ஐயமும்! தெளிவும்!!

in 2024 பிப்ரவரி

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : மனிதக் கருத்து மார்க்கமாகாது என்று தொடர்ந்து கூறி வரும்அந்நஜாத்ஹதீத் கலா வல்லுனர்கள், ஹதீத்களை தரம் பிரித்து கூறுவதை சரிகாண்கிறது. ஏற்றுக்கொள்கிறது. அவர்களின் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? அவர்களும் மனிதர்கள்தானே!           M. அபூநபீல், தேங்காய்பட்டணம்

தெளிவு: மேற்படி வாசகர் அந்நஜாத் பத்திரிக்கையானது இதர சமுதாய பத்திரிக்கைகள் போல் மனித சொந்த கருத்தை கூறாமல் ஆதாரபூர்வமான ஹதீத்கள் மட்டுமே அந்நஜாத் பத்திரிக்கையில் இடம்பெறும் என்பதை மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!

ஆயினும், அந்நஜாத் பத்திரிகையிலும் ஹதீத் கலா வல்லுனர்களின் கருத்து இடம் பெறுகிறது. இது எப்படி? என்பதை தவறாக புரிந்து உள்ளார்.

அந்த சந்தேகமானது அவருடைய புரிதலில் ஏற்பட்ட கோளாறே தவிர, அந்நஜாத்தில் அப்படி இடம் பெற்றதாக இல்லை.

இறைநூலா(குர்ஆனாக) இருக்கட்டும், இறைதூதர் சொன்னதாக, எழுதப்பட்டதாக (ஹதீத்களாக) இருக்கட்டும், அனைத்தும் மனிதர்கள் மூலமாகவே நமக்கு கிடைத்ததே தவிர,  வானவர்கள்  மூலமாக  அல்ல.

ஹதீத்களை தொகுத்து தந்த ஹதீத்கலா வல்லுனர்கள்(மனிதர்கள்) தங்களுக்கு கிடைத்தத் தகவல்களையே ஹதீத்களாக தொகுத்து தந்தார்கள் அல்லாமல் அவர்களின் சுய கருத்துகளைத் தரவில்லை என்பதை புரிந்து கொண்டால் மேற்படி சந்தேகம் எழுந்திருக்காது.

மனித கருத்து வேறு, தொடர் செய்தி என்பது வேறு என்பதை ஹதீத்களை தொகுத்த கலாவல்லுனர்கள் கூறியுள்ளார்கள். அதாவது ஹதீத்களின் அறிவிப்பாளர்கள், அந்த அறிவிப்பாளர்கள் பற்றிய நம்பகத்தன்மை, குறைபாடுகள் பற்றிய  தகவல்களையும் தான் தந்துள்ளார்கள்.

எனவே எதை ஒன்றையும் கண்மூடிதனமாக தஃலீது செய்யாமல் அத்தகவல்களை முறைப்படி ஆய்வு செய்து குர்ஆனுக்கு முரண்படாத ஹதீத்களை ஏற்கிறோம். இது மனித கருத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகாது.

இறைநூலில் (குர்ஆனில்) மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை இறைவனும் சபிக்கிறான். மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள்    (அல்குர்ஆன்.2:159()

மேற்கண்ட இறைநூல் வசனப்படி தெளிவான சான்றுகள் அனைத்தும் மனிதர்கள் மூலமாகத்தான் அனைவருக்கும் கிடைக்கும் என்று இறைநூல் கூறுகிறது. எனவே அதை மறுப்பவர்களாகவோ, மறைப்பவர்களாகவோ அந்நஜாத் எப்போதும் இருக்காது.

மேலும் முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் இறைநூல் வசனங்களையும், ஹதீத்களை யும் அணுகுவதில் ஒரு நடுநிலைச் சிந்தனை வேண்டும். குர்ஆன் வசனமாக இருந்தாலும் கண்மூடித்தனமாக  புரிந்துகொள்ள  கூடாது;  விளங்கிப்  பின்பற்ற வேண்டும். 

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப் பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன்  செவிசாய்ப்பார்கள்) (அல்குர்ஆன் 25:73)

Previous post:

Next post: