இஸ்லாத்தின் இலட்சியம் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்…

in 2024 மார்ச்

இஸ்லாத்தின் இலட்சியம் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!

முஹிப்பில் இஸ்லாம்

மறு பதிப்பு :

பிரிவுகளைச் சார்ந்து வாழும் முஸ்லிம்கள்:

எதிரிகளின் குற்றச்சாட்டு :

இஸ்லாத்தின் பார்வையில்

இஸ்லாத்தை முற்றாக நிராகரிப்போரும் பிரிவினைவாதிகள்.

இஸ்லாத்தை மார்க்கமாக்கிக் கொண்ட பின், அதில் சாதகமானதை ஏற்று, பாதக மானதை விட்டுவிடுவோரும் பிரிவினை வாதிகள்.

மார்க்க முரண்களை மார்க்கமாய்க் காட்டி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி பிரிவுக ளுக்குள் சிக்க வைத்துப் பிழைப்பு நடத்து வோர ஆபத்தான பிரிவினைவாதிகளே!

பிரிவுகளிலும், பிரிவினைவாதிகளிடமும் சிக்கிக்கொண்ட அப்பாவி அறிவிலி முஸ்லிம்கள். இதன் எதிரொலிமுஸ்லிம்களை பிரிவுகளுக்குள்ளும், அணிகளுக்குள்ளும் வலிந்து தள்ளி விடுவதே இஸ்லாம் தான் என்ற இஸ்லாமிய எதிரிகளின் படுபயங்கர குற்றச்சாட்டு. இதை நடைமுறை யில் மெய்ப்பிக்கும் அணிகள். பிரிவுகள் சார்ந்து  வாழும்  முஸ்லிம்கள்.

இன்று பிரிவுகளை, அணிகளை, குழுக்களை நியாயப்படுத்தாத முஸ்லிம்களை காண்பது அரிதிலும் அரிது. எப்படியோ எல் லோரும் ஏதோ பிரிவில், அணியில், குழுவில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால் இஸ் லாத்தை விட்டுப் பிரியக்கூடாது; இஸ்லாத்தை நிலைநாட்டுவதிலிருந்தும் பிரியக் கூடாது என அனைத்து இறைத் தூதர்களுக் குக் குறிப்பாகவும், அந்த இறைத் தூதர்களின் சமுதாய மக்களுக்குப் பொதுவாகவும் அல்லாஹ் பிரகடனப்படுத்துகிறான். (காண்க: அல்குர்ஆன் 42:13) இதுபோன்ற எண்ணற்ற அல்லாஹ்வின் அறிவுரைகள் இறை உரைகளாய் அல்குர்ஆனில் பரவி இருக்கக்  காண்கிறோம்.

இதுபோன்ற இறை அறிவுரைகளை யாரும் மக்கள் முன் எடுத்து வைக்காத காரணம், இஸ்லாத்தோடு ஐக்கியமாக வேண்டும்; இஸ்லாத்தோடு ஐக்கியமாகாதவர்கள் பெருந்திரளாய் இருந்தாலும், அத்தகை யோர் இஸ்லாத்தை விட்டும் பிரிந்து நிற்போரே, இஸ்லாத்தின் பார்வையில் ஒன்றுபட்டவர்கள் அல்லர் என்பதை முதன் முதலாய் கேட்கும்போது, படிக்கும்போதும் பெரும்பாலோர் அதிர்ந்து விடுகின்றனர்.

1. இஸ்லாத்தோடு ஐக்கியமானவர்கள்:

காலங்கள் தோறும் இறைத் தூதர்களுடன் இணைந்து இஸ்லாத்தோடு ஐக்கிய மானவர்களே, ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தினராவர். மாறுபட்டோர் எண்ணிக்கையில் எத்துணை கூடுதலாயிருந்தாலும், அவர்கள்  பிரிவினைவாதிகளே!

காலத்துக்குக் காலம் இறைத் தூதர்களுடன் இஸ்லாத்தோடு ஐக்கியமானவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாய் இருந்தாலும் சரி; சிறுபான்மையினராய் இருந்தாலும் சரி; விரல் விட்டெண்ணும் அளவே இருந்தாலும் சரி. இருவராய் இருந்தாலும் சரி; ஒருவராய் இருந்தாலும் சரி; அந்த உத்தமர்களே அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாத்தோடு ஐக்கியமாகிய, ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தவர் ஆவர். இப்ராஹீம்(அலை) தனி நபராக இருந்த நிலையிலும் அவர் ஒரு சமுதாயமாகவேஉம்மத்தன் கானித்தன் என்று அல்லாஹ்  கூறுகிறான்.

இஸ்லாத்தை விட்டு பிரிந்து நிற்போர்எண்ணிக்கையில் எத்துணை பெருக்கெடுத்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் வேற்றுமைவாதிகளே!

வழிகேடுகளை வரிந்து கொண்டோர் வெளிப்படையாக எண்ணிக்கையில் பெருமளவில் தெரிவர். எனினும் வழிகேடுகளை நடைமுறைப்படுத்துவதில் இவர்கள் மாறு பாடானவர்கள். வரிந்து கொண்டே வழிகேடுகளில் வேறுபட்டு நிற்பவர்கள். பிரிவுக்குப் பிரிவு, அணிக்கு அணி, குழுவுக் குழு வழிகேடுகளும் மாறுபட்டிருக்கும். வேறு படுவதும், மாறுபடுவதும் பிரிவுகள், அணி கள், குழுக்களின் பொதுவான இயல்பு. அதன் எதிரொலி,  ஏதேனும் பிரிவுகளில், அணி களில், குழுக்களில் பிரிந்து நிற்போரும் பிரிவினைவாதிகளே!

பிரிவுகளாய், அணிகளாய், குழுக்களாய் இருக்கும் முஸ்லிம்களின் நிலையும் இதுதான். அணிகளாய், குழுக்களாய் பிரிந்து நிற்பவர் முஸ்லிம்கள், அல்லாதோர் எனும் பாகுபாடின்றி அனைவரும் பிரிவினைவாதிகளே!

மாற்றார்கள் வழிகேட்டை வரிந்து கொண்டவர்கள், பிரிவினை வழிகேடு என்பதை உணராதவர்கள், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்ட முஸ்லிம்கள் மற்றவர்களை வழிகேடுகளிலிருந்து விடுவிக்கக்  கடமைப்பட்டவர்கள்.

முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்? மாற்றாரிடமிருந்து மற்ற வழிகேடுகளை முஸ்லிம்கள் இறக்குமதி செய்கிறார்கள்.

பிரிவு, அணி, குழு என பிரிதலையும் முஸ்லிம்கள் இன்று அனுமதியும் செய்தும் கொள்கிறார்கள். தேவையயனில் பல நேரங்களில் மாற்றார்க்கு ஏற்றதுபோல் செய்து வருகிறார்கள்.

மோதல்களால்  அழிவுகள் :

மனிதர்கள் உதிர்த்த தத்துவங்கள், சித் தாந்தங்கள் எதுவும் மானுடத்தை ஒன்று படுத்தவில்லை; ஒன்றுபடுத்தவும் முடியாது, மாறாக அவைகள் மனிதர்களைக் குழுக்க ளாகவும், அணிகளாகவும் பிரித்து வருகின் றன. பிரிந்தோர் பிரிந்ததுடன் நிற்கவில்லை.

ஒரு மனிதன் அடுத்த மனிதனோடும், ஒரு குழு இன்னொரு குழுவோம், ஒரு அணி, வேறொரு அணியோடும் மோதிக் கொள்கின்றன. தனி மனித மோதல்கள், குடும்ப மோதல்கள், உறவு மோதல்கள், குலத்தால், இனத்தால் மோதல்கள், கறுப்பர் வெள்ளையர் நிற மோதல்கள், நாட்டுடன் நாடு, நாடுகளுடன் நாடுகள் மோதல்கள், அரசியல் மோதல்கள், பொருளாதார மோதல்கள்சிறிய மோதல்கள் இரத்தம் சிந்த வைக்கும்; மோதல்கள், பெரிதாகும்போது  போர்  வெடிக்கும்.

மோதல்களால் போர்கள்; போர்களால் பொருள் இழப்புக்கள், உயிர் இழப்புக்கள், நாட்டழிப்புகள், உயிர் இழப்புகள், எத்தனை, எத்தனை அழிவுகள்! பகை மையின் பிடியில் மனிதர்கள்பகைமைத் தீ அணையாமல், அணைக்க முடியாமல் மானுடத்தை எரித்து வருகிறது. உலகம் நரகமாகிறது. இதனால் தான், மனிதனைப் படைக்கப்போகிறேன் என அல்லாஹ் மலக்குகளிடம்  தெரிவித்ததும்.

அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா படைக்கப்போகிறாய்? என மலக்குகள்  ஆட்சேபித்தனர்.      (அல்குர்ஆன் 2:30)

மலக்குகளின் ஆட்சேபணையை மனிதர்கள் மெய்பித்து வருகிறார்கள். மானுட துவக்கத்திலிருந்து இன்றளவும் இது தொடர்கிறது. (அஸ்தஃபிருல்லாஹ்அல்லாஹ்  காத்தருள்வானாக)

பகைமைக்கோர்  முற்றுப்  புள்ளி :

நபி ஆதம்(அலை) அவர்களின் புதல்வர் ஒருவர் அநியாயமாய் கொல்லப்பட்டது. உலகின் முதல் கொலை, இதற்கோர் உதாரணம்.  (காண்க. அல்குர்ஆன் 5:27-32)

நபி ஆதம்(அல) அவர்களையும், அவர் துணைவியாரையும் ஷைத்தான் வழிகெடுத்தான். மனிதர்களிடம் ­த்தான் கொண்ட தீராத பகை. அதன் எதிரொலி, அவ்விருவருக்கும் அல்லாஹ் அருளிய உயர் நிலையை மாற்றி தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிட்டான்.

ஷைத்தான் அவ்விருவருக்கும் அம்மரத்தின் மீது ஆசை காட்டி, அவர்களை நம் கட்டளை யிலிருந்து  பிறழச்  செய்துவிட்டான்.

மேலும் அவ்விருவரும் எந்த(உயர்) நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ, அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி (தாழ்ந்த நிலைக்கு கொண்டு வந்து)விட்டான்.

மேலும் நாம் கட்டளையிட்டோம்; நீங்கள் எல்லோரும் (இங்கிருந்து கீழே) இறங்கி விடுங் கள்.

நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களா வீர்கள்‘ (பஃளு(க்)கும் லிபஃளின் அதுவ்)

இன்னும், உங்களுக்காக குறிப்பிட்ட காலம் வரை பூமியில் தங்குமிடமும் இருக்கிறது. வாழ்க்கை  வசதிகளும்  இருக்கின்றன?   (அல்குர்ஆன் 2:36, 7:24,25)

பகைமை (சிஐதுஷ்மிதீ) மனிதர்களின் இயல்பு. இதைநீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்கள் ஆவீர்கள்‘. (அல்குர்ஆன் 2:36,7:24) என அல்லாஹ்  உணர்த்துகிறான்.

பிரிவின் மூல காரணம் பகைமை; மோதலுக்குக் காரணம் பகைமை; மோதலால் இரத்தம் சிந்த வைப்பதும் பகைமை; அநியாயக் கொலைகளும் பகைமை; பகைமை ஓர் மாபாதகம்; பகைமை ஓர் விபரீத வழிகேடு; மானுடத்தைப் பிரிக்கும். பிளக்கும் கொடிய ஆயுதம்பகைமை.

மனிதர்கள் பகைமையிலிருந்து விடுபடுவது எப்படி? அதற்கும் அல்லாஹ் வழிகாட்டியுள் ளான். இஸ்லாத்துடன் ஐக்கியமாவதன் மூலம் பகைமையை நிரந்தரமாய் ஒழிக்கமுடியும். இது நடைமுறையில் சாத்தியமா?

சாத்தியமே என மானுடத்துக்கு அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான்.

வழிகேடுகளை  இனங்காட்டுதல் :

நேர்வழியைச காட்டியதோடு அல்லாஹ் வழிகேடுகளையும் இனங்காட்டுகிறான். நேர் வழியில் நிலைத்திருந்த நபிமார்கள் பெயர்களையும், சில நல்லடியார்கள் பெயரையும்  சுட்டிக்காட்டுகிறான். வழிகேடுகளை மட்டுமின்றி, வழிகேடர்களையும் அல்லாஹ் அல்குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு இனங்காட்டுகிறான். வழிகேடுகளை இனங்காட்டுவது மட் டுமே வழி கேடுகளை ஒழிக்காது. வழிகேடு களின் காரணகர்த்தாக்களையும் இனங்காட்டி னால்தான், வழிகேடுகளை  முற்றாக  ஒழிக்க  முடியும்.

மனிதர்களும் வழிகேடர்களை இனங் கண்டு எச்சரிக்கையாக இருக்க முடியும். வழி கேடர்களின் வழிகேடுகளிலிருந்து மனிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் முடியும். இதை நாம் பசுமரத்து ஆணியாக நமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

அல்லாஹ் நேர்வழியை உணர்த்துவதைத் தொடர்ந்து வழிகேட்டை இனங்காட்டி எச்சரிப்பது. அல்குர்ஆன் நெடுக காணக் கிடைக்கிறது. நன்மை செய்யப் பணிக்கும் அல்லாஹ் தீமையிலிருந்து தடுத்துக் கொள்வதைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளான். தீமையிலிருந்து மற்றவர்களைத் தடுப்பதையும் மார்க்கம் கட்டாயமாக்கியுள்ளது. (அல்குர்ஆன் 3:104,110)

வழிகேடுகளின்  மூலகர்த்தா :

வழிகேடுகள், தீமைகள்; மாபாதகங்கள் அனைத்தின் மூலவன் ஷைத்தான், இப்லீஸ், ஷைத்தானும் அவன் சந்ததிகளும் மானுடத்தின் கொடிய பகைவர்கள்.

மானுடத்தை ஷைத்தான் வழிகேடுகளில் வீழ்த்தாமலிருக்க மானுடத்துக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையுரைகள்இதோ

1. ஆதம்(அலை), அவர்கள் மனைவி இருவருக் கும் குறிப்பாகவும், மானுடத்துக்குப் பொது வாகவும் அல்லாஹ் ஷைத்தானை பகைவன் என  இனங்காட்டுகிறான்.

(ஆதமே நிச்சயமாக இவன் உமக்கும், உம் முடைய மனைவிக்கும் பகைவன் ஆவான். 

இவன் உங்களிருவரையும் சுவனத்திலி ருந்து வெளியேற்றிவிடக் கூடாது. மேலும் நீங்கள்  துன்பத்திலும்  வீழ்ந்துவிடக்  கூடாது?  (அல்குர்ஆன் 20:117)

2. நபி மூஸா(அலை) அவர்கள் ஆத்திரத்தில் ஒருவரை அநியாயமாக கொன்று விட்டார்கள். (அல்குர்ஆன் : 28:15ன் முற்பகுதி) உடன் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர, 

மூஸா கூறினார் : இது ஷைத்தானின் செயல்:  நிச்சயமாக அவன் கடும் பகைவனும், வெளிப் படையாக வழிகெடுப்பவனுமாவான். (அல்குர் ஆன் 28:15) நபி மூஸா(அலை) இறைஞ்சலை 28:16லும், இறை மன்னிப்பை 28:17லும் காண்க)

ஒரு மாபாதகத்துக்கு நபி மூஸா(அலை) அவர்களை ஆளாக்கியவன் தான் ஷைத்தான். இதைத் தங்கள் சுய அனுபவத்தால் உணர்ந்த நபி மூஸா(அலை) அவர்கள், ஷைத்தான் மனித குலத்தின் கடும் பகைவன் என்றும், வெளிப் படையாக மனித குலத்தை வழி கெடுப்பவன் என்றும்,

தங்கள் பட்டறிவால் ஷைத்தானை இனங் காட்டி எச்சரித்துள்ளார்கள். ஷைத்தானின் மாய வலையில் மனித இனம் சிக்காமல், மனித இனம் உஷாராக, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இதன்மூலம் உணர்த்தப்படும்  படிப்பினையாகும்.

3. வந்த பின் காப்பதைக் காட்டிலும் வருமுன் காப்பது நன்று.

இதை முன்னெச்சரிக்கை இறையுரைகள் 20:117ம், 28:15ம் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

இறை  முன்னெச்சரிக்கையுரை :

ஷைத்தான் பற்றி மனித குலத்துக்கு அல் லாஹ்வின் முன்னெச்சரிக்கையுரை:

உண்மையாக ஷைத்தான் உங்களின் பகைவன் ஆவான்.

நீங்களும் உண்மையில் அவனை உங்களின் (கொடிய பகைவனாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது (வழிகேடான) வழியில் அழைத்துக் கொண்டிருப்பது, அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துவிட வேண்டும் என்பதற்காகத்தான். (அல்குர்ஆன் 35:6)

மனித இனத்துக்கு ஷைத்தான் மட்டுமின்றி அவன் சந்ததிகளும் பகைவர்களே! (அல்குர்ஆன் 18:50)

ஷைத்தானும் அவன் சந்ததிகளும் மனித குலத்துக்கு மட்டுமல்ல. இறையருளிய இஸ்லாத்துக்கும் கடும் பகைவர்களே!

