தொழுகையில் சலிப்பா?

in 2025 ஏப்ரல்

தொழுகையில் சலிப்பா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

பொதுவாக மனிதர்களில் பெரும்பாலோருக்கு சில நேரங்களில், ஒரே வேலைகளை தொடர்ச்சியாக செய்வது மூலம் சோர்வும், சலிப்பும் ஏற்படுவதுண்டு. ஒருசிலர் மட்டுமே அபூர்வமாக சலிப்பு அடையாமல் இருப்பார்கள். பெரும்பான்மையானவர்களுக்கு  சலிப்பு  வரத்தான்  செய்யும்.

அவ்வாறு  வருவதற்கு  காரணம் :

1. எதிர்பார்த்தது நடக்காமல் (இறைவனிடம் கேட்டும் நிறைவேறாமல்) போனால் சலிப்பு ஏற்படும்.

2. ஏதேனும் பொருளாதார நஷ்டம் எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டால் சலிப்பு ஏற்படும்.

3. நெருங்கிய உறவின் உயிரிழப்பினால் துக்கத்தின்  காரணமாக  சலிப்பு  ஏற்படும்.

4. எந்த வி­யத்திலாவது அல்லது யார் மீதாவது கோபம் ஏற்பட்டுவிட்டால் சலிப்பு ஏற்படும்.

5. எவராவது நம்மை அவமானப்படுத்தி விட்டால் “”சேஎன்ன வாழ்க்கை இதுஎன்பது  போல  சலிப்பு  ஏற்படும்.

6. சில காரணங்களால் மன நிம்மதி இழந்து நடந்த சம்பவங்களையே திரும்ப, திரும்ப மனதில் தோன்றி என்னால் மீளமுடிய வில்லை, தாங்கி கொள்ள முடியவில்லை என்பதும்  சலிப்புக்கு  காரணம்.

இத்தகைய சூழ்நிலையிலிருந்து மீள நாமாகவே விரைவில் இயல்பு நிலைக்கு மாற வேண்டும். அதற்கு முதலாவதாக சில மாற்று செயல்களை செய்யவேண்டும். அதாவது வேற்று இடங்களுக்கு (புதிய இடங்களுக்கு) சென்று வந்தால் அந்த நிகழ்வுகள் மறக்கக் கூடிய  வாய்ப்பு  உண்டு.

அல்லது, 

அன்பிற்குரிய  சிலரிடம்  சொன்னால்,

அட…. சே! இதுக்கு போயா? இப்படிஎன்று சொல்லும் சில ஆறுதல் வார்த்தைகளில் பல கவலைகள் பறந்து போய்விடும்.

அல்லது  சில வகை நூல்களை படித்தால் மனச் சோர்வையும்,  கவலைகளையும்  மாற்றும்.

இதற்கு மாறாக எதையும் செய்யாமல் சுருண்டு போய் அமர்ந்துவிட்டால் அடுத்து ஒன்று (புதிய கவலை) உங்களை தாக்க ரெடியாக  காத்திருக்கும்.

இதுவரை நாம் சொன்னது பொதுவானது.

பல நபிமார்களுக்கே கவலை, துக்கம், சோம்பல், சிரமம் ஏற்பட்டுள்ளது என்பதை இறைநூலில்  காணலாம்.

உதாரணமாக :  பார்க்க வசனம் :

நபி(ஸல்) அவர்களுக்கு கவலை -3:176, 6:33

மூஸா(அலை) அவர்களுக்கு கோபம்– 7:150

லூத்(அலை) அவர்களுக்கு கவலை – 11:77

யாகூப்(அலை) அவர்களுக்கு கவலை– 12:13

எல்லாவற்றிலும் எப்படி சலிப்பு ஏற்படுமோ அதுபோலதொழுகையில் சலிப்புஏற்படத் தான் செய்யும். ஆனாலும் சிலர் இதற்கு விதிவிலக்காகவும் உள்ளார்கள். நமக்குதொழுகையில் சலிப்புஏற்படும்போது விதிவிலக்காக இருக்கும் அடையாளம் கண்டு அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

அவர்கள்  யார்?

நம் வட்டத்தில் எவரும் இல்லாமலா போவார்கள், நிச்சயம் இருக்கிறார்கள் இருப்பார்கள். அவர்களை (தவறாது தொழுபவர்களை) தேடிப்பிடித்து நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இதை அல்லாமல் வேறு சில வழிமுறைளையும் நாம் பின்பற்ற வேண்டும். இல்லையயன்றால் அடுத்த கட்டத்திற்கு நம்மை கொண்டு சென்றுவிடும். அதாவது தொழுகையில் சலிப்பு என்பது பின்புவெறுப்புஎன்கிற நிலைக்கு கொண்டு போய்விடும். அல்லது அலட்சியத்தை ஏற்படுத்தி விடும். 

எனவேதான் இறைவன் தொழுகையை விட்டு உங்களை தடுக்க ஷைத்தான் விரும்புகிறான்  என்பதாக  கூறுகிறான்.

“…அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவே ஷைத்தான் விரும்புகிறான். எனவே (அவனை விட்டு) விலகிக்கொள்ள மாட்டீர்களா? அல்குர்ஆன் 5:91  என்று  கேட்கிறான்.

ஏன்  என்றால்;

தொழுகையில் ஆரம்பத்தில் சலிப்பு ஏற்பட்டு, வெறுப்பை உண்டாக்கி பிறகு ஆர்வத்தை குறைத்துவிடும். இவ்வாறு செய்வதுநம் கிணற்றுக்கு வரும் நீர் ஊற்றுக் கண்களை நாமே ஒவ்வொன்றாக அடைத்து விடுவது  போல்  ஆகும்.

சலிப்பும், வெறுப்பும் ஏற்படாமல் இருக்க என்ன  செய்யவேண்டும்?

புதியதாக வெளியான குர்ஆன், ஹதீத் நூல்களை படித்து சிந்தித்தாலே சலிப்பிலிருந்து விடுபட வழிமுறைகள் தோன்றும். அவற்றில் எது சரியானது என்று சிந்தித்து செயல்படுத்தி பாருங்கள். பழைய, புதிய நண்பர்களை, உறவினர்களை சந்தியுங்கள், சில  மாற்றங்கள்  ஏற்படும்.

மாறாக சலிப்பே தொடர்ந்தால் அலட்சியம் ஏற்படும். அலட்சியமே பல தவறுகளுக்கும், மன அமைதியும் கெட காரணமாகும். நாளடைவில் ஈமான் (இறை நம்பிக்கை) எனும் அடிமடியில் கைவைக்க ஆரம்பித்து குஃப்ரில் கொண்டுபோய் விடும்.

நம்மை வெற்றியாளராகவும், இறைவனு டைய அன்பையும் பெற்று தரும்தொழுகையின் மீதா சலிப்புவேண்டவே வேண்டாம்.

ஏன் என்றால்,

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ (ஷைத்தானோ) அவர்களை ஏமாற்றியுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளா கவும், பிற மக்களுக்குக் காட்டுவோராகவும் (தொழுகையில்) நிற்கின்றனர். குறைவாகவோ அல்லாஹ்வை  நினைக்கின்றனர்.”  .கு. 4:142

எனவே மேற்கண்ட வசனப்படி சலிப்பு / வெறுப்பு ஏற்படாமல் இருக்க அல்லாஹ்வே ஒரு  வழியைச்  சொல்லி  காட்டுகிறான்.

அது  என்னவென்றால்,

அல்லாஹ்வைப் பற்றி கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கும், தங்களுக்கு ஏற்பட்டதை (சலிப்பை/வெறுப்பை, இழப்பு) சகித்துக்கொண்டு, தொழுகையை தவறாது பேணுதலாக நிலைநாட்டுவர் (நல்ல வழியில்) செலவிடுவர்.  அல்குர்ஆன் 22:35

மேற்படி வசனத்தில் இறைவனைப் பற்றி கூறப்பட்டும் யாருக்கெல்லாம் தொழுகையில் சலிப்பு/வெறுப்பு ஏற்படுமோ அவர்களின் நிலை என்னவாகும் என்பதையும் இறைவனே கூறுகிறான்.

சொர்க்கத்தில் உள்ளவர்கள் குற்றவாளி களிடம் கேட்பார்கள். உங்களை நரகத்தில் கொண்டு சேர்த்தது எது? என்று கேட்பார்கள். (அதற்கு) தொழாதவர்கள், நாங்கள் தொழாதவர்களாகவும், ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களுக்காகவும் இருந்தோம். என்று  கூறுவார்கள்.

மேலும் வீணானவற்றில் மூழ்கி கிடந்தோம்; மறுமையை பொய்யயனக் கருதி (தப்பித்துவிடலாம்) என்றும் நினைத்து இருந்தோம். இந்த நிலையிலேயே மரணம் எங்களிடம் வரும் வரை இருந்தோம் என கூறுவார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் சலிப்பு/வெறுப்பு ஏற்படாத தொழுகையாளிகளாக்க மரணம் வரை இருக்க துஆச் செய்வோம். 

எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக்கொள் பவன்என்றும்  அவர்கள்  கூறுவார்கள்.

அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்தவிதமான கஷ்டமும் எங்களைத் தீண்டுவதில்லை; அதில் எங்களை எந்தச் சோர்வும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 35:34,35)

Previous post:

Next post: