முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்-

in 2024 ஜனவரி

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

டிசம்பர்  தொடர்ச்சி

இறைத்தூதர் யூஸுஃப்(அலை) அவர்களும் முஸ்லிமாக இருக்கும் நிலையில் மரணிக்கவே பிரார்த்தனை செய்தார்கள் :

என் இறைவனே! நிச்சயமாக நீ அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங் களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும், பூமியையும் படைத்தவனே! இம் மையிலும், மறுமையிலும் நீயே என்பாது காவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிரார்த்தித்தார்) (அல்குர்ஆன்: 12:101) தமது மறுமை வெற்றிக்காகத் தாம் முஸ்லிமாக இருக்கும் நிலையிலேயே தம்மை மரணிக்கச் செய்யுமாறும் நல்லோருடன் தம்மைச் சேர்த்திடுமாறும் வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனிடம் இறைத்தூதர் யூஸுஃப் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள். 

இறைத்தூதர் யாஃகூப்(அலை) அவர்களின் குமாரர்களும் தம்மை முஸ்லிம்கள் என்றே கூறினார்கள்:

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் (அவரருகில்) சாட்சியாக இருந்தீர் களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களி டம்எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்கு வீர்கள்?’ எனக் கேட்டதற்கு, “உங்கள் இறைவனான, உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனைஒரே இறைவனையேவணங்குவோம். அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 2:133) நபி யஃகூப்(அலை) அவர்கள் இறக்கும் தருவாயில் யூத மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று தமது மக்களுக்கு உபதேசித்தார்கள் என யூதர்கள் கூறிவந்தனர். ஆகவே இஸ்ரவேலர்களில் உள்ள ஓரிறை மறுப்பாளர்களுக்கும், இஸ்மாயீல் (அலை)அவர்களின் வழித்தோன்றல்களான அரபுகளில் உள்ள இணை வைப்பாளர்களுக்கும், எதிரான ஆதாரத்தை மேற்கண்டவாறு இங்கு இறைவன் எடுத்துரைக்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர் : 1:456-458)

இறைத்தூதர் லூத்(அலை) அவர்களது சமு தாயத்தவர்களில்முஸ்லிம்கள்மாத்திரமே பாதுகாக்கப்பட்டார்கள் :

ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின் களை (முதலில்) நாம் வெளியேற்றிவிட் டோம். எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர ஒருவரையும் நாம் காணவில்லை. (அல்குர்ஆன் 51:35,36) அழகிய வாலிபர்களின் தோற்றத்தில் இறைத் தூதர் லூத்(அலை) அவர்களது இல்லத்திற்கு விருந்தாளியாக வந்திருந்தவர்கள் குறித்து அவருடைய மனைவி வெளியே சென்று தனது சமூகத்தாரிடம் (வந்திருந்த விருந்தினர்கள் தொடர்பாகத்) தகவல் சொல்லி விட்டார். அதையடுத்து அவர்கள் லூத் (அலை) அவர்களை நோக்கி அளவு கடந்த மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து விரைந்தோடி வந்தனர். (15:67, சுத்தீ(ரஹ்), தஃப்ஸீர் மாஜிதீ, தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:662-665, 1045-1047)

அச்சமுதாயத்தார் வாழ்ந்த நகரம் தலை கீழாகப் புரட்டப்பட்டும். அவரவர் பெயர் பொறிக்கப்பட்டும் அடையாளமிடப்பட்ட கற்கள் பொழியப்பட்டும் ஒட்டுமொத்த மாக அழிக்கப்பட்டார்கள். அதில் லூத் (அலை) அவர்களது மனைவியைத் தவிர நபி யவர்களின் மற்றைய உறவினர்களாகிய முஸ்லிம் களிலிருந்து ஒரே ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை. (அல்குர்ஆன் 51:35,36) அதாவது; இந்த ஒரு வீட்டினர் மட்டும்தான் லூத்(அலை) அவர்களின் காப்பாற்றப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் ஆவர். இதையே உயர்ந்தோன் அல்லாஹ்  மற்றுமோர்  வசனத்தில்; அல்குர்ஆன் 7:83,84

அல்லாஹ் முஸ்லிம்களைக் குற்றவாளிகளைப் போன்று ஒருபோதும் ஆக்கமாட்டான் :

கட்டுப்பட்டு நடப்பவர்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் (சம மாக) ஆக்கிவிடுமோ? என்ன? (அல்குர்ஆன் 68:35) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கேட் கின்றான். அதாவது; கூலி வழங்குவதில் இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் சமப்படுத்துவோமா என்ன? வானம் பூமியின் மீது சத்தியமாக! அவ்வாறு செய்ய மாட்டோம். (தஃப்சீர் இப்னு கஸீர்:9:592-594)

இஸ்ரவேலர்களின் நபிமார்களும் முஸ்லிம்களாகவே  இருந்தார்கள் :

நிச்சயமாக நாம்தாம்தவ்ராத்தையும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட (முஸ்லிம் களாகிய) நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளை யிட்டு வந்தார்கள். முஃமின்களே!) நீங்கள் மனிதர் களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக  இறை  மறுப்பாளர்கள்தாம். (அல்குர் ஆன் 5:44)

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் தமது சமூகத்தவர்களிடம்   உபதேசிக்கை யில்:

மூஸா(தம் சமூகத்தவரிடம்)என் சமூகத்தாரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம் களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்என்று கூறினார். (அல்குர்ஆன் 10:84) இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு நபி மூஸா(அலை) அவர்கள் சொன்ன அறிவுரை குறித்து தெரிவிக்கின்றான்.    

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களை ஏற்றுக்கொண்ட சூனியக்காரர்கள் தம்மை முஸ்லிம்களாக ஆக்குமாறே வேண்டினார்கள்:

எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறிஎங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக, முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!’ (எனப் பிரார்த்தினர்) (அல்குர்ஆன் 7:126) அதாவது; நபி மூஸா(அலை) அவர்களைப் பின்பற்றிய நிலையில் எங்களை முஸ்லிம்களாக இறக்கச் செய்வாயாக என்று பிரார்த்தனை  புரிந்தார்கள்  இதனால்  அவர்கள்;

முற்பகலில் சூனியக்காரர்கள், பிற்பகலில் உயிர்த்தியாகிகள்  ஆனார்கள் :

முற்பகல் நேரத்தில் சூனியக்காரர்களாக இருந்த அவர்கள் பிற்பகல் நேரத்தில் உயிர்த்தியாகம் செய்யத் துணிந்த மேன்மக்களாக மாறினர். இதையே இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், “அவர்கள் முற்பகலில் சூனியக்காரர்களாக இருந்தார்கள். பிற்பகலில் உயிர்த்தியாகிகளாக முஸ்லிம்களாக மாறினர் என்று கூறினார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 3:860-863)

ஃபிர்அவ்னும் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன்  என்றுதான்  கூறினான்

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம். 

அன்றியும், கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 44:24) என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ்; இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். அதனால்தான் கடல் பிளவுபட்ட நிலையி லேயே உலர்ந்த பாதையாக இருக்க கடலினை மூஸா(அலை) அவர்கள் விட்டுச் சென்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஜா ஹித்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்:8, பக்கம் 321-326)

கடல் பிளந்து கொண்ட கட்டாந் தரையின் தெருவினிலே கடந்து சென்ற இஸ்ரவேலர்களையும் இறைத்தூதர் மூஸா(அலை), ஹாரூன்(அலை) அவர்களையும், விசாலமான ஏழு பாதைகளையும் கண்ட ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும், ஒருவர் விடாமல் எல்லோரும் கடலுக்குள் இறங்கினார்கள். அவர்கள் மீது கடல் மோதியது அலைகள் அவர்களை மேலும் கீழுமாகப் புரட்டி எடுத்தன. அவர்களில் ஒருவர் கூடத் தப்பவில்லை ஃபிர்அவ்ன் மீதும் அலைகள் தொடர்ச்சியாக மோதின. மரண வேதனை அவனைச் சூழ்ந்து கொண்டது. அப்போதுதான் அவன், இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த இறைவன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையயன்று நானும் ஈமான் கொள்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றிலும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன் என்று கூறினான். (அல்குர்ஆன் 10:90) அப்போது கடல் அவர்கள் அனைவரையும் மூடிக்கொண்டது. அன்றைய தினத்தை விட அதிகமானதொரு பெரும் கூட்டம் ஒருபோதும் காணப்பட்டதேயில்லை. பிறகு அவர்களுக்காக வானமும் (அழ வில்லை) பூமியும், அழவில்லை, (பாவமீட்சி) தேடிடச்) சிறிது அவகாசம் கூட அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. (44:24, 29, 20:78, 10:90, 2:50, இப்னு அப்பாஸ்(ரழி), அனஸ்(ரழி), யஸீத்பின் ஜுபைர்(ரழி), அலீ(ரழி), உப்பாதா பின் அப்தில்லாஹ்(ரஹ்), கத்தாதா(ரஹ்), முஜாஹித்(ரஹ்), இப்னு அபீஹாத்தம்(ரஹ்), தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 321-331)

Previous post:

Next post: