கோபம் என்ன செய்யும்???

in 2025 ஆகஸ்ட்

கோபம் என்ன செய்யும்???

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

கோபம் என்பதும் மனிதர்களின் ஒரு பொதுவான உணர்ச்சி. இது மனித உள்ளத் தின் உணர்ச்சிகளில் ஒன்றும் கூட. அதாவது உடலியல் ரீதியாக வெளிப்படும் செயல்பாடு களில் ஒன்றாகும். கோபம் வராத மனிதர்களே கிடையாது. ஆனால் சின்ன சின்ன வி­யங் களுக்கு எல்லாம் கோபப்படுவது தான் தவறு.

பொதுவாக கோபம் வரக்காரணம் தான் நினைப்பது நடக்காது போது வரும், அப்ப டியே நடந்தாலும் தான் விரும்பிய விதத்தில் நடக்காமல் இருந்தால் வரும், அல்லது நிறை வேறாத ஆசைகள், இயலாமை இவைகளால்  கோபம்  வரும். 

மேலும் தன்னுடைய பலவீனமான நிலையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகவும் இருக்கும்.

கோபம் வருவதால் ஏற்படும் மாற்றங்கள்:

1. முக தோற்றம் மாறுதல்,

2. கண்  சிவந்திருத்தல்,

3. உடலில்  நடுக்கம்  ஏற்படுதல்

4. வியர்வை மிகுதியாக வெளிப்படுதல்.

5. இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படுதல்

6. உயர் ரத்த அழுத்தம்(Pகூடுதல்)

7. மாரடைப்பு  ஏற்படுதல்.

இத்தகைய பாதிப்புகள் இருந்தாலும் கோபத்திற்கு சில பலனும் உண்டு. அது சில நேரங்களில் நாம் செய்யமுடியாத வேலைகளை  செய்துவிடும்.

ஆனால் கோபத்தினால் வரும் பலன்களை விட இழப்புக்களே அதிகம்.

அதாவது நம் நிம்மதியே கொன்றுவிடும், வி­ம் போல் மனதிற்குள் பரவும். கோபத்தின் முதல் பலி அதை சுமப்பவர்தான்.

சில மனிதர்கள் கூறுவார்கள் :

யாரிடம் பேசினாலும் ஏதோ ஒரு சொல் கோபத்தை தூண்டுகிறதுஅல்லது சிலரின் செயல் கோபத்தை அதிகப்படுத்துகிறது என்பார்கள்.

இன்னும் சில மனிதர்கள் சொல்வார்கள் :

எனக்கு யார் மீதும் கோபம் இல்லை, என் மேலேயே எனக்கு கோபம் வருகிறது என்பார்கள்.

இத்தகைய நபர்கள் கோபத்தினால் செவி டாகவும், குருடாகவும் வாய்ப்பு உண்டு. அதாவது எதிர் தரப்பினர் சொல்வதை கவனித்து கேட்பது இல்லை. மற்றும் கண்கள் இருந்து பார்த்தும் சரியான கோணத்தில் சிந்திப்பதில்லை.

எனவேதான் சொன்னார்கள் : “”ஆத்திரக் கார னுக்கு புத்தி மட்டு” …என்று

கோபத்தின் விளைவுகள் என்ன?

1. மன அழுத்தம்,

2. உறவுகளில் சிக்கல், விரிசல்கள்

3. மோதல் மற்றும் விரோதங்கள்

4. பொருளாதார இழப்பு

5. பழி வாங்குதல். இன்னும் பல விளைவுகள்.

கோபம் என்பது நம்மைப் போன்று சாதா ரண மனிதர்களுக்கு மட்டும் வருவதில்லை. சில நபிமார்களும் கோபப்பட்டதாக இறை நூல் கூறுகிறது. (அந்த கோபத்திற்கு நியாய மான  காரணமும்  உண்டு) 

அது  என்னவென்றால்;

மூஸா(அலை) கோபம் கொண்டு, கவலைப்பட்டவராகத் தமது சமுதாயத்தினரி டம்  திரும்பினார்.

என் சமுதாயத்தினரே! உங்களுக்கு அழகான வாக்குறுதியை உங்கள் இறைவன் அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி யளித்து நீண்ட காலம் ஆகிவிட்டதா? அல்லது

இறைவனின் கோபம் உங்கள் மீது இறங்க வேண்டுமென விரும்புகிறீர்களா? 

என்னிடம் கொடுத்த வாக்குறுதிக்கு ஏன் மாறு செய்தீர்கள்!”  என்று கேட்டார்.

மூஸா(அலை) அவர்கள் கோபம் கொண்ட தற்கு காரணம், மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவன் காளைக் கன்று போல் ஒரு சிற்பத்தை (சிலையை) உருவாக்கி இதுதான் மூஸா(அலை) தேடி சென்ற கடவுள் என்பதாக கூறினான். பார்க்க வசனம் : .கு. 20:95,96,97

(கட்டுரையின் சுருக்கத்தை கருதி இந்த சம்பவத்தைப் பற்றி மேலும் விரிவாக குறிப்பிடவில்லை)

மேற்கண்ட வசனத்தின் மூலம் நபி முஸா (அலை) அவர்கள் கோபப்பட்டதற்கு நியாய மான காரணம் இருந்தது.

எனவே கோபமே வரக்கூடாது என்பதல்ல. அது நியாயமான கோபமாக இருந்தால் தவறு இல்லை.

நியாயமான காரணம் இல்லாமல் கோபம் கொண்டு உலகில் நடந்தது முதல் பாவ செயலின் சம்பவத்தை பற்றி இறைநூலில் இறைவன் கூறுகிறான்.   பார்க்க வசனம் : 5:27,28,29,30

(ஆதம்(அலை) அவர்களின் இரு புதல்வர் களின் சம்பவம் அதுவாகும்)

இதுவரை சாதாரண மனிதர்களுக்கு கோபம் வரும் என்பதையும், நபிமார்களுக்கும் கோபம் வரும் என்பதையும் பார்த்தோம்.

இனி இறைவனுக்கும் எப்போதெல்லாம் கோபம் வரும் என்பதை கீழ்க்கண்ட வசனங் கள் மூலம் அறியலாம்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டு மென்று கொலை செய்வதற்கு கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்கு கடுமையான வேதனையை  தருவான்”.  .கு. 4:93

மற்றொரு  வசனத்தில்,

அவர்கள் அதிகமானோர் (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக (பாது காவலராக/அவுலியாவாக) ஏற்படுத்திக் கொள் வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் செய் தது கெட்டது, அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் (நரகில்) அவர் கள் நிரந்தரமாக இருப்பார்கள்.      .கு. 5:80

மற்றொரு   வசனத்தில்;

நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மை யானதை (ஹலாலான வருமானத்தின் மூலம் சம்பாதித்ததை) உண்ணுங்கள்! வரம்பு மீறாதீர் கள்! (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங் கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கிவிட்டதோ அவன் நஷ்யவாலியாக ஆகிவிட்டான்”.   .கு. 20:81

மேலும்  மற்றொரு  வசனத்தில்;

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரை கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதைப் பற்றி நம்பிக்கை இழந்தும் மறுமையைப் பற்றியும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்”.  .கு. 60:13

அல்லாஹ்வின் கோபம் அநியாயமாக கொலை செய்தவர்கள் மீதும், ஹராமான முறையில் பொருள் ஈட்டி உண்பவர்கள் மீதும், அல்லாஹ்வை நிராகரித்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும், மேலும் தன்னை (இறைவனை)யும், மறுமை நாளையும் நம்பாதவர்கள் மீதும் உண்டாகும் என்பதும் அவை அனைத்தும் நியாயமான கோபம் என்பதும் தெரிய வருகிறது.

எனவே நியாயமற்ற கோபத்திலிருந்தும், அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள கீழ்க்கண்ட வசனத்தை யம், ஹதீதையும் நாம் நினைவு கொள்வோம். 

மக்களை தனது பலத்தால்(வலிமையால்) அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன். உண்மை யில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். நூல் : புகாரி, ஹதீத் எண்: 6114

கோபத்தைப்  பற்றி  இறைநூல் :

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் நல் வழியில் (அல்லாஹ்விற்காக) செலவு செய்வார் கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வார் கள். (கோபத்தை தூண்டிய) மக்களை மன்னிப் பார்கள்.  இவ்வாறு நன்மை செய்வோரை (முத்தகீன்களை) (நடந்துக் கொள்பவர்களை) அல்லாஹ் நேசிக்கிறான்  .கு. 3:134

Previous post:

Next post: