ஞானவாபி மஸ்ஜித்!

in 2024 மார்ச்

ஞானவாபி மஸ்ஜித்!

அஹமது இப்ராஹிம்

அடுத்ததாக  விரைவில்  எதிர்பாருங்கள்!

ஞானவாபி  மஸ்ஜித்  விவகாரம் :

இந்திய சங்கிகளுக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவினை இயக்கங்களுக்கும் இனி கொண்டாட்டம் தான்!

பெரும்பான்மையான அப்பாவி ஹிந்துக்களை சங்கிகள் ஏமாற்றி மதவெறியை தூண்டி  அரசியல்  நடத்துவார்கள்!

பதிலுக்கு பள்ளிவாசலை காப்பாற்றப் போகிறோம் என்று கூறி அணியணியாய் இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவினை இயக்கங்கள் மற்றும் தவ்ஹீத் இயக்கங்களின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அரசியல் நடத்துவார்கள்!

இறுதியாக பல முஸ்லிம்களின் உயிர்கள் உடமைகள் ஆகியவற்றை இழந்த பின் உயர்நீதிமன்றம் மூலம் ஞானவாபி மஸ்ஜித் இடிக்கப்பட்டு சங்கிகளிடம் ஒப்படைக்கப்படும்!

அனுபவரீதியாக இழந்த பாபரி மஸ்ஜிதின் வரலாறை  வைத்து  இவ்வாறு  கூறுகின்றோம்!

எனது அருமை இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

இனியும் இந்த தவ்ஹீத் கம்பெனிகள் மற்றும் அகில இந்திய உலமாக்களின் சபை என்ற புரோகிதர்களின் சபைகளின் தூண்டுதலுக்கு ஆளாகாமல் கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனத்தின்படி பொறுமை காக்குமாறு அன்போடு  கேட்டுக் கொள்கின்றேன்.

(முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும், உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக் கப்படுவீர்கள். உங்களுக்கு முன் இறைநூல் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணை வைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைபிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும்.    (அல்குர்ஆன் 3:186)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலை யணையாக வைத்துச் சாய்த்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், (ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புக் கம்பிகளால் அவர் (மேனி) தேய்க்கப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்துவிடும். (ந்தக் கொடூரமான சித்திரவதையும் செய்தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆவிலிருந்துஹளர மவ்த்வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விசயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று கூறினார்கள். புகாரி : 3612. அத்தியாயம் : 61, நபி(ஸல்) அவர்களின்  சிறப்புகள். கப்பாப் இப்னு அல்அரத்(ரழி) அவர்கள் இதை  அறிவித்தார்கள்.

Previous post:

Next post: