இறைநூல் (குர்ஆன்!)

in 2025 ஜுன்

இறைநூல் (குர்ஆன்!)

அய்யம்பேட்டை  A. நஜ்முதீன்

சென்ற இதழில் (மே 2025ல்) குர்ஆனில் மொழிபெயர்ப்பில் உள்ள சில குறைபாட்டிற்கான முக்கியமான காரணம் குர்ஆன் அருளப்பட்ட வரலாற்றை முழுமையாக சில மொழிபெயர்ப்பாளர்கள் அறியாதது, அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல் மொழிப் பெயர்ப்பை (தர்ஜுமாவை) வெளியிட்டது காரணம் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக மொழியைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாமலும் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்புக்கள் வெளியிட்டதாலும் சில குறைபாடுகள் உள்ளன  என்பதையும்  குறிப்பிட்டிருந்தோம்.

எந்தவொரு நூலையும் வார்த்தைக்கு வார்த்தை நேரிடையாக மொழிபெயர்த்தால் பல தவறுகள்  ஏற்படும்  என்பது  நிதர்சனமான  உண்மை.

உதாரணமாக : ஒருவர்ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்என்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் “One Who is Weeping Crying Tears” என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும்.

அதுவே, “He Filters his Happy Tears” என்று வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால். “அவர் தன் ஆனந்த கண்ணீரை வடிகட்டுகிறார்  என்றுதான் மொழி பெயர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால் அர்த்தம் அனர்த்தமாக  மாறிவிடும்.

அரபி மொழியை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையான உலக மக்களால் பேசப்படும் 10 மொழிகளில் அரபி மொழியும் ஒன்றாக உள்ளது. சுமார் 362 மில்லியன் மக்களால் இன்று அரபு மொழி பேசப்படுகிறது.

தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால் உலகில் பழமை வாய்ந்த மற்றும் பல சிறப்புக்குறிய மொழியாகவும் விளங்குகிறது. மேலும் உலகில் சுமார் 8324 மொழிகள் இருந்தன. அதில் 7160 மொழிகள் மட்டுமே  இப்போது  வழக்கில்  உள்ளன.

இந்தியாவில் முன்பு சுமார் 1600 மொழிகள் இருந்தன. அதில் இப்போது 122 மொழிகள்  மட்டுமே  வழக்கில்  உள்ளன.

அதுமட்டுமல்ல, இதற்கு முன்பு அருளப்பட்ட இறைநூல்களின் (வேத நூல்களின்) மொழிகள் கூட இன்று வழக்கில் இல்லாமல் மறைந்துவிட்டன.

ஆயினும் இறைநூலான குர்ஆனுக்கும், அரபி மொழிக்கும் சில தனி சிறப்புக்கள் உள்ளன.

குர்ஆனில் நேரிடையாக பொருள் தரக்கூடிய (முஹ்ஹமாத்) வசனங்களும் உள்ளன. மற்றும் இலக்கிய நயத்துடன் உவமையாக கூறப்பட்ட வசனங்களும் உள்ளன. மூன்றாவதாக குர்ஆன் புரிந்துகொள்ள, நம்பிக்கை கொள்ள, “சிந்தனைதான் ஒரே வழி. மொழி அல்ல. குர்ஆனுக்குசிந்தனைஎன்ற பெயரும் உண்டு. அதாவது சிந்திப்பவர்களுக்கே மறைமுகமாக சொல்லப்பட்ட (முதஷாபிஹாத்) வசனங்களின் பொருள் விளங்கும். பொருள் விளங்காத வசனங்களே  குர்ஆனில்  இல்லை.

இறைநூலிலேயே இறைவன் இதை குறிப்பிடுகிறான்.

அவனே (இறைவனே) இந்த வழிகாட்டுதல் நூலை உமக்கு அருளினான். இதில் சில வசனங்கள் தெளிவாக விளங்கக்கூடியவை (முஹ்ஹமாத்) இதுவே அடிப்படையானவை. இதில் மற்றொன்று, உவமை வடிவிலும், (சிந்திப்பவர்களுக்கும் விளங்ககூடிய)  (முதஷாபிஹாத்)  உள்ளவை…”  (.கு.3:7)

மேற்படி வசனத்தை மொழி பெயர்ப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மற்றும் அவரவர்கள் சார்ந்த கொள்கைக்கு ஏற்ற வகையில் குர்ஆனை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். 

மேற்படி வசனத்தில் இடம்பெற்ற இரண்டு வார்த்தைகளுக்கு யார் யாரெல்லாம் எவ்வாறு மொழி பெயர்ப்பை குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்டி உள்ளோம். அதன் சரியான பொருள் என்னவென்பதை இன்ஷா அல்லாஹ் கட்டுரையில் தொடரில் காணலாம்.

1. உமர் ­ரீப் இப்னு அப்துஸ் ஸலாம்,

ஞானமிகுகுர்ஆன், பாகம் 1

Edition 4th, – July 2018

முஹ்காமத்பொருள் தெளிவானவை

முதஷாபிஹாத்பொருள் தெரியாதவை.

2. ஜான் டிரஸ்ட்,

Edition –  2019

முஹ்காமத்விளக்கமான வசனங்கள்

முதஷாபிஹாத்பல பொருட்களை கொண்டவை.

3. I F T, 

20th Edition – Dec. 2017

முஹ்காமத்     தெளிவானவை

முதஷாபிஹாத்தெளிவான பொருள் கொள்வதில் ஐயப்பாடுகள் உள்ள வசனங்கள்.

4. காதியானி அஹமதியா டிரஸ்ட்

Edition –  2020

முஹ்காமத் – “நிலையானவை

(குர்ஆனில் மட்டும் போதிக்கப்பெற்ற சிறப்பான வசனங்கள். 

முதஷாபிஹாத்உவமை வடிவிலானவை                

(முன்னுள்ள இறைநூலிலும் (வேதங்களிலும்)கூறப்பெற்ற போதனைகளாகும்.

5. சகோதரர் பீ.ஜே.

Edition 7th –  2022

முஹ்காமத்உறுதி செய்யப்பட்ட வசனங்கள்,

முதஷாபிஹாத்இரு கருத்தைத் தருகின்ற வசனங்கள்.

6. ரஷாத் கலிபா

Edition –  April 2009

முஹ்காமத்  நிலையானவை

(குர்ஆனில் மட்டும் போதிக்கப்பெற்ற சிறப்பான வசனங்கள்.

முதஷாபிஹாத்பல பொருள் தருகின்ற உவமானங்களுடன் கூடிய வசனங்கள்.

7. யஹல்த் டைம் பப்ளிகேசன்ஸ்,

3rd Edition –   2017

முஹ்காமத் – “ஞானங்களுடன் கூடிய வழிகாட்டுதல் வசனங்கள் முதஷாபிஹாத்ஒன்றுகொன்று ஒப்பான உயர்வான வழிகளை விசாலமாக்கித் தரக்கூடியது.

8. மர்ஹும் M.அப்துல் வஹாப், M.A.,B.Tech

K.A.  நிஜாமுத்தின்மன்பயீ

R.K.  அப்துல் காதிர்பாகவி

15th Edition – 2020

முஹ்காமத்தெளிவான கருத்துகளுடைய வசனங்கள்

முதஷாபிஹாத்பல பொருட்களைக் கொண்டவை.

9.  T.N.T.J. (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்)

முஹ்காமத்  தெளிவான கருத்துக்களை கொண்டவை.

முதஷாபிஹாத்வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவை.

10. மெளலவி. சையத் அப்துர் ரஹ்மான், உமரி

I.T.J. T. Nadu

Edition : Feb. 2022

முஹ்காமத்அதில் தெளிவான

முதஷாபிஹாத்திட்டமான வசனங்கள்.

11. மன்னர் ஃபஹத் வளாகம்

சவுதி  தமிழாக்கம்.

முஹ்காமத்  இதில் தெளிவான  கருத்துக்களுடைய வசனங்களும் இருக்கின்றன.

முதஷாபிஹாத்பல பொருள்களைக் கொண்டவை.

12. I P R C = Dr.M.M. அப்துல் காதிர் உமரி

Edition  = 3rd  March  2016

முஹ்காமத்சட்டங்களைத் தெளிவாக்கும் வசனங்களும் உள்ளன.

முதஷாபிஹாத்பல பொருள் தரும்  வசனங்களும் உள்ளன.

13. NOBLE QURAN

  Edition = 1996

முஹ்காமத்  In it are verses basic or fundamental clear in Meaning.

முதஷாபிஹாத்  Others are not entirely clear.

மேற்படி (3:7) வசனத்தில் பொருள் தெரியாது, பொருள் விளங்காது, அறிவுக்கு அப்பாற்பட்டது, பல்வேறு பொருள்கள் உள்ளன. மற்றும் etc., என்ற கருத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு குர்ஆனை மொழி பெயர்த்தவர்கள் பல வசனங்களுக்கு விளக்கம் சொல்லாமலும், விலகியும் சென்று அல்லது தவறான புரிதலின் காரணமாக மொழிப் பெயர்ப்பில் ஆங்காங்கே பல தவறுகளை  செய்துள்ளார்கள்.

அதற்கு முதல் காரணம் குர்ஆனை அரபி மொழியிலிருந்து (மூலத்திலிருந்து) மொழிப் பெயர்ப்பை செய்யாமல் பெரும்பாலோர் உருது மொழியாக்கத்தில் உள்ளதை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்ததாகும்.

உருது மொழிப் பெயர்ப்பாளர்கள் பெரும்பாலோர் ஈரானியர்களின்ஜபர்என்ற அகீதா (கொள்கை)வை குர்ஆன் மொழிப் பெயர்ப்பில் புகுத்தியுள்ளார்கள். அதன் விளைவு நபி(ஸல்) அவர்கள் பெயரில் ஈரானியர்கள் எழுதியரிவாயத்துபுத்தகங் களை பின்பற்றினால் போதும் என்ற நிலைக்கு (கருத்திற்கு) முஸ்லிம்களை பழக்கப்படுத்தி  விட்டார்கள்.

அதன் விளைவு குர்ஆன் முழுமையாக விளங்காது என்றும் மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் முஸ்லிம்களில்  பெரும்பாலோர்  உள்ளனர்.

உண்மை  என்னவென்றால்;

குர்ஆனை புரிந்துகொள்ள, நம்பிக்கை கொள்ள, அதனை பின்பற்ற ஒரே வழி மொழி அல்ல.  சிந்தனைதான்.

எனவேதான் இறைவன் குர்ஆனில் பல இடங்களில்  கூறுகிறான்.

இந்த குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்  .கு.4:82

இந்த குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது (சிந்திக்க விடாமல்) பூட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றனவா?”  .கு.47:24

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப் பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவிசாய்ப்பார்கள்)   .கு. 25:73

(நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் கருவூலங்கள் இருக்கின்றன என்று, நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் ; அறியவுமாட்டேன் நிச்சயமாக நான் ஒரு வானவராக (மலக்காக) இருக்கிறேன் என்றும், நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர(வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை”. (நபியே!) நீர் கூறும்; “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?  (.கு. 6:50)

இறைவசனங்கள் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில்தான் உள்ளது. இதை இறுதி தூதரின் போதனைகள்  மூலமும்  அறியலாம்.

இன்ஷா அல்லாஹ் சிந்தனை தொடரும்

Previous post:

Next post: