அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே நமக்கு அழகிய முன்மாதிரி!

in 2024 ஏப்ரல்

அஹ்மதும் முஹம்மதுமாகிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்)

அவர்களே நமக்கு அழகிய முன்மாதிரி!

அஹமது இப்ராஹீம், புளியங்குடி

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூலில் (அல்குர்ஆனில்)  இவ்வாறு  கூறுகின்றான்:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.”    (அல்குர்ஆன் 33:21)

உண்மையான உறுதியான வாழ்க்கையாகிய மறுமையை நம்பும் முஸ்லிம்களாகிய நாம் நமது இம்மை மறுமை சம்பந்தப்பட்ட அனைத்து வாழ்வியல் நடைமுறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் அழகிய தீர்வாக, முன்மாதிரியாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுத்து அதன்படி நடந்து வந்தோமேயானால் நிச்சயமாக நமது இம்மை மறுமை வாழ்க்கை மிக இனிமையாக அமையும் என்பதில் சிஞ்சிற்றும்  ஐயமில்லை!

ஆனால் இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு பெரும் சோதனையாக RSS சங்கிகளை படைத்து அதன்மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை சோதித்துக் கொண்டிருக்கின்றான் என்ற மாபெரும் உண்மையை நாம் அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள  வேண்டும்.

இது எதுபோல் இருக்கின்றது என்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் தோழர்களுக்கும் இறை நிராகரிப்பாளர்கள் பெரும் துன்பங்களைக் கொடுத்து வந்தபோது அதனை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எப்படி எதிர்கொண்டு அதற்கு தீர்வு கண்டார்களோ அதை அப்படியே நாம் பின்பற்ற வேண்டியது நம் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றத் தவறுவோமேயானால் நிச்சயமாக நமது இம்மை மறுமை வாழ்க்கை பாழாகிவிடும்.

இப்போது இஸ்லாமிய சமுதாயத்திற்கு பெரும் சோதனையும் சங்கிகளான மோடி அமித்ஷா போன்ற RSSகாரர்களுக்கு தொடர் வெற்றிகளும் வந்து குவியக் காரணம் நாம் நமது நபிவழியை விட்டு விலகி மனோ இச்சையை பின்பற்றியதே முழுக்  காரணமாகும். 1949ஆம் ஆண்டில் பாபரி மஸ்ஜிதில் RSSகாரர்கள் கள்ளத்தனமாக நடு இரவில் இராமர் சிலையை கொண்டுபோய் வைத்துவிட்டு அத்துமீறி பூஜை செய்யத் துவங்கியுள்ளனர்.

இதை தடுக்க இயலாத பலவீனமான நிலையில் இருந்த முஸ்லிம்கள் ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மத்தியிலும் மாநிலத்திலும் அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சியாகும்! இந்த சிலைப் பிரச்சினையை தீர்க்க இந்துத்வாவினருக்கு பூஜை செய்துகொள்ள அனுமதியும் முஸ்லிம்களுக்கு தொழத் தடையும் விதித்தது காங்கிரஸ் ஆட்சி! அதேபோன்று பாப்ரி மஸ்ஜித் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று BJPகாரர்களால் இடிக்கப்பட்டபோது  மத்தியில்  ஆண்டதும்  அதே  காங்கிரஸ் ஆட்சிதான்!

முதன் முதலில் பாப்ரி மஸ்ஜிதில் அத்துமீறி அநியாயமாக சிலையை வைத்தவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே சிலையை வைத்து இஸ்லாமிய வெறுப்பு ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து அரசியல் செய்து வருகின்றனர்! இதன் பயனாக பாராளுமன்றத்தில் இரண்டு சீட்டுக்களே இருந்த BJP கட்சி இன்று அசுரபலத்துடன் ஆட்சி அமைக்கும்  அளவுக்கு  பலமாகிவிட்டனர். இதே பாபர் மஸ்ஜிதை வைத்து அரசியல் செய்து அப்பாவி முஸ்லிம்களை வெறி ஏற்றி இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவினைவாத இயக்கங்கள் பெரும் வளர்ச்சியடைந்தன!

இந்த BJPகாரர்கள் இந்த அளவு மிருக பலத்துடன் ஆட்சி அமைக்க முழுமுதற் காரணமே நபிவழியை தவறவிட்ட நமது இஸ்லாமியப் பெயர் தாங்கிய மதகுருமார்களும் அரசியல்  தலைவர்களுமேயாவர்! இந்த இஸ்லாமிய பெயர் தாங்கிய புரோகிதர்கள் அதோ BJPகாரன் இதோ பாஜக என அப்பாவி முஸ்லிம்களை தூண்டுவதும் அதேபோன்று அப்பாவி முஸ்லிம்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள், .எஸ்., .எஸ். தீவிரவாதிகள் என RSS இயக்கத்தினர் ஏமாற்றி தூண்டியும் விடுகின்றனர். இதன்  காரணமாக  இந்தியா  முழுவதும் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு அநேக முஸ்லிம்கள் RSS மற்றும் பயங்கரவாத பாஜகவினர்களாலும் காவல்துறையினராலும்  கொல்லப்படுகின்றனர்!

அப்பாவி இந்துக்களும் பாதிக்கப்படுகின்றனர் :

இதேபோன்று நமது சமுதாயப் பெண்களின் கற்பும் சூறையாடப்பட்டும், நமது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும் முஸ்லிம்கள் வீடுகள் இடிக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் நாசமாகி போனது. இந்தப் பிரச்சினை தீரவும் BJPஐ ஒடுக்கவும் இஸ்லாமியப் பெயர் தாங்கிய இயக்கவாதிகளின் மார்க்க வியாபாரங்களைத் தடுக்கவும் நபிவழியில் தீர்வு தான் என்ன? என்பதைப் பற்றி இங்கு சிறிது பார்ப்போம்!

ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கும் இறை நிராகரிப்பாளர்களுக்கும் நடைபெற்ற ஹுதைபியா உடன்படிக்கையில் நமக்கு ஓர் அழகிய  முன்மாதிரி இருக்கின்றது! இறை நிராகரிப்பாளர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றோம் என்ற ஆணவத்தினால் அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு முழுக்க முழுக்க பாதகமாக அமைகின்றது! இந்த அநியாயமான ஒப்பந்தத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தூதர் வஹியின் அடிப்படையில் ஒப்புக்கொண்டு கையழுத்திட்டார்கள்!

இவ்வாறான அநியாயக்காரர்களான ஏக இறை நிராகரிப்பாளர்களின் முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டு, விட்டுக்கொடுத்ததன் விளைவாக அதற்கடுத்த மூன்றாம் ஆண்டில் இறை நிராகரிப்பாளர்களின் மக்கா நகர் முஸ்லிம்களிடம் வந்தது! இந்த நபிவழியை நமது இஸ்லாமியப் பெயர் தாங்கிய புரோகிதர்கள் பின்பற்றி, காவிகளின் அத்துமீறலை பொறுத்துக்கொண்டு அவர்களின் முட்டாள்தனத்தை ஏற்று பாப்ரி பள்ளிவாசலை அவர்களிடமே விட்டுக் கொடுத்திருந்தால் RSS மற்றும் பயங்கரவாத பாஜக இந்த அளவு வளர்ந்திருக்காது!

ஆட்சியும்  அமைந்திருக்காது!

ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு இந்த பூமி முழுவதும் தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கித் தந்துள்ளான். எனவே வேறு இடத்தில் நாம் தொழுவதற்கு புதுப் பள்ளிவாசல் கட்டி விட்டு பாப்ரி மஸ்ஜிதை நிராகரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுத்திருந்தால், நமது சமுதாயம் இந்த அளவு உயிர்களையும், உடைமைகளையும்  இழந்திருக்காது! இப்போது நீதிமன்றம் மூலமாக பாபரி பள்ளியை இடித்தவர்களுக்கே இடம் சொந்தமாக்கப்பட்டு அங்கே கோவிலும் கட்டப்பட்டு ஆட்சியாளர்களால் திறந்தும் வைக்கப்பட்டு  விட்டன! நாடு முழுவதும் பயங்கரவாத பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர்!

எனவே இப்போதாவது உடனடியாக நாம் செய்யவேண்டியது சாதாரண அப்பாவி இந்துக்களை கோபமடையச் செய்து பயங்கரவாத பாஜக விரிக்கும் வலையில் அவர்கள் வீழ்ந்து விடாதிருக்க நமது இஸ்லாமிய மார்க்கம் கடுமையாகத் தடுத்திருக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம்  போன்றவற்றை  முஸ்லிம்கள்  கண்டிப்பாக  தவிர்க்க  வேண்டும்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம்எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில விசயங்களையும், பார்ப்பீர்கள்என்றார்கள். மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள். இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கி விடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்என்றார்கள்.  புகாரி : 7052

அத்தியாயம் : 92, குழப்பங்கள் (சோதனைகள்)

எனவே வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாசிசவாதிகள் தோல்வியடைய சமுதாயம் ஓரணியில் நின்று வாக்களிக்க வேண்டும்! இயக்கவாதிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் சமுதாயம் ஓரணியிலும், நீங்கள் வேறு வேறுயிலும் நின்றால் சமுதாய வாக்குகள் சிதறடிக்கப்பட்டு அதன் காரணமாக பயங்கரவாத பாசிசம் ஆட்சிக்கு வருவது மிகவும்  எளிதாக  ஆகிவிடும்!

எனவே சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு உண்மைக்கும், நன்மைக்கும் சாட்சியளிக்குமாறு பாசிசத்தை எதிர்த்து வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

Previous post:

Next post: