அறிந்து கொள்வோம்!
K. ரஹிமுதீன், குண்டூர்
1. இஷா தொழுகயை ஜமாஅத் ஆக தொழுபவருக்கு கிடைக்கும் நன்மை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பாதிஇரவுநின்றுவணங்கியநன்மை. முஸ்லிம் : 1162
2. மறுமை நாள் நெருக்கத்தில் மதீனாவில் எத்தனை நிலநடுக்கம் ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மூன்று. முஸ்லிம் : 5642
3. எந்த மாதத்தில் 10 நாட்கள் நல்லறங்கள் செய்வது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
துல்ஹஜ். புகாரி 969
4. மூஸா(அலை) அவர்கள் மஹர் கொடை யாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்தார்கள்?
10 ஆண்டுகள். அல்குர்ஆன் 28:27
5. தஜ்ஜாலை எந்த நாட்டை சேர்ந்த யூதர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள்?
ஈரான். இஸ்பஹான். முஸ்லிம் 5643
6. தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின் நன்மைக்கு வழி வகுத்தவர் யார்?
சஅத்பின் உபாதா(ரழி) புகாரி: 2756
7. எந்த விலங்கிற்கு துன்பம் தந்த காரணத் தினால் நரகத்திற்கு செல்ல வழி வகுத்த பெண்மணிக்கு நரகம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பூனை. புகாரி 2365
8. உணவுத் தட்டு என்ற பெயர் கொண்ட அத்தியாயம் எது?
அத்தியாயம் 5 அல்மாயிதா
9. நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர் களை மணம் செய்திட மூலகாரணமாக இருந்த நபிதோழியர் யார்?
கவ்லாபின்த் ஹகீம்(ரழி). பைஹகீ 13526, அஹ்மத். 24587
10. எத்தனை நபருக்கு எதிராக மறுமை நாளில் அல்லாஹ் வழக்குரைப்பான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மூன்று. புகாரி 2227
11. ஒரு முஸ்லிம் இடத்தில் எத்தனை நாட்க ளுக்கு மேல் பகைமை கொள்வது கூடாது?
3 நாட்கள். புகாரி : 6065
12. இறுதி ஹஜ்ஜின் போது எந்த நபித் தோழரை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள்?
ஸஅத்இப்னுஅபூவக்காஸ்(ரழி), புகாரி 2742
13. ஒருவர் தாம் காணாத கனவை கண்டதாக சொன்னால் மறுமையில் கிடைக்கும் தண்டனை என்ன?
இரண்டுவாற்கோதுமைகளைஒன்றுசேர்த்து முடிச்சுப்போட வேண்டும். புகாரி 7042
14. ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் சார்பாக எழுதியவர் யார்?
அலீ(ரழி) அவர்கள். புகாரி 2698
15. நபி(ஸல்) அவர்கள். ரப்பிக் ஃபிர்லீ துப் அலய்ய, இன்னக அன்தத் தவ்வாழபுர் ரஹீம் என்று எத்தனை தடவை கூறினார்கள்?
நூறு. அபூதாவூத் 1295
16. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) அவர்கள் எதை மஹர் தொகையாக கொடுத்தார்கள்?
ஒருபேரீச்சம்கொட்டைஎடைக்குத்தங்கம். புகாரி : 2048
17. நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் திருடப் பட்ட தகவலை கூறியவர் யார்?
அப்துர்ரஹ்மான்இப்னுஅவ்ஃப்(ரழி) அவர்களின் அடிமை. புகாரி: 4194
18. கஅப்(ரழி) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வர் யார்?
அபூகத்தாதா(ரழி). புகாரி: 4418
19. எதை அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற் குள் எதை விடவேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மூச்சுவிடவேண்டாம். புகாரி : 153