இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?

in 2024 பிப்ரவரி

இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?

அஹமது  இப்ராஹிம்

உங்களில் அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்தவர், மனனமிட்டவர் இமாமுக்குத்  தகுதியானவர்  என நேரடியாக  சொல்லப்பட்ட  நபிமொழி  உள்ளது.

அம்ர்  இப்னு  சலிமா(ரழி) அறிவித்தார்:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக; அல்லது அல்லாஹ் அவருக்கு (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார் என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனனம் செய்து கொள் வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட் டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், “அவரை அவரின் குலத்தா(ரான குறை´)ருடன் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)’ என்று கூறினார்கள்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து  வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே)  இருக்கவில்லை.

எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந் தேன். நான் ஸஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின்புறத் தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியயாருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்கமாட்டீர்களா? என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியயான்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையயான்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வெறெதனாலும் மகிழ்ச்சி யடைந்ததில்லை.  புகாரி : 4302, அத்தியாயம் : 64, (நபிகளார் காலத்துப்)  போர்கள்.

இமாமத் செய்ய வயதில் மூத்தவராக இருப்பது, குர்ஆன் அதிகம் மனனமிட்டவர் நபிமொழி களை அதிகம் தெரிந்தவர் என்பதைத் தவிர அவர் இணைவைத்து விட்டால் என்பது பற்றிய சர்ச்சையே இஸ்லாமிய மார்க்கத்தில் கிடையவே கிடையாது. அது மட்டுமல்ல மூன்று தன்மைகள் யார் யாரிடம் உள்ளனவோ அவரெல்லோரும் முஸ்லிம்களே என்பதற்கு கீழ்க்கண்ட  நபிமொழி  ஆதாரமாக  உள்ளது!

நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு வி­யத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார். புகாரி:391, அத்தியாயம் : 8, தொழுகை

எனவே ஒரு முஸ்லிம் அவர் மவ்லுது என்னும் ´ர்க்கான பாடலைப் பாடினா லும் சரி அல்லது கப்ருகளில் உள்ளவர்களை வணங்குபவராக இருந்தாலும் சரி. மத்ஹபு என்ற இணைவைப்பில் இருந்தாலும் சரி அவரைப் பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகைக்கு எந்தப் பாதிப்பும்  ஏற்படாது.

எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான். எவன் வழிகேட் டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான். (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை  செய்வதில்லை.  (அல்குர்ஆன் 17:15)

இறைத்தூதர் (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.

(இமாமாக நியமிக்கப்படுகின்ற) அவர் கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும். என அபூஹுரைரா (ரழி) அறிவித்தார். புகாரி :694, அத்தியாயம் : 10.  பாங்கு.

ஆகவே இணைவைக்கும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்பதற்கு உங்கள் தலைவர்களால்  இறுதிநாள்  வரை  ஆதாரம்  ஏதும்  தரவே  முடியாது.

இன்று முதல் தத்தமது மஹல்லா பள்ளி வாசல்களில் இமாம் ஜமாஅத்தாக தொழுது வருமாறு தவ்ஹீத் தம்பிமார்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.  வஸ்ஸலாம்.

Previous post:

Next post: