முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்-

in 2024 மார்ச்

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 

2024  பிப்ரவரி  தொடர்ச்சி….

இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறித்து அல்லாஹ் அருளிய இறை வசனங்கள் :

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழிகாட்டும் நூலையும், ஞானத்தையும், நபிப்பட் டத்தையும் கொடுத்தபின்னர், அவர் அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள் என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் இறைநூலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், (ந்நெறி)நூலை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப் போர்)களாகி விடுங்கள்‘ (என்றுதான் சொல்லுவார்) மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும், (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா? (அல்குர் ஆன் 3:79,80) என்ன!

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறிய தாவது: நஜ்ரான் நகரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரிமார்களும் யூத மதகுருமார்க ளும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் குழுமியிருந்தபோது இஸ்லாத்தை ஏற் று(க் கொண்டு முஸ்லிமாகிக்) கொள்ளு மாறு அவர்களுக்கு நபியவர்கள் அழைப்பு விடுத்தார்கள். அப்போது பனூ குறைழா வைச் சேர்ந்த அபூராஃபிஉ எனும் யூதர்முஹம்மதே! கிறிஸ்தவர்கள் மர்யமின் குமாரர் ஈஸாவை வழிபடுவதைப் போன்று நாங்கள் உம்மை வழிபட வேண்டும் என்று விரும்புகிறீரா? என்று கேட்டார். உடனே நஜ்ரான் கிறிஸ்தவர்களில் ரிப்பீஸ் என்பவர்முஹம்மதே! எங்களிடம் நீர் அதையா எதிர் பார்க்கிறீர்? அதற்காகவா எங்களை அழைக் கின்றீர்?’  என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்அல்லாஹ் அல்லாதவற்றை வழி படுவதிலிருந்தும் வழிபடுமாறு பிறருக்குக் கட்டளையிடுவதிலிருந்தும் அல்லாஹ் நம் மைக் காப்பானாக. இதற்காக அல்லாஹ் என்னை நபியாக அனுப்பவில்லை இவ்வாறு எனக்கு அவன் கட்டளையிடவில்லைஎன்று கூறினார்கள். அல்லது இதைப் போன்று வேறொன்றைக் கூறினார்கள் இதன் தொடர்பாகவே இந்த (3:79,80) வசனங்கள் அருளப்பெற்றன. (முஹம்மதுபின் இஸ்ஹாக், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்:2:137-141)

இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் அவ்வாறே கட்டளையிடுகின்றான் :

(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின்பால் வழிகாட்டினான். அது மிக்க உறுதியான மார்க்கமாகும். இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும். அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை. (என்றும்) நீர் கூறும். “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். “அவனுக்கு யாதோர் இணையுமில்லை. இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். (அவனுக்கு முற்றிலும்) வழிப்பட்டவர்களில் முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறும்) (அல்குர்ஆன்: 6:162-163) என்பதாக உயர்ந்தோன் அல்லாஹ் இங்கு கட்டளையிடுகின்றான். இந்தச் சமுதாயத்தில் நானே முஸ்லிம்களில் முதலாமவன் என்பதே இதன் கருத்தாகும் என்று கத்தாதா(ரஹ்) அவர்கள் தெரிவித் துள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 3:680-686)

(நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்என்றும் கூறுவீராக. “அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்‘ (என்றும் நீர் கூறுவீராக) (அல்குர்ஆன் 39:11,12) அதாவது, என் சமுதாயத்தாரிலேயே அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவோரில் முஸ்லிம் களில் முதலாமவராக நான் இருக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது என இதற்கு சுத்தீ(ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 7:893,894) மேலும்,

அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார் களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:84) என இவ் வசனம் கட்டளையிடுகிறது. அதாவது:

முஹம்மத்(ஸல்) அவர்களுடைய இந்தச் சமுதாயத்திலுள்ள இறை நம்பிக்கை யாளர்களான முஸ்லிம்கள் ஒவ்வொரு வரும் அனைத்து இறைத்தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் அவ்வாறே அனைத்து இறைநெறிநூலையும் நம்புவார்கள் அவற்றில் எதையும் அவர்கள் மறுக்கமாட்டார்கள் அல்லாஹ்விடமிருந்து அருளப்பெற்ற அனைத்தையும் உண்மை யயன ஒப்புக்கொள்வார்கள் அல்லாஹ் வால் அனுப்பப்பெற்ற எல்லா நபிமார்களை யும் உண்மையாளர்கள் என்று ஏற்பார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 2:145-148)

இந்த ஊரை எவன் கண்ணியப்படுத் தியுள்ளானோ அந்த இறைவனை வணங்கு மாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கும் படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்‘ (என்று நபியே! நீர் கூறுவீராக) (அல்குர்ஆன் 27:91) அதாவது, ஓரிறையை உண்மையாகவே நம்பி அவன் கட்டளைகளுக்கு முற்றிலுமாக அடிபணிந்து கட்டுப்பட்ட முஸ்லிம் களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (தஃப்சீர் இப்னு கஸீர் 6:732-735) அது போலவே;

இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் துணைவியராக இருக்க முஸ்லிம் களான  பெண்களே  தகுதியானவர்கள்:

அவர் உங்களைதலாக்சொல்லிவிட்டால், உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான, கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர், இத்தகைய வரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 66:5) என்பதாக உயர்ந் தோன் அல்லாஹ் வஹி  அருளினான்.

Previous post:

Next post: