கவனம்! பெற்றோரே கவனம்!!
M. சையத் முபாரக், நாகை
மனிதனைத் தவிர, நிலத்தில் வாழும், நீரில் வாழும், வானில் பறக்கும் அனைத்து உயிரி னங்களும் தனது குட்டிகளை, குஞ்சுகளை சிறிது காலம் பாதுகாத்து வளர்க்கின்றன. அந்தக் குட்டிகளும் குஞ்சுகளும் பெற்றோரின் பாதையில் நடந்து, பக்குவம் அடைந்ததும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன.
ஆனால், நம் (மனித) இனத்தில் மட்டும் பெற்றோரை, சுற்றத்தாரைப் பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்வதுடன், அவர்கள் நேர்த்தியாக வளர பெற்றோர்களின், மற்றவர் களின் வழிகாட்டலும், பயிற்சியும் தேவை யாக இருக்கின்றன. சுற்றுப்புறச் சூழலும் குழந்தைகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன.
கருவறையில் பயிற்சி :
நல்ல குழந்தை வேண்டி துஆ கேட்பதற் கும், குழந்தை ஒழுக்கசீலராக வளரவும், இம்மை மறுமை நற்பேறுகளைப் பெறவும் பெற்றோர் (கணவன், மனைவி) மார்க்கப் பற்று மிக்கவர்களாக கல்வியறிவு பெற்றவர் களாக இருக்க வேண்டும். தாய் குர்ஆன் ஓது வதை, கேட்பதை; துஆ கேட்பதை; திக்ர் செய்வதை; தொழுவதை; பேசுவதை; கருவுள்ள குழந்தை உள்வாங்கி மனதில் பதிய வைக்கிறது. குழந்தை பிறந்து வளரும்போது அல்குர்ஆனை இனங்காண்கிறது. மார்க்கப் பற்றும், வழிபாட்டு முறைகளும் அதற்கு பழக்கமாகிவிடுகிறது. அதனால் இஸ்லாத்தை அறிய ஆர்வமும், அதைச் செயல்படுத்த பக்கு வமும் ஏற்படுகிறது. இதன்மூலம் நமக்காக துஆ செய்யும் பிள்ளைகளாக மாறுகிறது.
“என்னை படைத்தாள்பவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நீசெய்த அருட்கொடை களுக்கு நன்றியுடன் நடக்கவும், நீ திருப்திக் கொள்ளும் நற்காரியங்களைச் செய்யவும் எனக்கு நல்லுதவி செய்வாயாக! எனக்காக என் சந்ததிகளுக்கும் தொடர்ந்து அருள் செய்வாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாவேன்” (அ.கு.46:15)
“என்னைப் படைத்தாள்பவனே! தொழு கையை நிலைநிறுத்துவோராக என்னையும் என் சந்ததியையும் ஆக்குவாயாக! எங்கள் இரட்சகனே! என் பிரார்த்தனையையும் ஏற்பாயாக! எங்கள் இரட்சகனே! என்னையும் என் பெற்றோரையும், இறை நம்பிக்கையாளர் களையும் கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!” (14:40,41)
நற்குணங்களைப் போதித்தல் :
நமது சுற்றுச் சூழல் இஸ்லாமிய ரீதியில் இருப்பது நல்லது. மிக முக்கியமாக நமது இல்லம் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேண்டும். வீட்டில் நுழையும்போது துஆ, வீட்டிற்கு சலாம்; வீட்டிலிருந்து வெளி யேறும்போது துஆ; எந்தச் செயலை ஆரம்பித் தாலும் பிஸ்மில்லாஹ் சொல்லுதல்; நல்ல பேச்சு பேசுதல்; உண்பதில் குடிப்பதில் வலது கரத்தைப் பயன்படுத்துவது. இப்படியானச் சூழலை வீட்டினருக்கு உருவாக்கவேண்டும். ஏழைகளுக்கு உணவு, உடை, பொருள், பணம் கொடுப்பதை குழந்தைகளிடம் கொடுத்து கொடுக்கச் சொல்வது; நற்செயல் களைச் செய்ய ஆர்வமூட்டுவது; சொர்க்கம் செல்லும் வழியில் நடக்கச் செய்வது, நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடிடச் செய்வது; பாவச் செயல்களின் பக்கம் போகா மலிருக்கச் செய்வது; அல்லாஹ்விற்கு திருப்தி தரும் செயல்களைச் செய்யச் செய்வது; அல்லாஹ்விற்கு விருப்பம் இல்லாத செயல்களைத் தவிர்ப்பது போன்றவற்றை பிள்ளை களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். நமது பழக்கவழக்கங்களை, நடவடிக்கைகளை குழந்தைகள் கிரகித்துக் கொள்வார்கள் என்பதால் நமது செயல்களில் இஸ்லாமியப் பண்பாடு மிளிர வேண்டும். ஈமானும், வணக்க வழிபாடுகளும், இஸ்லாமிய நற்பண்புகளும் நம்முள் குடியிருக்க வேண்டும். அவைகள் தாம் நம்மிடமிருந்து குழந்தைகளுக்கு இடம்பெயர்கின்றன. உண்மை பேச வேண்டும், கேலியாகக் கூட பொய் பேசக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். பொருளை எடுக்க, கொடுக்க வலது கரத்தைப் பயன்படுத்துவது, சுத்தமாக இருப்பது, உறவை பேணுவது, ஏழைகளுக்கு உதவுவது, எளியவர்களை அரவணைப்பது, துன்பமுற்றோரை ஆறுதல்படுத்துவது, நோயாளிகளை விசாரிப்பது போன்ற பண்பு களை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். பகைமை, பொறாமை, கோபம், கோல், புறம், அவதூறு போன்ற ஷைத்தானியக் குணங்கள் பிள்ளைகளைத் தீண்டாதிருக்க பக்குவமாக வளர்க்க வேண்டும்.
குர்ஆனில் (நல்ல) கல்வி கற்பித்தல் :
இறையச்சம் மிக்க, சிறந்த மார்க்க அறிவு பெற்ற, நற்குணங்கள் நிறைந்த முஃமினை குழந்தையாக தனது குழந்தை இருக்கவேண்டும் என விரும்பும் தாய், குழந்தை கருவறையில் இருக்கும்போதே பாடம் எடுப்பாள் என் பதை ஆரம்பத்தில் பார்த்தோம். அதன் அடுத்தபடியாக குழந்தை பிறந்து வளர்ந்து வருகின்ற போது, அதற்கு டிவி, செல்போன் போன்ற வற்றை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக குர்ஆனில் எழுத்துக்களைக் கற்றுக் கொடுத்தால் உடனடியாக கிரகித்துக்கொள்ளும். வண்ண வண்ண (கலர்) படங்கள் நிறைந்த புத்தகங்களைக் காண்பிக்கலாம். பேச ஆரம் பிக்கும்போது வண்ணப் படங்களைச் சுட்டிக் காட்டிப் பெயர்களைச் சொல்லச் செய்யலாம். படிக்க ஆரம்பிக்கும்போது நல்ல புத்தகங்களை படித்துக் காண்பிக்கலாம், படிக்கச் சொல்லலாம். இது புத்தகம் வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும். நாம் டிவி பார்த்துக் கொண்டு, செல்போனை நோண்டிக்கொண்டு பிள்ளைகளிடம் புத்தகங்களைப் படிக்கச் சொன்னால் படிக்குமா? நமது செயலைக் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்; அதன்படிதான் செயல்படுகிறார்கள். ஆனால், நாம் அதில் கவனம் இல்லாமல் இருக்கிறோம். குழந்தை களோடு நெருக்கமாக அவர்களாகவே நாம் மாறவேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். அவர்களை வெளியில் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி அறிந்து ஆராயச் சொல்ல வேண்டும். இவை களுக்கெல்லாம் நாம் நேரம் ஒதுக்கவேண்டும்.
தொழுகையில் ஈடுபாடு :
வீட்டில் தாய், தந்தை, பாட்டி மற்றும் குடும்பத்தினர் தொழுவதைக் காணும் குழந்தை முதலில் முதுகில் ஏறுவது, குறுக்கே படுப்பது போன்ற இன்னல்களை, இடையூறு களைத் தந்தாலும், அடுத்து நாம் செய்வதைப் போன்றே செய்யமுயற்சிக்கும். நாம் பயிற்சி கொடுத்து பக்குவப்படுத்த வேண்டும். தந்தை, அப்பா (பாட்டனார்) பிள்ளைகளைப் பள்ளி வாசலுக்கு அழைத்துச் சென்று ஜமாஅத்துடன் தொழ வழிகாட்டவேண்டும். எல்லாவற்றையும் அல்லாஹ்விடமே (துஆ) கேட்க வேண்டும் என்ற உணர்வை விதிக்க வேண்டும். சிறுவர்கள் பள்ளிக்கு வந்தால் திட்டும் பல ஜமாஅத் நிர்வாகிகள் இருக்கின்றனர். சிறுவர்களை ஈர்க்கும் இடமாக பள்ளிவாசல்கள் இருக்க வேண்டுமே தவிர வெறுக்கும் இடமாக மாறிவிடக்கூடாது.
குர்ஆனிய முஃமினான விதைக்க தாழ்வு மனப்பான்மையா?
குழந்தைகள் செய்யும் செயல்கள் எல்லாம் தாயின் பொறுமையை சோதிப்பதாக, பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால், குழந்தைகள் செய்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது; ஆராயும் மனோபாவம் இருக்கிறது; வளர்ச்சி இருக்கிறது. அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வொன்றையும் செய்து பார்க்கிறார்கள். நாம்தான் பொறுமையாக அன்பாக, பாசமாக, அரவணைப்பாக அவர்கள் செய்யும் செயல் களிலுள்ள சரி, தவறை பிரித்து உணர்த்த வேண்டும். ஆரம்பத்தில் பிடிவாதமாக அடம் பிடிக்கும் குழந்தைகள் காலப்போக்கில் நமது பேச்சைக் கேட்கும். ஒரு பொருளைத் தூக்கி வீசினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் சொல்லவேண்டும். பிள்ளைகளுக்கு முதலில் புரியாவிட்டாலும் பல தடவைச் சொல்லும்போது புரிந்து தவிர்த்துகொள்ளும். நாம் டிவி, செல்ஃபோன் பார்த்துக் கொண்டோ, வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ குழந்தைகளையும் கவனிக்கும்போது, குழந்தையின் குறும்பு நமக்கு எரிச்சலை, கோபத்தை உண்டாக்கும். நாமும் குழந்தை யாக மாறி, அவர்களுடன் விளையாடும் போது எரிச்சல், கோபம் ஏற்படாது. அவர்கள் மீது அன்பு செலுத்தி, அரவணைத்து, பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை நாம் ஊட்டி அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும்போது ஆளுமைத் திறனுடையவர்களாக மாறுகிறார்கள். அவர் களின் பேச்சை காது கொடுத்துக் கேட்பதும், அவர்களின் நற்செயல்களைப் பாராட்டுவதும் அவர்களை ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொள்ளச் செய்து ஆளுமைத்திறனை அதிகரிக்கும். அதல்லாமல், அதிகாரம் செய்வது, அதிரடியான கோபக் குரலில் பேசுவது, திட்டுவது, அடிப்பது, தண்டிப்பது, பயமுறுத்துவது, அந்நியப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது, அவமானப்படுத்துவது குழந்தைகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதீத அன்பு செலுத்துவதோ, சிறுசிறு வியங்களுக்கெல்லாம் அதிகமாக கண்டிப்பதும், தண்டிப்பதும் குழந்தைகளை அடம்பிடிக்க, பிடிவாதமாக இருக்கச் செய்யும். மேற்கண்டவைகள் மூலம் தாழ்வு மனப்பான்மை உருவாகும். அவர்களின் தவறுகளை தனிமையில் கண்டிக்கும் போது, அவர்களின் தவறை உணரச் செய்யும். நடுநிலையான போக்கை மேற்கொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
நல்ல முன்மாதிரி :
நாம் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத யார் யாரையோ ரோல்மாடலாக (முன்மாதிரியாக) எடுத்துக் கொள்கிறோம். ஆனால், நமது குழந்தைகளோ நம்மை (பெற்றோரை) ரோல்மாடலாகப் பார்க்கிறது. அதனால், இஸ்லாமிய உணர்வு மிக்கவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வோம். இஸ்லாமிய வரலாற்றை, இஸ் லாத்தில் முன்மாதிரியாக இருந்தவர்களை நாம் உள்வாங்கி குழந்தைகளுக்கு அதை போதிப்போம். கதைகளாக சொல்வோம். நல்ல புத்தகங்களைப் படிக்கச் செய்வோம். குழந்தைகளின் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் அதன் மகிழ்ச்சி, வளர்ச்சி, ஆராய்ச்சி இருக்கிறது. ஆனால், நாமோ வித்தைக்காரன் குரங்கை ஆட்டி வைப்பது போல நாம் நமது குழந்தைகளை அதட்டி நம் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கிறோம். குழந்தையின் மனதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இப்படி இருந்தால் நம் பிள்ளைகள் நம்மிடமிருந்து தப்பித்துச் செல்லவே முயலும். விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளை தெருவில் தந்தை வருவதைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொள்ளும். அதற்குக் காரணம் பயம். ஆனால், நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பில் வளர்ந்த இரு பிள்ளைகளை நாம் இங்கு பார்ப்போம்.
ஜைத் பின் ஹாரிஸா(ரழி) அடிமையாக இருந்த இவரை கதீஜா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள். ஜைதின் தந்தை ஒரு குலத்தின் தலைவர். தன் மகனைத் தேடித் தேடி அலைந்து மக்காவில் நபி(ஸல்) அவர்களிடம் இருப்பதை அறிந்து வந்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆனால், ஜைத்(ரழி) அவர்களோ நபி(ஸல்) அவர்களு டன்தான் இருப்பேன் எனக்கூறி தந்தையுடன் செல்ல மறுத்து விடுகிறார்.
அலி பின் அபூதாலிப்(ரழி) அவர்களை, நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்றபோது தனது படுக்கையில் படுத்துக் கொள்ளும்படிச் சொன்னார்கள். தான் கொல்லப்படலாம் என்ற நிலையிலும் அலி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பதிலாக அவர்களின் படுக்கையில் படுத்தார்கள்.
இவைகள் நபி(ஸல்) அவர்களின் வளர்ப் பின் ஆளுமையை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களைக் கட்டிப் போட்டிருந்தன. நாமும் நமது குழந்தைக ளுக்கு இப்படிப்பட்ட இஸ்லாமிய ஹீரோக் களை முன்மாதிரியாக்கி, நற்பண்புகள் மிக்கவர்களாக வளர்ப்போம்.
குழந்தைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை நாம்தான் சிறந்தமுறையில் உரு வாக்க வேண்டும். அதனால் நாம் நல்லொழுக் கத்தைக் கற்போம்! அதனைப் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்!! இரு உலகிலும் வெற்றி பெறுவோம்!! அல்ஹம்துலில்லாஹ்