அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்!

in 2024 பிப்ரவரி

அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்!

அபூ இஸ்ஸத், இலங்கை

ஜனவரி  24  தொடர்ச்சி….

நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே:

நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே அவனே (இந்)நெறிநூலை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (அல்குர்ஆன் 7:196) என்று இறுதி இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது; அல்லாஹ்வே எனது பொறுப் பாளன் அவனே எனக்குப் போதுமானவன்; அவனே எனக்கு உதவியாளன்; அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்; அவனிடமே நான் அபயம் தேடுகிறேன்; அவனே எனக்கு இம்மையிலும் மறுமை யிலும் சிறந்த பாதுகாவலன் ஆவான். அவனே எனக்குப் பின் உள்ள ஒவ்வொரு நல்லடியார்களுக்கும் பாதுகாவலன் ஆவான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 3:991-997) இது போன்றே இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது துணைவியாரும்; “இறை நம்பிக்கையாளர்களின்  அன்னையுமாகிய; 

ஆயிஷா(ரழி)  அவர்களும்  கூறினார்கள் :

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களும் கலந்துகொண்ட பனூ முஸ்தல்க் போர் முடிந்து மதீனாவுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது மதீனாவுக்கு அருகில் உள்ளபைதாஅல்லதுமாஅத்துல் ஜைஷ்எனுமிடத்தில் ஏற்பட்ட கசப்பான அசம்பா விதத்தின் காரணமாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது நயவஞ்சகர்களின் தலை வன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மற்றும் முஸ்லிம்களில் ஹஸ்ஸான் பின் ஸாபித்(ரழி), மிஸ்தஹ் பின் உஸாஸா (ரழி), ஹம்னா பின்த் ஜஹ்ஸ்(ரழி), ஹம்னா (ரழி) ஆகியோர் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீது திட்டமிட்டபடி அவதூறு பரப்பிய தனால், 

 • மதீனாவுக்கு வந்தடைந்ததும் ஒரு மாத காலமாக  நோயுற்றார்கள்.
 • நோய்வாய்ப்பட்டிருந்த போது நோயு றும் காலத்தில் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களிடம் இருந்து காணமுடியவில்லை அதனால்;
 • அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது போக்கில் அன்னை ஆயிஷா(ரழி) அவர் களுக்கு  சந்தேகம்  ஏற்பட்டது.
 • ஒரு மாதத்திற்கும் பிறகுதான்மிஸ்தஹ்‘ (ரழி) அவர்களின் தாயாரான உம்முமிஸ்தஹ்‘(ரழி) அவர்கள் மூலமாகத் தம்மைக் குறித்து ஊரில் உலவும் அபாண்டம் குறித்து சொன்ன தகவலறிந்து மேலும் நோய்  அதிகரித்துவிட்டது.
 • தாய் வீட்டுக்குச் சென்று தன்னைக் குறித்த அவதூறு வதந்தி பற்றி அறிந்தவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி  கோரினார்கள்.
 • தாயிடம் செய்தி அறிந்து இரவு பகலாக தாய்வீட்டில் இருந்தவாறே அழு தார்கள்.
 • அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தன்னை பிரித்து விடுவது குறித்து அலீ பின் அபீதாலிப்(ரழி), உஸாமா பின் ஸைத்(ரழி) அவர்களிடம் ஆலோசனை கேட்கின்றார் கள்.
 • அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பணிப் பெண்ணானபரீரா‘(ரழி) அவர்களையும் அழைத்து அன்னை ஆயிஷா(ரழி) குறித்து  விசாரிக்கின்றார்கள்.
 • அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு, அழகிலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அன்பிலும் என்றும் போட்டியாக இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது மற்றுமொரு மனை வியரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடமும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுடைய கற்பொழுக்கம் குறித்து  விசாரிக்கின்றார்கள்.
 • தமது சகோதரி ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களுக்காக அவர்களின் சகோதரி ஹம்னா(ரழி) அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு எதிராக அவதூறு பேசிக்கொண்டு அன்னை ஆயிஷா(ரழி)  அவர்களுடன்  போரிடலானார்.
 • இஸ்லாத்தின் பின்னர் ஒற்றுமையாக இருந்தஅவ்ஸ்‘ “கஸ்ரஜ்ஆகிய இரு குலத்தாரும் இது விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டார் கள்.
 • தாய் வீட்டில் இரண்டு நாட்களாக உறக்கமும் வரவில்லை, கண்ணீரும் நிற்கவில்லை. ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள்.
 • உண்மையைத் தீர அறிந்து கொள்வதற்கான வஹியும் நின்றுபோன காலமாக அது இருந்தது.
 • பலவீனமானவளானதனது விசயம் குறித்து வானத்திலிருந்து வஹி வரும் என்ற நம்பிக்கை அற்றுப் போய் பேசா மடந்தையானார்கள்.
 • தாய் வீட்டிற்கு வந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு பலவாறாக எனக்குச் செய்திகள் வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே  திரும்பிவிடு  என்று  கூறினார்கள்.
 • அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதற்கு; தனது சார்பாகப் பதில் கூறுங்கள் என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் வேண்டிக் கொண்டபோது அதற்காகத் தந்தை அபூபக்கர்(ரழி) அவர்களும் பதில்கூறத்  தயாராகவில்லை.
 • தாயார் உம்மு ரூமானும் பதில் கூறத்  தயாராகவில்லை. அப்போது, “நானோ வயது குறைந்த இளம் பெண் குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள் இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்த (அவதூறு)ச் செய்தியை  நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்து போய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன். ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறி னால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ் வுக்குத் தெரியும். அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், நான் குற்ற மற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரி யும். நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று  ஏற்று)  என்னை  நம்பிவிடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யஃகூப் (அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன் (அதாவது) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் வி­யத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும். (12:18) என்று (யஃகூப்(அலை) அவர்கள் கூறியதையே) நபியவர்களிடமும் சொன்னார்கள். பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்போது தான் குற்ற மற்றவள் என்பதையும், தான் குற்றமற்றவள் என நிச்சயம் அல்லாஹ்  அறிவிப்பான் என் பதையும் நன்கறிந்திருந்தார்கள். ஆயினும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஓதப்படு கின்ற வஹீயை நெறிநூலில் தனது விசயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று அவர்கள் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் தனது (விசயத்தில்)தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு தான் உயர்ந்தவள் அல்லள் என்பதைத் தன் மனத்தில் தன்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் தன்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே அவர்கள்  நினைத்திருந்தார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக!(த் தங்களது வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) அருளத் தொடங்கிவிட்டான். உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும், அவர்களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்று வழியத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு அருளப் பெற்ற இறைவசனத்தின் பாரத்தினால் தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழி யுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, “ஆயிஷா!  நற்செய்தி  பெற்றுக்கொள்.

அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான் என்பதாகவே இருந்தது. உடனே அவர்களது தாயார், அவர்களிடம்அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் எழுந்து செல்என்று கூறினார் கள்.  அதற்கு,

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் களிடம் நான் எழுந்து செல்லமாட்டேன். என்னைக் குற்றமற்றவள் என அறிவித்த அல்லாஹ்வையே புகழ்(ந்து அவனுக்கு நான் நன்றி செலுத்து)வேன்என்று சொன்னார்கள்.

அப்போது தான் ஏழு வானங்களையும் கடந்து; ஆயிஷாவின் மீது அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான் என்று தொடங்கும் (24:11-20) வரையான பத்து வசனங்களை அருளினான். இதன்மூலம்பலவீனமானபேதைப் பெண்ணின் களங்கத்தை ஏக இறைவன் ஏழு வானங்களையும் கடந்து துடைத்தெறிந்தான். அழியாத ஏட் டிலும் எழுதச் செய்தான். (24:11-20, அன்னை ஆயிஷா(ரழி), இப்னு ஷாஹிப் அஸ்ஸுஹ்ரி (ரஹ்), உர்வா பின் ஸுபைர்(ரஹ்), சயீத் பின் முஸய்யப்(ரஹ்),அல்கமா பின் வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத்(ரஹ்), (புகாரி: 4141-4146, 4607, 4608, 4691, 4749 4757, 5164, 5882, 334, 336, 3388, 3672, 3773, 2661, 4025, 2879, 6662, 6679, 6844, 4845, 7500, 7545, 4583, 7369, 7370, முஸ்லிம் : 5349) அதுபோன்றே;

உஹுதுப்  போரில்  அல்லாஹ்வே  பாதுகாவலனாக   இருந்தான் :

அப்போது (போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (திரும்பி ஓடி விடலாமா) என்று எண்ணினார்கள். ஆனால் அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான். ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும். (அல்குர்ஆன்: 3:122) இந்த வசனம் அன்சாரிகளாகிய எங்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது.  இது குறித்து;

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அறிவித்தார். “உங்களில் இரண்டு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூறுக!)’ எனும் (திருக்குர்ஆன் 3:122வது) இறைவசனம்(அன்சாரிகளாகிய) எங்கள் விசயத்திலேயே இறங்கியது. பனூ ஹாரிஸா மற்றும் பனூசலிமா குலத்தாரான நாங்கள்தாம் அந்த இரு பிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்ப மாட்டோம். ஏனெனில், “அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான்என்று (அதில்) அல்லாஹ்அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்என்று (எங்களை மேன் மைப்படுத்திக்) கூறியிருக்கிறான். அறிவிப் பாளர் : சுஃப்யான் இப்னு உபைனா(ரஹ்) மற்றொரு முறை அறிவிக்கும்போது, “இது இறங்காமலிருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராதுஎன்று கூறினார்கள். புகாரி: 4051, 4558) மேலும் அவர்கள், ஒரு வகையில் இவ்வசனம் எங்களைக் கண்டித்தாலும்வல்லாஹு வலிய்யுஹுமாஅல்லாஹ் அவர்களின் காவலன் என்ற வாசகம் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்று கூறினார்கள். (ஃபத்ஹுல் பாரீ, இர்ஷாதுஸ் ஸாரீ, புகாரி:4051இன் சிறு குறிப்பு 120ஆவது)

Previous post:

Next post: