ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்கள்! 

in 2024 பிப்ரவரி

ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்கள்! 

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

அவர்களுடைய செல்வத்தில் யாசிப் பவர்களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை  உண்டு.     அல்குர்ஆன் 51:19

அவர்களுடைய பொருள்களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட  பங்கு  உண்டு. அல்குர்ஆன் 70:24

எதைச் செலவு செய்ய வேண்டும்என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; “(உங்கள் தேவைக்குப்போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்என்று கூறுவீராக.   
அல்குர்ஆன் 2:219

அல்குர்ஆனில் கடமையான தொழுகை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஜகாத்தும் வலியு றுத்திக் கூறப்பட்டுள்ளதை அறியலாம். அதுமட்டுமல்ல; மீண்டும் மீண்டும் எண் ணற்ற இடங்களில் தொழுகையும், ஜகாத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன புலப்படுகிறது? தொழுகை எந்த அளவு கண்டிப்பான கடமையாக இருக்கிறதோ அதே போல் பணம் படைத்தவர்கள் ஜகாத், (ஏழைகளின் உரிமை) கொடுப்பதும் கண்டிப்பானக் கடமையாக இருக்கிறது. தொழுகை மீண்டும் மீண்டும் தொழும் கடமையாக இருப்பது போல், ஜகாத்தும் மீண்டும் மீண்டும் கொடுப்பது கடமையாக இருக்கிறது. தினசரி ஐவேளை தொழுவது கடமை என்பது ஆதாரபூர்வ மான ஹதீத்கள் மூலம் நிலைநாட்டப்பட்டிருப்பது போல், ஜகாத் வருடா வருடம் கொடுப்பது கடமை என்பதும் ஆதாரப்பூர்வமான ஹதீத்கள் மூலம்  நிலைநாட்டப்பட்டுள்ளது.  அந்த  ஹதீத்கள்  வருமாறு :

தமது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர், இறை விசுவாசத்தின் சுவையை வைத்துக் கொள்வார்  நூல்: அபூதாவூது 1349

ஏற்கனவே ஜகாத் கொடுத்த செல்வமும் இதில் அடங்கியதே என்பதுதமது செல்வம்என்று ஹதீதில் குறிப்பிட்டி ருப்பதிலிருந்தே விளங்குகிறது என்பதை 4ம் வகுப்புப் படிக்கும் சிறுவனும் ஒப்புக் கொள்வான். மெத்தப் படித்த மவ்லவி பண்டிதரும், கஞ்சத்தனமுள்ள செல்வந்தர்களும் மட்டுமே   ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

“…அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் ஒரு ஒட்டகக் குட்டியேனும் (இன்னொரு அறிவிப்பில் ஒட்டகத்தைக் கட் டும் ஒரு சிறிய கயிறாக இருப்பினும்) நபி (ஸல்) அவர்களிடம் அவர் அதனை அளித்து வந்த நிலையில், எனக்கு அளிக்க மறுப்பாராயின், நிச்சயமாக அவர் அதனை மறுத்ததன் காரணமாக நான் அவரோடு போர் தொடுப்பேன்என்று முதல் கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்கள் கண்டிப்புக் காட்டியது அபூ ஹுரைரா (ரழி) அறிவித்து புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூது, திர்மிதி, நஸயீ ஆகிய ஆறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்களோடு சம்பந்தப்பட்ட இந்த ஹதீதையும் நடுநிலையோடு, நியாய உள்ளத்தோடு, எவ்வித சுயநல நோக்கமும் இல்லாமல் சிந்திப்ப வர்கள், ஜகாத் வருடா வருடம் கொடுக் கப்பட வேண்டும் என்பதை மறுக்காமல் ஒப்புக்கொள்வார்கள். மெத்தப்படித்த மவ்லவி பண்டிதரும், ஜகாத் கொடுக்கா மல் தப்பித்துக் கொள்ள நினைக்கும் செல்வந்தர்களும் மட்டுமே தங்களது மறுப்பை  வெளியிடுவார்கள்.

அல்குர்ஆன் 2:219 இறைவாக்கு தங்களின் தேவைகள் போக எஞ்சிய வற்றை இறைவனது பாதையில் செல விட உபதேசிக்கிறது. அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் ஏழைகள், தரித்திரர்கள், கடனாளிகள், இன்னும் பல வகைகளிலும் தேவையுடையோ ருக்கு தாராளமாக தங்கள் செல்வத்திலி ருந்து செலவிடும்படி உற்சாகப்படுத்து கிறது. இந்த உலகத்தைவிட மறு உல கத்தை நேசிப்பவர்கள் மட்டுமே அவ்வாறு செயல்பட முடியும் என்பதையும் பல இறைவாக்குகள் உணர்த்துகின்றன. இவ்வுலகில் சேமித்து வைப்பதை விட அல்லாஹ்வுடைய பாதையில் செல விட்டு, அவ்வுலகில் சேமித்து வைப்பதே சாலச்சிறந்தது என்று ஏக இறைவன் அறி வுரை கூறுகிறான். செலவிடும் முறையை யும் அல்லாஹ் அழகாகக் கற்றுத் தருகிறான்.

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும் (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவ ராகவும்  ஆகி  விடுவீர்.  அல்குர்ஆன்  17:29

நம்முடைய தேவைக்காக பிறரிடம் எதிர்பார்க்கும் அவல நிலைக்கு ஆளாகக் கூடாது; அதற்கு மாறாக பல தலைமுறைகளுக்குத் தேவையானதை சேர்த்து வைத்துக்கொண்டு, நாய் வைக்கோல் போரை காத்துக் கிடப்பது போல் கட்டிக் காக்கவும் கூடாது. ஆனால் இன்று பல செல்வந்தர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றிலுள்ள ஏழைகளுக்கு சேரவேண்டிய, அவர்களது உரிமையான ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுக்காமல், ஏழைகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மூஸா(அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்து இறைவனால் மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாகிய காரூனையும் அவனது செல்வங்களையும் பூமியில் அழுந்தச் செய்து அழிக்கப்பட்ட அந்த காரூன்எனக்குள்ள அறிவின் காரணத்தால்தான் இவற்றை நான் கொடுக்கப் பட்டிருக்கிறேன்என்று ஆணவம் பேசியது போல், இந்தச் செல்வந்தர்களில் மிகப் பெரும்பாலோர் ஆணவம் பேசி, ஜகாத் கொடுக்க அறவே மறுத்து வருகிறார்கள்.

ஒருசிலர் ஜகாத் கொடுக்க முன் வந்தாலும், அவர்களின் சுயநலத்திற்கு ஏற்றவாறு, சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு, ஒரு வருடம் கழித்து அவை செலவிடப்படாமல் இருந்தால் அவற்றிற்கு நாற்பதில் ஒரு பங்கு ஜகாத் கொடுத்தால் போதும். அதன் பின்னர் அச்சொத்து எவ் வளவு காலம் அவர்களிடம் செலவிடப் படாமல் தேக்கப்பட்டு இருந்தாலும், அவற்றிற்கு ஜகாத் கொடுக்க வேண்டிய தில்லை. காரணம்ஜகாத்என்றால் சுத்தப்படுத்துவது தான். ஒருமுறை சுத்தப் படுத்திவிட்டால் அது சுத்தமாகிவிட்டது. அடுத்து சுத்தப்படுத்த வேண்டியதில்லை என்று சுயவிளக்கம் கொடுத்து, செல்வந்தர்களின் கருமித்தனத்திற்கு வலுவூட்டுகிறார்  தவ்ஹீத்  மவ்லவி.

தகப்பன் சேர்த்த சொத்திற்கு ஒரு முறை ஜகாத் கொடுத்து அதைச் சுத்தப்படுத்திவிட்டார். அதன் பின்னர் அவர் வாழ்ந்த காலமெல்லாம் செல்வம் சுத்தமாக இருப்பதாக நினைத்து அவர் ஜகாத் அந்த ஒரு முறைக்கு மேல் கொடுக்கவில்லை. இப்போது அவர் இறந்துவிட்டார். வாரிசு அடிப்படை யில் அந்தச் சுத்தமானசெல்வம்(?) மகனுக்குக் கிடைத்துவிட்டது. “அப்படியானால் சுத்தமான அந்தச் செல்வத்திற்கு மகனும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை தானே?’ என்று கேள்வி கேட் டால், மவ்லவி பண்டிதர் பேந்தப் பேந்த விழிக்கிறார். பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார். இதிலிருந்தேஜகாத்  என்றால் சுத்தப்படுத்துதல்; எனவே ஒருமுறை சுத்தப்படுத்தினால் போதும் என்ற அவரது சுய கருத்து பெரும் வழிகேடு என்பது  விளங்குகிறதல்லவா?

தங்களின் செல்வங்களுக்கு முறையாகக் கணக்கிட்டு ஏழைகளின் உரிமையான ஜகாத் கொடுக்க முன்வராத செல்வந்தர்களில் பலர், தங்கள் வீட்டு சாதாரண நிகழ்ச்சிகளிலும் ஆடம்பரத்தையும், பெருமையையும் நாடி பணத்தைத் தண்ணீராகச் செலவிடுவதையும் பார்க்கி றோம். பேர், புகழுக்காக அரசியல் கட்சிகளுக்கும், பலவித இயக்கங்களுக்கும் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுப் பதையும்  பார்க்கிறோம்.

மக்கள் தங்களை மதிக்க வேண்டும், பெரிதாக எண்ணவேண்டும், சபையின் நடுவில் அமர வைக்க வேண்டும். கூழைக் கும்பிடு போடவேண்டும். எல்லோரும் தன் சொல் கேட்டு ஆடவேண்டும் போன்ற ஆணவ எண்ணமும், அகம்பாவ சிந்தனையும், வரட்டுக் கெளரவம் வீண் பெருமை இவற்றை நோக்கமாகக் கொண்ட செல்வந்தர்கள் பல குறுக்கு வழிகளில் பொருளை ஈட்டியும், ஈட்டிய பொருளுக்கு முறைப்படி ஜகாத் கொடுக்காமலும் கோடி கோடியாக சொத்தைக் குவித்து வருகிறார்கள் என்று எமது கருத்து இதன் மூலமும் உறுதிப் படுத்தப்படுகிறது.

எனவே செல்வந்தர்கள், அல்குர்ஆன் 9:34,35 எச்சரிப்பது போல் நாளை மறுமையில் மிகக் கடுமையான நரக வேதனையை விட்டு தப்பவேண்டும் என்றால் அவர்கள் வாடகை வரும் கட்டிடங்களாக, ரியல் எஸ்டேட் செய்யும் காலி நிலங்களாக, தங்கம், வெள்ளி, நகைகளாக இன்னும் என்னென்ன வகைகளில் செல்வங்களை சேமித்து வைத்திருக்கிறார்களோ இவை அனைத்திற்கும் வருடா வருடம் தவறாது ஜகாத் முறைப்படி கணக்கிட்டுக் கொடுத்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயமாக இருக்கிறது. யாருமே இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கமுடியாது. மரணத்தின்போது இங்கு விட்டுச் செல்லும் சொத்து சுகங்களுக்கு பேராசைப்பட்டு, வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல், ஏழைகளுக்குரிய பங்கை மோசடி செய்கிறவர்கள் நாளை மறுமையில் பெருத்த வேதனை அடையப்போவது உறுதியிலும் உறுதி. அல்லாஹ்வை அஞ்சிக்  கொள்வார்களாக.

Previous post:

Next post: