துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும்! அந்நாட்களின்  சிறப்பும்!!

in 2024 ஜூன்

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும்!

அந்நாட்களின்  சிறப்பும்!!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

விடியற்காலையின்  மீது  சத்தியமாக!   (89:1)

ஃபஜ்ர்எனும் சொல்லைப் பொறுத்தவரையில் அது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதிகாலை, விடியற்காலை என்பதுதான் மஸ்ரூக்(ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. “விடியற்காலைஎனும் இந்த வார்த்தை (துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளின்) அதிகாலையை மட்டும் குறிக்கும் அதுதான் பத்து நாட்களின் இறுதி நாள் ஆகும். இதுதான் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், இப்னு ஸுபைர்(ரழி) அவர்கள், மற்றும் முஜாஹித்(ரஹ்) அவர்கள் போன்ற ஆரம்ப காலச் சான்றோர்களில் ஒன்றுக்கும் அதிகமானோரின் கருத்தும் ஆகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 10:226-232, 6:58-65) மேலும், “அல்ஃபஜ்ர்என்பதற்குவைகறைப் பொழுதுஎன்று பொருள் என்பதாக இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (புகாரி: 5, பக்கம் 749, (89ஆவதுஅல்ஃபஜ்ர்அத்தியாயத்தின் சிறு குறிப்பு : முதலாவது)

பத்து  நாட்களின்  மீதும்  சத்தியமாக!  (89:2)

பத்துநாட்கள் என்றால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது; துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் எனும் இந்நாட்களில் செய்யப்படும் எந்த நல்லறமும், அதில் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யப்படும் எந்த நல்லறமும், அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவை ஆகும். (அதைவிட நல்லமல்கள் செய்வதற்கு அல்லாஹ்வுக்கு அதிகப் பிரியமான காலமாக) வேறு எந்த நாட்களும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில்ஜிஹாத்எனும் அறப்போர் செய்வதைக் காட்டிலுமா? என்று கேட்டனர். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதைக் காட்டிலும் தான். ஆனால் எந்த மனிதன்தனது உயிரையும், பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறை வழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாத்தைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். (புகாரி: 969, திர்மிதி: 688, தஃப்சீர் இப்னு கஸீர்: 10:226-239, 6:58-65) மேலும்;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்இந்த (துல்ஹிஜ்ஜா முதல்) பத்து நாட்கள் ஏனைய நாட்களை விட அல்லாஹ்விடம் மிகவும் மகத்துவமிக்கவையாகும். அவ்வாறே இந்தப் பத்து நாட்களில் செய்யும் நற்செயல்கள் வேறு நாட்களில் செய்யும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவையாகும். எனவே நீங்கள் அந்நாட்களில் அதிகமாகலா இலாஹ இல்லல்லாஹ்என்றும், “அல்லாஹு அக்பர்என்றும்அல்ஹம்துலில்லாஹ்என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். (அறிவிப்பவர் கள்: இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு உமர்(ரழி), மஸ் உஸ்ஸவாயித், முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு  கஸீர்: 6:58-65)

பத்து  நாட்கள்  என்பது  துல்ஹஜ்  மாதத்தின்  முதல்  பத்து   நாட்களாகும்:

ஜாபிர்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: “பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களாகும்ஒற்றை என்பதுஅரஃபாநாள் ஆகும். இரட்டை என்பது துல்ஹஜ் மாதத்தின் குர்பானி கொடுக்கும் பத்தாம் (யவ்முந் நஹ்ர்) நாள் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், மேலும், இப்னு அப்பாஸ்(ரழி), இமாம் அஹ்மது(ரஹ்), நஸஈ(ரஹ்), இப்னு அபீ ஹாத்தம்(ரஹ்) ஆகியோரும் இதனைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.(தஃப்சீர் இப்னு கஸீர்: 10:226-239, 6:58-65)  அத்துடன்,

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்கு நெறிநூல்  வழங்கப்பெற்ற  நாள்:

(சினாய் மலைக்கு வந்துதவ்ராத்நெறிநூலைப் பெற்றுச் செல்வதற்காக) மூஸாவுக்கு நாம் முப்பது நாட்களை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம். (7:142) என்பதில்; அந்த முப்பது நாட்களும் மூஸா(அலை) அவர்கள் உண்ணா நோன்பு இருந்தார்கள். அந்தக் கால அளவு நிறை வடைந்ததும் ஒரு மரத்தின் பட்டையால் பல் துலக்கினார்கள். ஆனால் மேற்கொண்டு பத்து நாட்கள் நோன்பு நோற்று நாற்பது நாட்களாக நிறைவு செய்யுமாறு அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் : 3:884,885, 6:58-65)

நாற்பது  நாள்  தவணை :

பின்னர்  பத்தைச் சேர்ந்த அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம்  (7:142) எனும் வசனத்தில் இடம்பெற்றுள்ளவாக்களிக்கப்பட்ட முப்பது நாட்கள் என்பது துல்கஃஅதா மாதத்தின் முப்பது நாட்கள் என்றும், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்தான் என்றும்பத்துஎன்பது இந்தப் பத்து நாட்களையே குறிக்கும் என சான்றோர்களில் உள்ள இப்னு அப்பாஸ்(ரழி) உள்ளிட்ட சிலரும் கூறியுள்ளார்கள். இதுவே இமாம் ஷாஃபிஈ(ரஹ்), இமாம் அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்) ஆகியோரின் பிரபலமான கூற்றுமாகும். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 3:884,885, தஃப்சீர் இப்னு கஸீர்: 6:58-65)

இறைத்தூதர் முஸா(அலை) அவர்கள் இறைவனுடன்  உரையாடிய  நாள்:

இதன்படி இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த கால அளவு துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று (யவ்முந் நஹர்) நிறைவடைந்தது. அன்றைய நாளில்தான் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வுடன் உரையாடும் பெரும் பாக்கியம் கிடைத்தது. அதே நாளில்தான் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் (இஸ்லாமிய) மார்க்கத்தை முழுமையாக்கினான்.

மார்க்கத்தை  முழுமையாக்கிய  நாள் :

இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டுவிட்டேன். (5:3) என்ற வசனம் அன்றுதான்  அருளப்பெற்றது.

தாரிக்  இப்னு யுஹாப்(ரஹ்) அறிவித்தார். யூதர்கள் உமர்(ரழி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்என்று கூறினர். அதற்கு உமர்(ரழி) அவர்கள், “அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியதுஅது இறங்கிய வேளையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாளில் இறைத் தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதை எல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம் என்றார்கள். (புகாரி: 4606,7268, 45, 4407, 4606, அத்தியாயம்: 65 திருக்குர்ஆன் விளக்கவுரை, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 3, பக்கம் 42,43) ஆக,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களும் நோன்பு நோற்று வந்தார்கள் என்று ஒரு ஹதீதில் பதிவாகியுள்ளது. அதனை அறிவிப்பவர் : ஹஃப்ஸா(ரழி), நஸயீ, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 3:884,885, தஃப்சீர் இப்னு கஸீர்: 6:58-65) துல்ஹஜ் மாதத்தின் இந்த ஆரம்ப பத்து நாட்கள் அரஃபா ஒன்பதாவது நாளை  உள்ளடக்கியவை  ஆகும்.

இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக!   (89:3)

அதாவது: ஒற்றை என்பது அரஃபா நாள் ஆகும். ஏனெனில் அது ஒன்பதாவது நாளாக உள்ளது. (ஒற்றைப்படையானதையே அல்லாஹ் விரும்புகின்றான். அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ் ஒற்றையானவன், ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2736, 6410, 7392, முஸ்லிம்: 5198, 5199, தஃப்சீர் இப்னு கஸீர்: 10:226-239)) இரட்டை என்பது குர்பானி கொடுக்கும் நாள் ஆகும். ஏனெனில் அது பத்தாவது நாளாக உள்ளது என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், மற்றும் பலரும் பலவிதமாகக் கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 10:226-239, 6:58-65) மேலும், முஜாஹித் பின் ஜப்ர்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (89:3)ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளஅல்வித்ர்ஒற்றை எனும் சொல் அல்லாஹ்வைக் குறிக்கிறது. (புகாரி: 5, பக்கம் 749, (89ஆவதுஅல்ஃபஜ்ர்அத்தியாயம்) மேலும்,

ஜாபிர்(ரழி) அவர்கள் கூறியதாவது: “வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகள் மீதும் ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாகஎனும் (89:1-3) வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கையில்பத்து இரவுகள் என்பது துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து இரவுகளாகும் ஒற்றை என்பது இந்த மாதத்தின் ஒன்பதாம் நாள் (யவ்முல் அரஃபா) ஆகும். இரட்டை என்பதை பத்தாம் நாள் (யவ்முந் நஹ்ர்) ஆகும்என்று குறிப்பிட்டார்கள். (முஸ்னது அஹ்மத்)

தஃப்சீர் இப்னு கஸீர்: 6:58-65) இவ்வாறே துல்ஹஜ் மாதத்தின் இந்த (ஆரம்ப) பத்து நாட்கள் அரஃபா (ஒன்பதாவது) நாளையும் உள்ளடக்கியவை ஆகும். இது குறித்து;

அபூ கத்தாதா அல் அன்சாரீ(ரழி) அவர்கள் கூறியதாவது: அரஃபா நாளில் நோன்பு நோற்பது குறித்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அதைப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்என்று கூறினார்கள். (முஸ்லிம்: 2151, 2152 தஃப்சீர் இப்னு கஸீர்:6:58-65) மேலும் இவ்வாறே, இந்தப் பத்து நாட்கள் பெரிய ஹஜ்ஜுடைய நாளானயவ்முந் நஹ்ரையும்‘ (பத்தாவது நாள்) உள்ளடக்கியுள்ளது.

நாட்களிலேயே அல்லாஹ்விடம் மகத்துவமிக்க நாள் (துல்ஹிஜ்ஜா) பத்தாம் நாளே என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீதில் வந்துள்ளது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் குர்த்(ரழி), அபூதாவூ,த் முஸ்னது அஹ்மத், தஃப் சீர் இப்னு கஸீர்: 6:58-65) ஆக ஓர் ஆண்டின் ஒட்டுமொத்த நாட்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவை இந்தப் பத்து நாட்களே என்று சிலர் கூறுகின்றனர். ஆதாரபூர்வமான  ஹதீதும்  அவ்வாறே  உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் மிக மகத்தானதும், இன்னும் நல்லமல்களில் அவனுக்கு மிக விருப்பமானதாகவும் இருக்கின்ற நாள்கள் இந்த (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நாள்களை விட வேறு நாள்கள் இல்லை. ஆகவே, அவற்றில் அதிகம்தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ்) தக்பீர் (அல்லாஹு அக்பர்), தஹ்மீது (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்  (ஆதாரம் : முஸ்னது அஹ்மது 6154) நாட்களிலேயே அல்லாஹ்விடம் மகத்துவமிக்க நாள் துல்ஹஜ் பத்தாம் நாளே என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் குர்த்(ரழி), அபூதாவூத், முஸ்னது அஹ்மத். தஃப்சீர் இப்னு கஸீர்: 6:58-65)  இவ்வாறே;

இப்னு உமர்(ரழி), அபூஹுரைரா(ரழி) ஆகியோர் இந்தப் பத்து நாட்களில் கடைவீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும்போது மக்களும் அவர்களுடன் (சேர்ந்து) தக்பீர் சொல்வார்கள். முடிவில்மினாதக்பீர் முழக்கத்தால் அதிரும். மேலும், (புகாரி: பாகம் ஒன்று பக்கம், 731, பாடம் 11இன் குறிப்புரையில், “அய்யாமுல் தஷ்ரீக்எனும் துல்ஹஜ் 11,12, 13 ஆகிய நாட்களில் நல்லறங்கள் செய்வதன்  சிறப்பு  எனும்  தலைப்பிட்டு;  

அறிமுகமான நாட்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர்வர்என்ற (22:28) வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் எனவும், “குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினைவு கூறுவார்கள்.’ (2:22) என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் எனவும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். மற்றும் 732, பாடம்:12-ன் குறிப்புரை, தஃப்சீர் இப்னு கஸீர்: 6:58-65)

புகாரி: பாகம் ஒன்று, பக்கம் 732, பாடம் 12-ல், “துல்ஹஜ்‘ 10,11,12,13 ஆகிய மினாவின் நாட்களிலும், அரஃபாவுக்குப் புறப்படும் போதும் தக்பீர் கூறுவது எனும் தலைப்பிட்டு இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் கொண்டுவரும் அறவிப்பாவது: உமர்(ரழி) அவர்கள் மினாவில் தமது கூடாரத்தில் தக்பீர் கூறுவார்கள். அதைப் பள்ளியில் உள்ளவர்கள் செவியுற்று அவர்களும் தக்பீர் கூறுவார்கள். மேலும் கடைவீதியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். முடிவில்மினாதக்பீர் முழக்கத்தால் அதிரும் மேற்கண்ட நாட்களில் தொழுகைக்குப் பிறகும், படுக்கையிலும், கூடாரத்திலும், அமரும் போதும், நடக்கும்போதும், இப்னு உமர் (ரழி) அவர்கள் தக்பீர் கூறுபவர்களாக இருந்தனர். மேலும், மைமூனா(ரழி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தக்பீர் கூறுபவர்களாக இருந்தனர். அபான் பின் உஸ்மான், உமர் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரைப் பின்தொடர்ந்துதஷ்ரீக்உடைய நாட்களின் 11,12,13 இரவுகளில் ஆண்களுடன் பெண்களும் பள்ளியில் தக்பீர் கூறுபவர்களாக இருந்தனர். (புகாரி பாகம் ஒன்று, பக்கம் 732, பாடம் 12)

இந்தப் பத்து நாட்களும் நோன்பு நோற்று வந்த  நபியவர்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களும் நோன்பு நோற்று வந்தார்கள் என்று ஒரு ஹதீதில் பதிவாகியுள்ளது. அதனை அறிவிப்பவர்: ஹஃப்ஸா(ரழி), நஸயீ, முஸ்னது அஹ்மத்(தஃப்சீர் இப்னு கஸீர்: 6:58-65) 

எனவே இறைத்தூதர்(ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் இந்தப் பத்து நாட்களும் அதிகமான நல்லறங்கள் செய்வதற்கு ஏக இறைவன் சந்தர்ப்பங்களை  ஏற்படுத்தித்  தருவானாக!

Previous post:

Next post: