் (என்று கூறினார்) (அல்குர்ஆன் 10:72) அதாவது, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ள இஸ்லாத்திற்கே நான் முற்றிலும் அடிபணிவேன் முஸ்லிம்தான் இஸ்லாம்தான் ஆரம்பம் முதல் இறுதிவரை வந்த எல்லா நபிமார்களின் மார்க்கம் ஆகும். (தஃப்சீர் இப்னு கஸீர்  4:537-540)  அவ்வாறே;

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனு ஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும்  நாம்  வஹீ  அறிவித்தோம். 

இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன் 4:163) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது. யூதர்களான சுகைன் மற்றும் அதீ பின் ஸைத் ஆகிய இருவரும்முஹம் மதே மூஸாவுக்குப் பின்னர் அல்லாஹ் எந்த மனிதருக்கும் எந்த வஹீயும் அருளியதாக எங்களுக்குத் தெரியவில்லைஎன்றனர். அப்போதுதான் இந்த (4:163-165) ஆகிய வசனங்களை அல்லாஹ் அருளினான். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 2:825-831) மேலும்,

எந்த தீனை (மார்க்கத்தை முஸ்லிம்களே) உங்களுக்கு அவன் வகுத்துத் தந்திருக்கிறான் எனில் எந்த தீனைக் கொண்டு நூஹிற்கு அவன் அறிவுறுத்தினானோ (நபியே! வஹி எனும்) இறைச் செய்தியின் மூலம் எந்த தீனை நாம் உமக்கு அறிவித்து இருக்கிறோமோ. மேலும் இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் எந்த தீனைக் கொண்டு அறிவுறுத்தினோமோ அந்த தீனைத்தான் உங்களுக்கு வகுத்துத் தந்திருக்கிறான் (அதாவது) அந்த தீனை நிலைநாட்டுங்கள். அதில் பிளவுபட்டு விடாதீர்கள் (எனும் கட்டளையுடன்) இந்த இணைவைப்பாளர்களை எதன் பக்கம் நீர் அழைக்கிறீரோ அது அவர்களுக்குப் பாரமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ் தான் நாடுவோரையே அதற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான் (தன்னை நோக்கி முஸ்லிமாகத்) திரும்பக் கூடியவர்களுக்கு அதன் பக்கம் வழிகாட்டுகின்றான். (அல்குர்ஆன் 42:13) ஆக, “இறைத்தூதர்கள் அனைவரும் போதித்தது ஓரிறைக்  கொள்கையைத்தான்  எனவே;

இதுதான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இவ்வேதத்திலும் அவ்வாறே  கூறப்பெற்றுள்ளது:

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். வழிகாட்டும் நூலிலும் (அவ்வாறே கூறப்பெற்றுள்ளது) இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் 22:78)  இதில்அவனேஎன்பதைக் குறிக்கஹுவஎனும் பிரதிப் பெயர்ச் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது யாரைக் குறிக்கிறது என்பது தொடர்பாக; “இது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வையே குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், முஜா ஹித், அதாஉ, ளஹ்ஹாக், சுத்தீ, கத்தாதா, முஹாத்தில்(ரஹ்) ஆகியோரும் பொருள் கூறியுள்ளார்கள். இதன்படியே இவ்வசனத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட் டுள்ளது. (தஃப்சீர் இப்னு கஸீர்: 6:137-143) இதன்படி;

இறைத்தூதர்  இப்ராஹீம்(அலை)  அவர்கள்  முஸ்லிமாகவே  இருந்தார்கள்:

இப்ராஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த)  நேர்மையான முஸ்லிமாகவே இருந்தார் அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. (அல்குர்ஆன் 3:67) அதாவது; இணை வைப்பிலிருந்து முற்றிலுமாக விலகி இறை நம்பிக்கையை மனதில் கொண்டவராக (ஹனீஃப் ஆக) இருந்தார் இணை வைப்போரில் ஒருவராக அவர் ஒருபோதும் இருந்ததில்லை.   (தஃப்சீர் இப்னு கஸீர் 2:122-124) மாறாக,

இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் முஸ்லிமாகவே சரணடைந்தார்கள் : 

இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் (என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகமுஸ்லிமாகச்) சரணடையும்என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சர ணடைந்தேன்என்று கூறினார். (அல்குர் ஆன் 2:131) அதாவது; தனக்குக் கட்டுப்பட்டு, அடிபணிந்து நடக்குமாறும், தனது விசயத்தில் மனத்தூய்மையைப் பேணு மாறும் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான் விதிப்படியும் மார்க்க அடிப்படையிலும் அந்தக் கட்டளையை அவர்கள் பூரணமாக நிறைவேற்றினார்கள்.  (தஃப்சீர் இப்னு கஸீர் : 1:450-456)

இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே உபதேசதம் செய்தார்) கூறினார். “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக  அன்றி  மரணிக்காதீர்கள்.     (அல்குர்ஆன் 2:132) 

அதாவது; வாழும் காலத்தில் நல்லறங்கள் செய்யுங்கள் அதைக் கைவிடாதீர்கள். அப்போதுதான் அந்த நல்ல நிலையிலேயே மரணமடையும் பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான்.  (தஃப்சீர் இப்னு கஸீர் 1:450-456) மேலும்,

இப்ராஹீம்(அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள் :

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக ஆக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)  ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.’ (அல்குர்ஆன் 2:128) அதாவது, எங்களை உனது கட்டளைக்கு முற்றாகக் கட்டுப்படு வோராகமுஸ்லிம்களாகஉனக்குக் கீழ்ப்படிந்தோராக ஆக்குவாயாக! வணக்க வழிபாட்டிலும், கீழ்படிதலிலும், உன்னுடன் உன்னையல்லாத வேறு யாரையும் இணை யாக்கமாட்டோம் என்று கூறினார்கள். இப்னு ஜரீர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். இக்ரிமா(ரஹ்) அவர்கள்  கூறியதாவது:

இப்ராஹீம்(அலை) அவர்களும் இஸ்மாயீல்(அலை) அவர்களும் செய்த இந்தப் பிரார்த்தனையை ஏற்பதாக அல்லாஹ் அறிவித்தான். (தஃப்சீர் இப்னு கஸீர் 1:420-445) அதனால்தான்;

நாங்களே இப்ராஹீம் நபியின் சந்ததிகள், பூர்வீக குடிமக்கள், முஸ்லிம்கள் என்றேமக்கா  குறைசயர்கள்  கூறினார்கள்:

நாங்கள் இறைத்தூதரான மூஸா நபியையும்; அவர்களுக்கு அருளப்பெற்றதவ்ராத்வேதத்தையும் மட்டுமே பின்பற்றும்முஸ்லிம்கள்என்று நம்பியவர்களாக இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன்முபாஹலாஎனும் அழிவுச் சத்தியம் வரைக்கும் போகின்ற அளவுக்கு உறுதியாக யூதர்கள் இருந்தார்கள். (15:90, புகாரி:5, பக்கம் 252, பாடம் ஒன்றின் சிறுகுறிப்பு இரண்டாவது, பக்கம் : 388, பாடம்  5, 4706, 4380, தஃப்சீர் இப்னு கஸீர் 2:169) நபி மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றும்முஸ்லிம்களாக  நாங்கள் இருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருந்த யூதர்களுக்கு மறுப்பாக;

நாங்கள் ஈஸா நபியையும் அவர்களின்இஞ்ஜீல்வேதத்தையும் பின்பற்றும் முஸ்லிம்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறி வந்தார்கள்:

நாங்கள் இறைத்தூதரான ஈஸா நபியையும் அவர்களுக்கு அருளப்பெற்றஇஞ்ஜீல்வேதத்தையும் மட்டுமே நம்பி ஏற்றுப் பின்பற்றும்முஸ்லிம்கள்என்று கிறிஸ்தவர்களும், அவர்களது பாதிரிமார்களும் நபி(ஸல்) அவர்களுடன் விவாதம் செய்துமுபாஹலாஎனும் அழிவுச் சத்தியம் வரைக்கும் போகின்ற அளவுக்கு உறுதியா கக் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். (புகாரி 5, பக்கம் 15, பாடம் 73இன் சிறு குறிப்பு 17 ஆவது, பக்கம் 388, பாடம் 5, 4380, 3745, 4706)

கிறிஸ்தவ பாதிரிமார்களும் நாங்கள்முஸ் லிம்கள்என்றே  அவர்கள்  கூறினார்கள்:

ஒருமுறை தம்மிடம் வந்த சில கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள். தம்மை நோக்கி வந்த அவர்களிடம் நீங்கள்முஸ்லிம்களாகஆகிவிடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அந்த கிறிஸ்தவர்கள் உமது வருகைக்கு முன்னரே நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு  முஸ்லிம்களாகி விட்டோம் என்று பதிலளித்தார்கள். (2:135, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:459, 2:113, அத்தீனுல் இஸ்லாம் பாகம் 4, பக்கம் 24, அர்ரஹீக் அல் மக்தூம் : 521, புகாரி 5, பக்கம்: 252, பாடம் ஒன்றின் சிறு குறிப்பு முதலாவது) இவ்வாறே;

யூதர்களும் கிறிஸ்தவர்களும் நாங்கள் தான்  முஸ்லிம்கள்  என்றார்கள் :

யூதர்களும், கிறிஸ்தவர்களும் நாங்கள் தான்முஸ்லிம்கள்எங்கள் வழிக்கு நீங்கள் வாருங்கள் என்று சொன்னார்கள். (2:135, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:459) அதையே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமும்;

முன்னாள் கிறிஸ்தவராக இருந்த அதீ இப்னு ஹாத்திமும்; தாம் ஒருமுஸ்லிம்என்றே கூறினார் :

ஹிஜ்ரி ஒன்பது ரபீவுல் அவ்வல் மாதத்தில் அலி(ரழி) அவர்களின் தலைமையின் கீழ் 150 வீரர்களுடனும், நூறு ஒட்டகங்களுடனும் ஐம்பது குதிரைகளுடனும், “அதீ கூட்டத்தினரை நோக்கி அனுப்பிவைத்தார்கள். வந்துசேரவேண்டிய இடத்தை அடைந்தவுடன் அக்கூட்டத்தினரதுஃபுல்ஸ்சிலையைத் தகர்த்தெறிந்து விட்டு அங்கிருந்த கஜானாவையும் கைப்பற்றியதுடன், “ஹாத்தும்குடும்பத்தினரிடம் சண்டையிட்டு நிறையக் கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு தய்யி கிளையினரின் தலைவராக இருந்தஅதீ இப்னு ஹாத்திம் தப்பித்து ஷாம் (எனும் சிரியா) நாட்டை நோக்கி ஓட்டம் பிடித்தார். கைதியானவர்களில் இவரின் சகோதரியும் இருந்தார். அவரது முயற்சியால் தப்பியோடியஅதீ இப்னு ஹாத்திமைமதீனாவிற்கு அழைத்துவந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு  முன்னால்  அமர்ந்தவுடன், 

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள்‘ “கிறிஸ்தவர்கள் வழி தவறியவர் கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனைக் கேட்ட முன்னாள் கிறிஸ்தவராகவும், நட்சத்திரங்களை வணங்குபவராகவும் இருந்தஅதீ இப்னு ஹாத்திம்‘ “நான் இணை வைப்பிலிருந்து முற்றிலுமாக விலகியமுஸ்லிமாகஇருக்கிறேன் என்றுதான் கூறினார். ஆனாலும் அந்நேரம் அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அது பின்னர்தான் நடந்தது அவர் இஸ்லாத்தில் இணைந்தார். (அறிவிப்பவர் : அதீ இப்னு ஹாத் திம்(ரழி), புகாரி:3595, முஸ்னது அஹ்மது, ஜாதுல் மஆது, அர்ரஹீக் அல்மக்தூம் : 521)

Previous post:

Next post: