ஸிஜ்ஜீன் என்றால் என்ன?
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
ஜூலை மாத தொடர்ச்சி…..
அதாவது (அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் (நீதி விசாரணைக்காக) மனிதர்கள் (அனைவரும்) நின்று கொண்டிருக்கும் நாள். (அல்குர்ஆன் 83:6) அதாவது செருப்பு அணியாதவர்களாக ஆடை யில்லாதவர்களாக நின்று கொண்டிருப்பார்கள். மிகமிகக் கடுçமான சிரமமான நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். பாவங்களில் மூழ்கி யிருந்த குற்றவாளிகளுக்கு மிக நெருக்கடியானதாக இருக்கும் அந்த இடம் .
உயர்ந்தோன் அல்லாஹ்வின் கட்டளை யைப் பொறுத்து எந்த ஒரு நிலை அவர்களைச் சூழ்ந்திருக்கும் எனில் அவர்களின் ஆற்றல்களும் புலன்களும் அதனை எதிர்த்து நிற்க இயலாதே அத்தகையதொரு கட்டளையாக அது இருக்கும். அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அனைத்துலகின் இறைவனின் திருமுன் (நீதி விசாரணைக்காக) மனிதர்கள் நின்று கொண்டிருப்பார்களே அந்நாளில் (83:6) எனும் இந்த வசனத்தை ஓதிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது இரு காதுகளின் பாதி வரையில் தேங்கி நிற்கும் தமது வியர்வையில் மூழ்கி விடுவார்கள் என்று கூறினார்கள். (புகாரி:4938, முஸ்லிம்:5497, மற்றும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களும் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
(தஃப்சீர் இப்னு கஸீர்: 10:113-118)
இமாம் அஹ்மது(ரஹ்) அவர்கள் தமது முஸ்னது நூலில் பதிவு செய்துள்ள மற்றோர் அறிவிப்பில் உள்ளது. நபி(ஸல்) அவர்கள் யவ்ம யகூமுன் நாஸு லிரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் இறைவனின் திருமுன் (நீதி விசாரணைக்காக) மனிதர்கள் நின்று கொண்டிருப்பார்களே அந்நாளில்…) எனும் வசனத்தைக் குறித்து இவ்வாறு விளக்கம் அளித்தார்கள்.
அனைத்துலகின் இறைவனின் திருமுன் அவர்கள் நிற்பார்கள் என்றால் மறுமை நாளில் வல்லமையும் மாண்பும் மிக்க கருணைமிக்க இறைவனின் மகத்துவமிக்க திருமுன் அவ்வாறு நின்றுகொண்டிருப்பார்கள் எந்த அளவுக்கு எனில் வியர்வை என்பது அந்த மனிதர்களின் காதுகளின் பாதி வரையில் எட்டியிருக்கும். மற்றோர் அறிவிப்பு.
மிக்தாத் பின் அஸ்வதில் கிந்தி(ரழி) அவர்கள் கூறியதாக இமாம் அஹ்மது(ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டிருக்கிறேன்; மறுமை நாளில் சூரியன் மனிதர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரப்படும் எந்த அளவுக்கு எனில் சூரியன் ஒரு மைல், இரண்டு மைல் தூரம் இருக்கும் கடுமையான வெப்பத்திற்குச் சூரியன் அவர்களை உள்ளாக்கும் மனிதர்கள் தத்தம் செயல்களின் அளவுக்கு வியர்வையில் மூழ்குவர்கள். அவர்களில் சிலரின் நிலை எவ்வாறு இருக்கும் எனில் சிலர் தங்களின் குதிங்கால் வரையில் வியர்வையில் இருப்பார்கள். சிலர் முழங்கால் வரையில் வியர்வையில் மூழ்கியிருப்பார்கள். வேறு சிலர் தங்களின் இடுப்பு வரையில் வியர்வையில் மூழ்கியிருப்பார்கள், வேறு சிலர் (கடிவாளம் போடப்பட்டது போல்) மூக்கு வரை வியர்வையில் மூழ்கியிருப்பார்கள். மேலும் பார்க்க (முஸ்லிம்: 5497, திர்மிதி: தஃப்சீர் இப்னு கஸீர்: 10:113-118)
மற்றோர் அறிவிப்பு உக்பா பின் ஆமிர்(ரழி) அவர்களின் இந்த அறிவிப்பை இமாம் அஹ்மது(ரஹ்) அவர்கள். பதிவு செய்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன். சூரியன் (மறுமை நாளில்) பூமிக்கு அருகே நெருங்கி வரும். மக்களை வியர்வையில் ஆழ்த்திவிடும் மக்களில் சிலரின் வியர்வை அவர்களின் குதிங்கால்கள் வரையில் வந்துவிட்டிருக்கும் வேறு சிலருக்கு அவர்களின் பாதிக் கெண்டைக்கால் வரையில் வந்து விட்டிருக்கும் இன்னும் சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையில் வந்துவிட்டிருக்கும் இன்னும் சிலருக்கு அவர்களின் புட்டம் வரையில் வந்திருக்கும் வேறு சிலருக்கு அவர்களின் வாயின் பாதி வரை எட்டியிருக்கும் நபியவர்கள் தமது கையால் சைக்கினை செய்தார்கள். தங்களின் வாயில் அப்படிக் கடிவாளமிடப்பட்டுக் காட்டினார்கள். தமது கையை உயர்த்தி நபியவர்கள் இவ்வாறு சைக்கினை செய்ததை நான் பார்த்தேன். (தொடர்ந்து கூறினார்கள்) வேறு சிலரின் வியர்வை அவர்களை முழுமையாக மூடிவிட்டிருக்கும் நபியவர்கள் சைக்கினைக்காகத் தங்களின் கையைத் தரையில் அடித்தார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 10:113-118)
இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது; மனிதர்கள் தலையுயர்த்தி வானத்தை நோக்கிப் பார்த்தவர்களாக நாற்பது ஆண்டுகள் வரையில் நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் யாருமே பேசமாட்டார்கள். வியர்வை அவர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் அனைவரையும் கடிவாளம் இட்டிருக்கும் (தஃப்சீர் இப்னு கஸீர் 10:113-118) இதனாலேயே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமை நாளில் இடநெருக்கடிக்கு உள்ளாவதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 10:113-118)
(தீயோர்கள் எண்ணுவது போல்) அவ்வாறில்லை! நிச்சயமாக (அத்தகைய தீயோர்களான) பாவிகளின் (பதிவுப்) புத்தகம் (பெரிதும் கஷ்டத்தில் ஆழ்த்தும்) ஸிஜ்ஜீனில் இருக்கிறது. (நபியே!) ஸிஜ்ஜீன் என்றால் என்ன (அது ஒரு மிக நெருக்கடியான இடம்) என்று உமக்கு அறிவித்தது எது? (அல்குர்ஆன் 83:7,8) அதாவது;
ஸிஜ்ஜீன் என்றால் என்ன? ஓர் அலசல் :
அதாவது: அவர்கள் சென்று சேரக்கூடிய இடம், அவர்களின் புகலிடம் நிச்சயமாக ஸிஜ்ஜீன் என்று பொருள். ஸிஜ்ஜீன் என்பது “அஸ்ஸிஜ்ன்”(சிறைச்சாலை) என்பதிலிருந்து வந்த சொல்லாகும். இதற்கு சிறைப்பிடித்தல், கஷ்டத்தில் ஆழ்த்துதல், நெருக்கடி என்பது சொற்பொருளாகும். இவ்வாறு ஸிஜ்ஜீன் என்பது (சிறைப்பிடிக்கும் இடம், மோசமான இடம், எனும் அசல் கருத்தை) மிகைப்படுத்திக் கொடுக்கும் சொல் என்பதால்தான். ஸிஜ்ஜீன் என்பது என்ன (அது ஒரு நெருக்கடியான இடம்) என்று உமக்கு அறிவித்தது எது என்று கேள்வி கேட்டு அதன் கடின நிலையை (எட்டாம் வசனத்தில்) உயர்ந்தோன் அல்லாஹ் எடுத்துரைக்கின்றான். அதன் கடுமையை எடுத்துரைத்தல் என்பதன் கருத்து இதுதான் ஸிஜ்ஜீன் என்பது கடுமையான காரியமும் நிரந்தரமாகச் சிறைப்படுத்தி நெருக்கடி தரக்கூடியதும் துன்புறுத்தும் வேதனையும் ஆகும். (தஃப்சீர்இப்னுகஸீர்:10:119-127)
மாண்பும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் இறை நிராகரிப்பாளனின் உயிரின் விசயத்தில் ஆணையிடுவான். அவனுடைய செயலேட்டை ஸிஜ்ஜீன் எனும் இடத்தில் எழுதி வையுங்கள் என்று அறிவிப்பவர் பராஉபின் ஆஸிப்(ரழி) அவர்கள். இதனை அஹ்காமுஸ் ஜனாயில் எனும் நூலில் ஷைக் நாஸிருதீன் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 10:119-127)
“சிஜ்ஜீன் என்பது: பூமியின் ஏழாவது அடுக்கில் ஆகக் கீழே உள்ள ஓர் இடமாகும் என்று சிலரும் நரகத்திலுள்ள ஒரு கிணறு என்று சிலரும் கூறுகின்றனர். எனினும் மிகவும் ஆதாரபூர்வமான கருத்து இதுதான். ஸிஜ்ஜீன் என்பது ஸிஜ்ன் (சிறைச்சாலை) என்பதில் இருந்து வந்த சொல்லாகும். அதன் பொருள் நெருக்கடி–கஷ்டம் என்பதாகும். ஏனெனில் படைப்பினங்களில் எவையயல்லாம் கீழ் நோக்கித் தாழ்ந்தவனவோ அவை ஒவ்வொன்றும் நெருக்கடிக்குள்ளாக்கும். எவை எல்லாம் மேல்நோக்கி உயர்ந்தனவோ அவை ஒவ்வொன்றும் விரிவாகவும், விசாலமாகவும் இருக்கும். மேலும் தீயவர்கள் சென்று சேருமிடம் நரகம்தான் அது அனைத்தையும் விட மிக மிகத் தாழ்வானது என்பதனாலாகும் இவ்வாறு அமையும். இன்னொரு வசனத்தில் (ஒவ்வொன்றும் விரிவாகவும், விசாலமாகவும் இருக்கும். மேலும் தீயவர்கள் சென்று சேருமிடம நரகம்தான் அது அனைத்தையும் விட மிகமிகத் தாழ்வானது என்பதனாலாகும். இவ்வாறு அமையும்) இன்னொரு வசனத்தில் உயர்ந்தோன் அல்லாஹ்.
பிறகு (வழிதவறிப் போனதால்) அவனைத் தாழ்ந்தோரிலும் மிகத் தாழ்ந்தவனாக நாம் ஆக்கினோம். ஆனால் யார் இறை நம்பக்கை கொண்டார்களோ நற்செயல்களும் புரிந்தார்களோ அப்படிப்பட்டவர்களைத் தவிர (95:7) (தீயோர்கள் எண்ணுவது போல்) அவ்வாறில்லை! நிச்சயமாக (அத்தகைய தீயோர்களான) பாவிகளின் (பதிவுப்) புத்தகம் (பெரிதும் கஷ்டத்தில் ஆழ்த்தும்) ஸிஜ்ஜீனில் இருக்கிறது. (நபியே!) ஸிஜ்ஜீன் என்றால் என்ன (அது ஒரு மிக நெருக்கடியான இடம்)
மேலும் அவர்கள் (கை கால்கள்) இணைத்துக் கட்டப்பட்டு அ(ந்த நரகத்)தில் நெருக்கடியான இடத்தில் விசி எறியப்படும் பொழுது அங்கே அவர்கள் அழிவை அழைப்பார்கள். (25:13)