சமூகம் சீர்கெட  அலட்சியம் காரணமா? அறியாமை காரணமா?

in 2024 ஜூன்

சமூகம் சீர்கெட  அலட்சியம் காரணமா?

அறியாமை காரணமா?

A.N. Trichy.

பொதுவாக ஒவ்வொரு சமூகத்திலும் சீர்கேடு முதலில் சில தனி மனிதர்களிலிருந்தே தொடங்குகிறது. அதுவே அந்த சமூகம் உயிர் துடிப்புடன் இருந்தால் சீரழிந்து போன அந்த தனி மனிதனை அடக்கி வைக்க முடியும். அதனால் சமூகம் முழுவதும் ஒட்டுமொத்தமாகச் சீரழிந்து போகாமல் பாதுகாக்கப்படும்.

ஆனால் தவறு செய்யும் தனி மனித விசயத்தில் அலட்சியமாக இருந்தால் அந்த சீர்கேடு மெல்ல மெல்ல சமூகம் முழுவதும் பரவும்.

இதற்கு உதாரணம், யூதர்களும், அவர்களின் வழிதோன்றல்களும், அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்த சமூகமாக யூத சமுதாயம் இருந்து வருகிறது.

தாங்கள் செய்த தீமைகளிலிருந்து அவர்கள் ஒருவரையயாருவர் தடுக்கவில்லை, அவர்கள் செய்தது மிகவும் கெட்டது”.   அல்குர்ஆன் 5:79

இப்போது இந்த சீர்கேடு இஸ்லாமிய சமுதாயத்திலும் பணம், பதவிக்காக பரவி வருகிறது. இத்தகைய சீர்கேடுகளுக்குஅலட்சியம் காரணமாக? அறியாமை காரணமா?’

சமுதாய தலைவர்களின் (இயக்கங்களின்) சீர்கேடுகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், தவறுகளை கண்டுக்காமல் தொண்டர்கள் அலட்சியமாக இருப்பது முதல் காரணம்.

அடுத்து இவர்களை சமுதாயத்தை காக்கவந்த சிறந்த தலைவர்கள் என்றும், தலைசிறந்த அறிவாளியாகவும் அறியாமையில் மக்களில் பெரும்பாலோர் கருதுவதும் இரண்டாவது காரணமாகும்.

இதன் விளைவை இன்று முஸ்லிம் சமுதாயம் உலகம் முழுவதும் அனுபவிக்கிறது. நற்செயல்கள் புரியுமாறு ஏவி, தீய செயல்களைத் தடுத்து நிறுத்துவது நம்மீது கடமையாகும். ஆனால் அவ்வாறு நாம் செய்யவில்லை. அதன் விளைவு என்னவாக ஆனது என்றால் இறைவன் உங்களிலேயே மிகவும் கீழ்த்தரமான, மிகவும் கேடுகெட்ட நபர்களை தலைவனாக்கி விடுகிறான். அவர்கள் மக்களுக்கு மிகுந்த தொல்லைகளை கொடுப்பார்கள். துன்பங்களை கண்டும், காணாததுபோல் இருப்பார்கள்.

இத்தகைய தவறுக்கு பிறகு நம்மில் உள்ள சில நல்லவர்கள் அத்தீயவர்கலிடமிருந்து விடுதலை வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவார்கள். ஆனால் அந்த இறைஞ்சுதல் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதை இன்று நாம் நம் கண்முன்னே காண்கின்றோம்.

எனவே சீர்கேடுகளை தனி மனிதன் செய்தாலும் சரி, தலைவர்கள் செய்தாலும் சரி, சமுதாயத்தை சார்ந்தர்கள் அதை தடுக்க முன்வரவேண்டும்.

உதாரணமாக: இன்றைய அரசியல் நிலமையை பார்ப்போமானால் அலட்சியமும், அறியாமையும் மிகுந்துள்ளது. எவ்வாறு என்றால்இப்படி எல்லாமா ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர்  பேசுவார்  என்ற  அளவு  நிலைமை மோசமாகிவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 21ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது  பிரதமர்  பேசியது,

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்த நாட்டின் சொத்துகளில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான்  உள்ளது  என்று  கூறினார். 

இதன்  பொருள்  என்ன?

அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) யாருக்குச் சொத்துகளைப் பிரித்து கொடுப்பார்கள்? யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுகொண்டருக்கின்றார்களோ, யார் இந்த நாட்டின் மீது படை எடுத்து  ஆக்ரமித்தார்களோ  அவர்களுக்கே  சொத்துக்களை  பிரித்துக்  கொடுப்பார்கள்?

நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை எல்லாம் ஆக்ரமிப்பாளர்களுக்குத் தருவதை ஏற்றுக் கொள்வீர்களா? வேடிக்கை பார்க்கப் போகின்றீர்களா? இந்த நகர்ப்புற நச்சல்கள் நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக்கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள். அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று பேசியுள்ளார். 

மிக மிக தவறான தகவல்களைச் சொன்னதுடன், வெறுப்பின் உச்சத்திலிருந்து இவ்வளவு தரம் தாழ்ந்து ஒரு நாட்டின் பிரதமரால் பேசமுடியுமா? இவரால் மட்டுமே முடியும். பொய் பேசுவதும்,  வெறுப்பை  உமிழ்வதும்  அவருக்கு கை வந்த கலை.

இத்தகைய பேச்சை பல கட்சி தலைவர்களும், நடுநிலைவாதிகளும் கண்டித்து குரல் எழுப்பினர்.  அவர் மீது தேர்தல் கமிசனில்  புகாரும்  செய்துள்ளனர்.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த சில அரசியல் கட்சி தலைவர்கள் தனிதனியாக பிரிந்து இந்த பேச்சை கண்டிக்காத மாநில கட்சி தலைவருடன் கூட்டணி  வைத்துள்ளார்கள்.

எனவேதான் அழிந்துபோன பல சமுதாயங்களின் நிலைமையை பார்க்கும்படி இறைவன்  எச்சரிக்கிறான்.  மேலும்,

எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் (தவறை) தாமே மாற்றிக் கொள்ளாதவரை இறைவன் அவர்களை (அந்த சமுதாயத்தை) மாற்றுவதில்லைஎன்பதையும் தெளிவுபடுத்தி விட்டான். (அல்குர்ஆன் 13:11)

எனவே அமைப்பு வெறி, அரசியல் ஆதிக்க வெறி, மஸாயில் கருத்து வேறுபாடுகள், பிறை சர்ச்சைகள் போன்ற நவீன கால சீரழிவுகள் முஸ்லிம்களிடையே ஊடுருவியுள்ளது  மாறவேண்டும்.  ஒரே  அமீரின்  கீழ்  வரவேண்டும்.

யூதர்கள் தங்களின் வட்டித் தொழிலுக்காக உருவாக்கிய உயிரற்ற இன்றைய பண பொருளாதாரமும், அதன்மேல் அளவு கடந்த வெறியும், நவீன கல்வியும் சேர்ந்து சமுதாயத்தை அமைதி இழந்த சுயநலமிக்க சமூகமாக மாற்றி வருகிறது. பணத்தின் மோகத்தினாலும், பதவி ஆசையினாலும் சமுதாயம் படுகுழியில் விழுந்து கிடக்கின்றன.

குறிப்பாக இன்றைய இளைஞர்களை பிராய்லர் கோழி போன்று வளர்ப்பதை மாற்றவேண்டும். அதாவது சோசியல் மீடியாவில் (SOCIAL MEDIA) முடங்காமல் காப்பாற்ற வேண்டும்.  எவ்வாறு  என்றால்,

உழைப்பிலும், உற்பத்தியிலும், உறவுகளைப் பேணுவதிலும், பிறருக்கு உதவுவதிலும், இஸ்லாமிய தூய கொள்கை அடிப்படையிலும் இளைஞர்களை கவனம் செலுத்த வைக்கவேண்டும். அப்போதுதான் சமுதாயத்தின் சீர்கேடுகளுக்கு காரணமான அலட்சியமும், அறியாமையையும் நீக்க முடியும்.  இன்ஷா அல்லாஹ்!  துஆச் செய்வோம்.

Previous post:

Next post: