அறிமுகம்-Subscribe

”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்”

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இணையத்தில் அந்நஜாத்,

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அல்குர்ஆன், சுன்னா மட்டுமே தூய இஸ்லாம் என்ற கொள்கையை நிலைநாட்டிட, ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக தமிழகத்தில் முதலாவதாக துவங்கப்பட்ட மாத இதழ் அந்நாஜாத்.

அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவற்ற கருணையினால் அந்நஜாத் தனது 24ம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அந்நஜாத் மாத இதழ் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அந்நஜாத்தின் எழுத்துப் பிரச்சாரத்தால் தவ்ஹீத் – ஏகத்துவம் தமிழக மக்களிடையே விரிவாகப் பரவி, வியக்கத்தகு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அல்குர்ஆன், சுன்னாவிற்கு முரண்பட்ட போக்குகளை கண்டனம் செய்தும், ஆதாரங்களுடன்  தூய இஸ்லாத்தை மிகத் தெளிவாக அடையாளம் காட்டி முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆரம்பித்த நாளிலிருந்தே அந்நாஜாத் இதழுக்கு எதிர்ப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து, கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று, இன்று இணையத்திலும் அடியெடுத்து வைக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்றைய நவீன உலகில் இணையம் முக்கிய பங்கு வகித்து, உலகத்தோடு கைகோர்க்க இணைய ஊடகம் துணையாக இருக்கிறது. ஜுலை, 2007 முதல் இணைய ஊடகத்திலும் தனது எழுத்துப் பணியை அந்நாஜாத் துவங்குகிறது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகம்

அந்நஜாத்

—————————————-

நாங்கள் சொல்வதென்ன?

நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை!

நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி ஸலவாத் சொல்லச் சொல்கிறோம்!!

நபித் தோழர்களை நாங்கள் குறை கூறவில்லை!

இந்த உம்மத்திலேயே அவர்கள் தான் சிறந்தவர்கள் என்கிறோம்!!

இமாம்களை நாங்கள் இகழவில்லை!

அவர்களைத் தக்லீது (கண்மூடிப் பின்பற்றல்) செய்வதையும், அவர்கள் பெயரால் சொல்லப்படும் பொய்களையும் மறுக்கிறோம்!!

அவ்லியாக்களை நாங்கள் பழிக்கவில்லை!

அவர்கள் பெயரால் நடத்தப்படும் அனாச்சாரங்களை எதிர்க்கிறோம்!

உலமாக்களை நாங்கள் பழிக்கவில்லை!

அவர்கள் புரோகிதர்களாகவும், தரகர்களாகவும் மாறி சமுதாயத்தைக் கூறுபோட்டுச் சுரண்டுவதை கண்டிக்கிறோம்!!

ஆலிம்கள் தேவையில்லை என்று நாங்கள் சொல்லவில்லை!

மதரஸா சென்று வந்தவர்கள் மட்டும் ஆலிம்களல்லர்;

குர்ஆன், ஹதீதுகளை விளங்கி நடப்பவர்கள் அனைவரும் ஆலிம்களே;

ஆக முஸ்லிம்கள் அனைவரும் ஆலிம்களாக ஆக வேண்டும் என்கிறோம்!!

யாரையும் தக்லீது செய்யாதீர்கள், அந் நஜாத்தையும் தக்லீத் செய்யாதீர்கள்; அந் நஜாத்தில் வருபவற்றைக் குர்ஆன், ஹதீஸ்களோடு சரிபார்த்து விளங்கிப் பின்பற்ற வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம்!!

———————————————-

அந்நஜாத்தில் இடம் பெறுவதற்காக மக்களுக்குப் பயன்படும் ஆக்கங்களை அனுப்பும் அன்பர்கள், தங்களின் ஆக்கங்களை தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் உரிய இடைவெளிவிட்டு தெளிவாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம். தாளின் இரு பக்கங்களிலும் குறுக்கி, குறுக்கி, இடையில் வரிகள் சேர்த்து எழுதி அனுப்புவதைத் தவிர்க்க வேண்டுகிறோம். முதலில் ஆக்கங்களைத் தயாரித்தவர்கள் பின்னர் அதை தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் நிதானமாக தெளிவாக எழுதி அனுப்பவும் நகல்கள் (ஜெராக்ஸ்) அனுப்ப வேண்டாம். மேலும் தங்களின் ஆக்கங்களுக்குரிய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் இவற்றை முயற்சி செய்து தேடிப்பிடித்து எழுதி அனுப்ப வேண்டுகிறோம். குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் இல்லாத ஆக்கங்கள் அந்நஜாத்தில் இடம் பெற காலதாமதம் ஏற்படலாம், இடம் பெறாமலும் போய் விடலாம். எனவே அவசியம் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை எடுத்தி எழுதி மட்டுமே அனுப்பவும். அப்போது தான் குர்ஆன், ஹதீஸுடைய நேரடி தொடர்பு உங்களுக்கு ஏற்படும்.

ஒஒவ்வொரு ஆணும், பெண்ணும் இடைத்தரகர்கள் – புரோகிதர்கள் இல்லாமல் நேரடியாக குர்ஆன், ஹதீஸுடன் தொடர்பு கொண்டு மார்க்க விளக்கம் பெறவேண்டும் என்பதே அந்நஜாத்தின் மாறாத இலட்சியமாகும்.

——————————————–

 இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை!
மனித நேயத்திற்கு முட்டுக்கட்டை புரோகிதமே!
பல பொய்க் கடவுள் வழிபாட்டைத் திணிப்பது புரோகிதமே!
மூட நம்பிக்கைகளை வளர்ப்பது புரோகிதமே! ஒரே மனித இனத்தில்
பிளவுகளை தோற்றுவிப்பது புரோகிதமே!
புரோகிதம் பஞ்சமா பாவங்களை விட பெரும் பாவம்!
கொடிய ஹறாம் (கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது)
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களைப்
புகுத்துவது புரோகிதமே!

நாத்திகத்தை வித்திட்டு நீர்ப்பாய்ச்சி 
உரமிட்டு வளர்ப்பது புரோகிதமே!
புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும்!
மனித நேயம் வளரும்! புரோகிதம்
ஒழிந்து மனிதம் மலர, மனித நேயம்
வளர அனைவரும் பாடுபடுவோம்.