இஸ்லாத்தைப் பகைக்கும் மனிதர்களுக்கு ஷைத்தான் நண்பன். அவன் சந்ததிகளும் நண்பர்கள், இஸ்லாத்தை ஏற்றவர்களை இஸ்லாத்தைப் பகைக்க பகீரத பிரயத்தனம் செய்பவன் ஷைத்தான்! அவன் சந்ததிகளும் கூட அதனால் அல்லாஹ்வும் ஷைத்தானின் பகைமைத் தனத்தைப் பல்வேறு  கோணங்களில் பகிரங்கப்படுத்துகிறான். மனித இனத்துக்கு ஷைத்தான் பகைவன் என்பதை அல்லாஹ்வின் அருளுரை இப்படி எச்சரிக்கிறது. நீங்கள் இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து  வெளியேறி  விடுங்கள்.

Some of you Beeling the Enemies of Others? 

நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருப்பீர்கள்.

நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்:

எவர் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழிதவறவும் மாட்டார்.  நற்பேறிழக்கவும்  மாட்டார்.     (அல்குர்ஆன் 20:123)

தொடரும் அல்லாஹ்வின் முன்னெச் சரிக்கை  உரைகள்: 2:36,168,208, 6:142, 7:22,24, 12:5, 17:53, 18:50, 20:117,123, 28:15, 35:6, 36:60, 43:62.

இருந்தும் முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் மேற்குறித்துள்ள அல்லாஹ்வின் முன் எச்சரிக்கை உரைகளை முறையாகவும், சரியாக அறியவில்லை. அதனால்தான் அந்த அல்லாஹ்வின் முன் எச்சரிக்கை உரைகளிலிருந்து படிப்பினையும் பெறமுடியவில்லை. இனியேனும் முஸ்லிம்கள் அந்த அல்லாஹ்வின் எச்சரிக்கை உரைகளைச் சிரத்தையுடன் ஊன்றிப் படித்து ஆழ்ந்து சிந்தித்துப் படிப்பினை பெற முன்வர வேண்டும்.

மனித இனத்துக்கு இஸ்லாத்தின் மேல் பகை ஏற்படுத்தி மனிதன், மனிதர்கள் என மனித இனத்தை இஸ்லாத்தை விட்டு வெகு சுலபமாய் ஷைத்தான் பிரிந்து வருகிறான். மனித இனத்தில் பெருமளவினர் இஸலாத்தை நிரந்தரமாய் பிரிந்திருக்க ஷைத்தானின் இந்த வழிகெடுக்கும் சூழ்ச்சியே பிரதான காரணம். இதன் மோசமான மாபாதக விளைவுகள்: இறைக்கு இணையாக்குதல்! இறையை நிராகரித்தல்! இறையை மறுத்தல்! இவை போன்ற பிற வழிகேடுகளால் மனித இனத்தை ஷைத்தானும், அவன் சந்ததிகளும் இஸ்லாத்தை விட்டு நிரந்தரமாய்  பிரித்து  வருகிறார்கள்.

சந்ததிகளுடன் இணைந்து ஷைத்தான்:

இறை அருளிய நேர்வழியோடு வழிகேடு களைக் கலப்படம் செய்து வழிகேடுகளுக்கு  கவர்ச்சியூட்டி மனித இனத்தை இஸ்லாத்தை விட்டு பிரிந்து வருகிறான்: சிலபல வழிகேடுகளை நேர்வழி போல் காட்டி இஸ்லாத்தை விட்டு பிரித்தல்: ஒட்டுமொத்த வழிகேடுகளுக்கும், கவர்ச்சியூட்டி மனிதர்களை இஸ்லாத்தை விட்டு பிரித்தல்; ஒட்டுமொத்த வழிகேடுகளுக்கும், கவர்ச்சியூட்டி மனிதர்களை இஸ்லாத்தை விட்டு பிரித்தல்: இவைகள் ஷைத்தானின் வழி கேட்டு  விளையாடல்களில்  சில.

சந்ததிகளுடன் ஷைத்தானின் கவர்ச்சியூட்டும் வழிகேட்டு விளையாடல்கள் எங்கே. எப்போது, எப்படி? வெளிப்பட்டாலும் அவை களிலிருந்து விடுபட அல்லாஹ்வின் எச்சரிக்கையுரைகள் முன்கூட்டியே மனித இனத்தை உஷார்படுத்துகின்றன என்றாலும் இன்னும், முஸ்லிம்களே உஷாராகவில்லை! மனித இனம் எப்போது  உஷாராகும்?

Previous post:

Next post: