எதிர் வாதம்

காதியானிகளின் ஆகாசப்புளுகு-1.    ஈஸா(அலை) மரணித்துவிட்டார்கள். உண்மை நிலை :   ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை! ஆயினும் மரணிப்பவர்களே! “என் தாயாருக்கு நன்றி செய்பவனாக இருக்கின்றேன்: நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலைத்திருக்கும்” (என்று கூறினார்) இவர் தாம் மரியமுடைய புதல்வர் ஈஸா ஆவார். இதைக் குறித்துத் தான் அவர்கள் தர்க்கம் செய்கிறார்களே அது பற்றிய உண்மையான […]

{ 0 comments }

விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? […]

{ 0 comments }

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

{ 0 comments }

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

{ 0 comments }

-இப்னு ஹத்தாது. அஹ்மதிகளின் (பொய்க்) கொள்கையை தோலுரித்துக் காட்ட எந்தக் கொம்பனும் இது வரை பிறக்கவில்லை; இனிமேலும் பிறக்கப் போவதில்லை என்ற அஹ்மதிகளின் ஆணவ ஜம்பப் பேச்சை அடுத்து, “காதியானிகளின் ஆகாசப்புளுகு” என்ற பெயரில் நூல் வெளியிட இருக்கிறோம் என்று அந்நஜாத் ஜனவரி 1988ல் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். எமது அறிவிப்புக்கு மறுப்பாக அவர்களின் சமாதான வழியில் அப்படியொரு நூல் வெளியானால் அதற்குப் பக்கத்துக்குப் பக்கம் மறுப்பு எழுதி தனி நூலாக அச்சிட்டு இலவசமாகக் கொடுப்போம் என அகம்பாவமாக […]

{ 0 comments }

விமர்சனம்: அடியக்க மங்களத்தைச் சேர்ந்த சகோதரர் அப்துல் ஹமீத் காதிர் அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு விமர்சனம் அனுப்பியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு: இறைவனைப் பற்றிய கீழ்மட்ட அறிவையுடைய முஸ்லிம்கள், இறைத்தூதர் ஈசா அவர்களை அல்லாஹ் உடலுடன் உயர்த்தி, அவர் அல்லாஹ்வுடன் வானத்தில் வாழ்கிறார். கடைசி நேரத்தில் பூமிக்குத் திரும்பக் காத்திருக்கிறார் என்று நம்புகின்றனர். இதுவே கீழ்மட்ட கிறித்தவர்களின் நம்பிக்கையாகும்.

{ 0 comments }

ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம் 39-ல் “மார்க்கம் மாறாத” என்ற கட்டுரையையும், பக்கம் 53-ல் “பிறை ஒரு விளக்கம்” என்ற அறிவிப்பையும் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அவர்களது இரட்டை வேட போக்கைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே இதழ் பக்கம் 55-ல் “ஜாக்கின் இரட்டை வேடம்” என ஜாக் பிரிவினரை நையாண்டி செய்திருப்பதை விட நையாண்டிக்கு ஆளாகி நிற்கிறார்கள் இவர்கள்.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எனும் ஆயத்தைத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதா? சப்தமின்றி ஓதுவதா? அல்ஜன்னத் ஆசிரியர் அவர்களுக்கு வாசகர் ஒருவர் 15.11.88 அன்று கடிதம் ஒன்று எழுதி, அதன் நகலை நமக்கும் அனுப்பி, வாசகர்கள் தெளிவுபெற பிரசுரிக்குமாறு இரு தரப்பினரையும் கேட்டிருந்தார் ஆறு மாதங்களாகியும் அல்ஜன்னத் ஆசிரியரிடமிருந்து எவ்வித விளக்கமும் கிடைக்கப் பெறாததாலும், அக்கடிதம் அவர்களின் பாணியிலேயே எழுதப்பட்டுள்ளதால் வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று நாம் கருதுவதாலும், நீண்ட கடிதமாக இருந்ததாலும் வாசகர்களுக்குப் பயனுள்ளதை மட்டும் இங்கு […]

{ 0 comments }

 காயல் இப்னுஷேக் தற்காலத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களையும், இறைத்தூதர்களையும் சிறுகதையின் மூலம் சீண்டுவது ஒரு வழக்கமாகி வருகிறது. அண்மையில் நமது நபி(ஸல்) அவர்களை பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் ஹெரால்டு’ எனும் பத்திரிவை இழிவாக எழுதி, பெரும் கலவரமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டு, பின்னர் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் மன்னிப்புக் கேட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம்.

{ 0 comments }

புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம். இறைவனின் மாபெரும் அருட்கொடையான அறிவுச் செல்வம், மனித சமுதாயத்துக்கு வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம் யாதெனில், சிந்தித்துச் செயல்படுவதற்கே! ஆம்! மனிதன் தன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் சிந்தித்துச் செயல்படுவதற்கே!

{ 0 comments }

முஸ்லிம் பெண்மணிக்கு மறுப்பு [PDF]

{ 0 comments }

 எது இஸ்லாமிய ஷரீஅத் சட்டம்? [PDF]

{ 0 comments }

மாநபி வழியில் ‘ஜாக்ஹ்’! “ஜாக்ஹ்’ அமைப்பை அதன் ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வருகிறோம். அதற்கு ‘ஜாக்ஹ்’ அமைப்பு குர்ஆன், ஹதீஸ் போதனைகளுக்கு மாற்றமானது; சமுதாயத்தைக் கூறுபோடுவது என்பதே காரணமின்றி வேறு எந்தவித சுயநல நோக்குமில்லை.

{ 0 comments }

போஸ்ட் மார்ட்டம் : ஹதீஸை வளைப்பது யார்?  Dr.அம்ரைனி (Q.H.) அல்லாஹ்வின் பேரருளால் நாம் சென்ற மார்ச். 1993 இதழில் பக்கம் 38-ல் ஹுதைபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் அரபி மூலத்தையும் அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டிருந்தோம். அந்நபிமொழிப்படி நாம் நமது எண்ணம், சொல், செயல் ஏன்? தனிப் பெயர்கள் மூலமாக கூட பற்பலப் பிரிவுகளாக பிரியாமல் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திக் காட்டிய, அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனயும், நபியின் வழியையும் பற்றிப்பிடித்த ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமாக […]

{ 0 comments }

அந்நஜாத் சிறப்பு நிருபர் அண்மையில் பெரம்பலூரில் நடந்த ஒரு மீலாது விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஒரு முழு நாள் விழா. ஆங்காங்கு சில நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பத்துக்கும் மேற்பட்ட மெளலானா மெளலவிகளி(?)ன் பெயர்கள் முன்னும், பின்னும் பற்பல பட்டங்களுடன் பொறிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி தான் பொறுப்பேற்றுள்ள பதவிகளையும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தனர். குர்ஆன், ஹதீஸ் போதிக்க வேண்டிய ஆலிம்கள் என்ன பேசுகிறார்கள்! மீலாது விழாவை எப்படி சிறப்பிக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் சிறிது அவர்கள் சொற்பொழிவை […]

{ 0 comments }

  கிரிட்டிக் அந்நஜாத்தில் தவறு இருப்பதாக எந்த பத்திரிகையில் எழுதப்பட்டாலும், அதை விருப்பு, வெறுப்பு இன்றி ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்து, நியாயத்தை எடுத்து வைப்பதே துலாக்கோல் எனும் இப்பகுதியின் நோக்கம். மேலும் தவறு இருந்தால் திருத்திக்கொண்டு, அதை வெளியிடுவதும், இப்பகுதியின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு நன்றி சொல்ல ‘அந்நஜாத்’ கடமைப்பட்டுள்ளது. குறைகளைச் சுட்டிக் காட்டுவோர், தயை கூர்ந்து சத்தியத்தை நிலைநாட்டும் நன்நோக்குடன் செயல்படுவார்களாக!

{ 0 comments }

  S. ஹபிபுல்லாஹ் – சென்னை-33. வேதக்காரப் பெண்களை இக்காலத்தில் மண முடிக்கலாமா? என்று சகோதரர் ஒருவர் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு நாம் வசனம் 5:5யும், நபித் தோழர்களின் செயல்களையும் ஆதாரமாகக் காட்டி விளக்கினோம். ஆனால் சில பத்திரிகைகள் ஆதாரமின்றி, விளம்பர ஆதாயம் தேடி அந்நஜாத்திற்கு வினா விடுக்கின்றனர். அவர்களுக்கு நமது வாசகர் ஒருவர் விளக்கமாக எழுதிய கட்டுரையை, வாசகர் மலரில் வெளியிடுவது பொருத்தமாக அமையும். – ஆசிரியர்.

{ 0 comments }

  (ஒரு பகிரங்கக் கடிதம்) A. ஷேக் அலாவுதீன், நல்லம்மாள். அன்புள்ள மவ்லவி………ரப்பானி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற 24-8-87ம் தேதி காரைக்காலை அடுத்துள்ள நல்லம்பல் எனும் ஊரில் நடந்த ஷரீஅத் விளக்கப் பொதுகூட்டத்தில், தாங்கள் ‘ஷரீஅத்தை’ப் பற்றி பேசினீர்கள்.

{ 0 comments }

1987 ஜூலை ‘அந்நஜாத்’ இதழில் வெளியான , ஆதம(அலை) மூஸா(அலை) விவாதம் சம்பந்தப்பட்ட ஹதீது கட்டுக்கதை என்று மேலப்பாளையம் ஜமாலுதீன் என்பவர், அந்நஜாத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதம் அர்த்தமற்ற பிதற்றலாகவும், ஈமானில்லாதவர்களின் வாதமாகவும் இருந்தால், அதைக் குப்பைக் கூடையில் எறிந்து விட்டோம். (இந்தக் கேள்வி நாஸ்திகர்களிடமிருந்து வந்திருந்தால் மதிப்புக் கொடுத்து விளக்கம் கொடுக்க முற்பட்டிருப்போம்) ஆனால் அக்கடிதத்தை காதியானிகள், தங்கள் சமாதான வழியில் வெளியிட்டிருப்பதால், காதியானிகளின் கொள்கையும் அதுதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதமாகின்றது.

{ 0 comments }

அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ் ஜுன் 1987 – ஷவ்வால் 1407 ************************************ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் எல்லோருமே சேர்ந்து ஒன்றாக வெளியே செல்வது கூடாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும் (வெளியேறி சென்ற அவர்கள்) (பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களைத் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 9 : 122) *********************************** வேஷம் […]

{ 0 comments }