நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?

in 2025 ஆகஸ்ட்

நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?

S.H. அப்துர் ரஹ்மான்

தூதரே! அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியையும்  படித்து  காண்பிப்பீராக!

அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” எனக் கேட்டபோது, அவர்கள், “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். நாங்கள் அவற்றின் வணக்கத்திற்காக நிலை கொண்டுள்ளோம்  என்று  கூறினார்கள்.

அவைகளை நீங்கள் அழைக்கின்ற சமயத்தில் உங்களுக்கு அவை (காது கொடுத்து) செவி சாய்க்கின்றனவாஎன்று  இப்றாஹீம்  அவர்களிடம்  கேட்டார்.

அல்லது(அவைகளை நீங்கள் வணங்கினால்) உங்களுக்கு பலன் தருகின்றனவா? அல்லது (வணங்காவிட்டால்) அவை இடையூறு  செய்கின்றனவா?” என்று  கேட்டார்.

இல்லை எங்கள் மூதாதையர்களை இவ்வாறே செய்பவர்களாக நாங்கள் கண்டோம்  என்று  அவர்கள்  கூறினார்கள்.

நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? (அது பற்றிச்) சொல்லுங்கள்என்று அவர்  கேட்டார்.

நீங்களும், உங்களுடைய முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கி வந்தீர்கள் என்பதைப் பாருங்கள்)

ஆகவே, நிச்சயமாக அவைகள் எனக்கு விரோதிகளே! அகிலத்தாரின் இரட்சகனைத் தவிரஅவன் எத்தகையவனென்றால், அவனே என்னைப் படைத்தான், பின்னர் எனக்கு நேர்வழி  காண்பிக்கிறான் 

இன்னும் அவன் எத்தகையவனென்றால், “அவனே எனக்கு உணவளிக்கிறான், அவனே (எனக்கு) குடிக்கவும் தருகிறான்.”

மேலும்நான் நோயுற்று விட்டால், அவனே என்னைக் குணப்படுத்துகின்றான்

இன்னும், அவன் எத்தகையவனென் றால்என்னை இறப்பெய்தச் செய்வான். பின்னர் என்னை (மறுமையில்) அவன் உயிர்ப்பிப்பான்.

இன்னும், அவன் எத்தகையவனென் றால், “கூலி கொடுக்கும் (மறுமை) நாளில், என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் ஆதரவு வைக்கின்றேன். என் இரட்சகனே! நீ எனக்கு அறிவை அளிப்பாயாக! மேலும், நல்லோர்க ளுடன் என்னைச்  சேர்த்து  வைப்பாயாக

பின்வருபவர்களில் எனக்கு நற்பெயரை  ஏற்படுத்துவாயாக

கொடைகளுடைய சுவனபதிக்கு வாரி சானவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக!”

என்னுடைய தந்தைதையும் நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக அவர் வழிதவறி விட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்”.

மேலும், “(படைப்பினங்கள் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படும் நாளில் நீ என்னை  இழிவுபடுத்தாதிருப்பயாக!”

செல்வமும், குமாரர்களும் (யாதொரு) பயனளிக்காத (அந்த) நாளில், (ஆயினும், இணைவைப்பதிலிருந்து நீக்கம் பெற்ற) பரிசுத்தமான இதயத்துடன் தன் இரட்சக னாகிய) அந்த இறைவனிடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்)

மேலும், பயபக்தியுடையவர்களுக்கு சொர்க்கம் (மிக) நெருக்கமாக வைக்கப் படும் நாள். வழிகெட்டோருக்கு (அவர் களுக்கெதிரில்) நரகம் வெளிப்படுத்தப்படும் நாள். அவர்களிடம் நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? எனக்  கேட்கப் படும்.

அந்த இறைவனையன்றி…(நீங்கள் வணங்கி வந்த) அவை (இப்போது) உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து (தங்களைக் காப்பாற்றிக்) கொள்ளுமா? (என்று கேட்கப்படும்)

ஆகவே, அவைகளும் (அவைகளால்) வழிதவறியவர்களும், முகங்குப்புற (நரக மாகிய) அதில் தள்ளப்படுவார்கள். இப்லீஸின் சேனைகள் அவனைவரும் (அவ்வாறே நரகில் தள்ளப்படுவார்கள். அவர்களோ (தங்களுக்குள்) அதில் தர்க்கித்துக் கொண்டவர்களாகக் கூறுவார்கள். “அந்த இறைவனின் மீது சத்தியமாக நாங்கள் பகிரங்கமான  வழிகேட்டிலிருந்தோம்.” 

அகிலத்தாரின் இரட்சகனாக இருப்பவனுக்கு (இணையாக்கப்பட்ட) உங்களை நாங்கள் சமமாக ஆக்கிவைத்தபோது. (பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தோம்) (இக்)குற்றவாளிகளேயன்றி (வேறு எவரும்) எங்களை  வழிகெடுக்கவுமில்லை.

ஆகவேஎங்களுக்குப் பரிந்துரையாளர்களிலிருந்து எவரும் இல்லை. நெருங்கிய எந்த  சிநேகிதனும்  இல்லை. 

ஆகவே, நிச்சயமாக எங்களுக்கு (உலகிற்குத்) திரும்பிச் செல்லுதல் (என்பது) இருந்தால் விசுவாசங் கொண்டோர்களில் நாங்கள் ஆகிவிடுவோம்” (என்று பிதற்றுவார்கள்)

நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கின்றது. (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் (இதனை) விசுவாசங் கொள்வோராக  இருக்கவுமில்லை.

மேலும், நிச்சயமாக உம்முடைய இரட் சகன் அவனே திட்டமாக (யாவரையும்) மிகைத்தோன். மிகக் கிருபையுடையோன்.  (இறைநூல் 26:59-104)

Previous post:

Next post: