யாருமே கனிக்கவில்லை!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
“எதை விட்டும் நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் (இறைவனிடம்) நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு இறைவன் அறிவிப்பான்” என்று கூறுவீராக! அ.கு. 62:8
பள்ளிவாசல் மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
இன்னார் வபாத்தாகிவிட்டார் (இறந்து விட்டார்)இன்ஷா அல்லாஹ் அவருக்கு இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த பள்ளி கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அவர் எனக்கும் தெரிந்தவர்தான். நானும் சென்று பார்த்தேன். சற்று நேரத்திற்கு முன்பு தான் மூச்சு நின்று இருக்கவேண்டும். காரணம் உடல் சூடு இன்னும் முழுமையாக குறையவில்லை.
எப்போ நடந்தது என்று விசாரித்தேன். உறவுகளும், சுற்றமும் அழுதுகொண்டே சொன்னது. காலையில் பஜர் தொழுகைக் குக் கூட பள்ளிக்கு போய்விட்டு தான் வந் தார். நல்லாதான் இருந்தார். திடீரென்று இப்படி ஏற்பட்டுவிட்டது என்று சொன் னார்கள்.
நானும் கண் கலங்கினேன். துஆச் செய்தேன். ஆனால் எல்லோரும் சொல் வது போல் அவர் இப்போதுதான் இறந் தாரா? என்றால் நிச்சயமாக இல்லை. அவர் இறந்து சுமார் 20 வருடத்திற்கு மேல் ஆகிறது.
ஆனால் யாருமே கவனிக்கவில்லை. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் உண்மை தான். எவ்வாறு என்றால்,
1. அவர் மனைவி இறந்த பிறகு நீங்கள் சாப்பிட்டாச்சா? என்று எவரும் கேட்காத காலத்திலேயே அவர் இறந்திருந்தார்.
யாருமே கவனிக்கவில்லை.
2. பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதான்…. என்று அவர் காதுபட மருமகள் பேசிய போதே அவர் இறந்திருந்தார்.
யாருமே கவனிக்கவில்லை.
3. தாய்க்குப் பின் தாரம், தாரத்திற்குப் பின் வீட்டின் ஓரம்….! என்று இருந்த போதே அவர் இறந்திருந்தார்.
யாருமே கவனிக்கவில்லை.
4. முதியோர் இல்லத்தில் விட்டு விடலாமா? என்று அவர் காதில் விழும்படி பேசிய போதே அவர் இறந்திருந்தார்.
யாருமே கவனிக்கவில்லை.
5. காசு இங்கே மரத்திலா காய்க்குது… என்று ஆசையுடன் வளர்த்த அன்பான மகன் அமில வார்த்தையை வீசியபோதே அவர் இறந்திருந்தார்.
யாருமே கவனிக்கவில்லை.
அதனால்தான் அவர் இப்போதுதான் இறந்தார் என்று சொல்வதை எப்படி நம்புவது?
மக்களே! தெரிந்து கொள்ளுங்கள். பலர் வாழும்போதே இறந்துவிடுகிறார்கள், புதைக்கத்தான் சில ஆண்டுகள் ஆகிறது என்பதுதான் நிஜம்.
எப்போது ஒருவருடைய உணர்வு மதிக் காமல், மிதிக்கப்படுகிறதோ அப்பவே அவர் இறந்துவிட்டார்.
“இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும், இழப்பின் வலி என்னவென்று”.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பெல் லாம் மரணம் நிகழ்ந்த வீடு என்றால் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரிக் கூட வைப்பார்கள்.
(ஒப்பாரி வைப்பது தடுக்கப்பட்டது என்று அறியாத காலம் அது)
மணிக்கணக்காக அழுது ஓய்ந்திருந் தாலும் யாரேனும் துக்கம் விசாரிக்க புதியதாக ஒருவர் வந்துவிட்டால் மீண்டும் அழுகை ஆரம்பிக்கும்.
எவ்வளவுதான் வயதானவராக இருந்தா லும் உடலை (மையத்தை) தூக்கிச் செல்ல வரும்போது கதறி அழுவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் துக்க வீட்டில் அழுவதற்கு ஆளில்லை.
மனித வாழ்விற்கு மதிப்பில்லையா?
மனிதாபிமானம் குறைந்துவிட்டதா?
உணர்வுகளும், பாசங்களும் சுருங்கி விட்டதா?
இது தலைமுறை மாற்றம் என்று சொன் னாலும் சொல்லுவார்கள். மரணத்தை கண்டு பயப்பட தேவையில்லைதான், ஆயினும் மரணத்திற்கு மரியாதை செய்ய வேண்டும்.
அழுதாலும், அழுகாவிட்டாலும் மாண் டவர் மீண்டும் வரபோவதில்லை. அழுவது ஒரு மரியாதை தான். அந்த மனிதருக்கு இறுதி பயணத்தில் நம்மால் தரக்கூடிய ஒரு வகையான பாசமே!
“அந்த கோட்டைக்குள் போனால் திரும்பாது” என்பது எல்லோருக்கும் தெரி யும். அதனால் தான் மனிதன் பொறாமைப் படாத ஒரே வியம் இதுவாக இருக்கிறது.
மனித உறவுகளும், உணர்வுகளும் அலைபேசியில் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் மரணத்தை மதிக்காத சமுதாய மாக இருக்கிறது.
ஒருவர் இறந்துவிட்டால் கூட அவரது மையத்தை எடுத்த சில நேரங்களில் விருந்துக்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதுவும் கறிசோறாக ஆகிவிட்டது.