படிப்பினை

இப்னு ஹத்தாது ‘ஹுவ சம்மாக்குமுல் முஸ்லிமீன்’ (அல்குர்ஆன் 22: 78) இப்றாஹீம்(அலை) அவர்களே ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டதாக பல குர்ஆன் தர்ஜுமாக்களிலும், தப்ஸீர்களிலும் காணக் கிடைக்கிறது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோரின் நம்பிக்கையும் இதுவேயாகும். நாமும் நமது “நஜாத்” ஆகஸ்ட் இதழ் 7-ம் பக்கத்தில் ‘தியாகத் திருநாள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘நமக்கு முஸ்லிம் என பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை)’,என்றே குறிப்பிட்டிருந்தோம்.

{ 0 comments }

மர்ஹும் (ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபாஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபாஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?” என்று சென்னையைச் சேர்ந்த சகோதரர் நூர் முகம்மது அவர்களும், மதுரை நரிமேட்டைச் சேர்ந்த கலீபா குலாம் ஹுஸைன் சுஹரவர்தீ என்பவரும் கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு விளக்கமாக இந்தக் கட்டுரை […]

{ 0 comments }

இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும். இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத் தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் […]

{ 0 comments }

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு(தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

{ 0 comments }

ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஏன்? எதற்கு?[PDF]

{ 0 comments }

அபூ ஜைனப், சென்னை. இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள வேண்டும்! இஸ்லாமிய அழைப்புப்பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை, பிணக்கு மிக வேகமாக நம்மிடையே பரவியுள்ளது வருந்தத்தக்கதே! இவ்விதம் நம்மிடையே ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.

{ 0 comments }

அபூ ருகையா நபிவழியே நல்வழி,நாயன் அன்பைப் பெறும் வழி! நபிவழி இன்றேல் நாயன் அன்பில்லை! (இத்திபாவும், இதாஅத்தும்) (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராயிருப்பின், என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறார்.

{ 0 comments }

சமூகவியல்: புலவர் செ. ஜஃபர் அலீ, பி்லிட்., கும்பகோணம். “விசுவாசிகள் (யாவரும்) உறுதியாகச் சகோதரர்களே! ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் (ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தி) சுமுக நிலையை உண்டாக்குங்கள். மேலும் (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள் (இதனால்) அவனுடைய பேரருளைப் பெறலாம்” (அல்குர்ஆன் 49 :10)

{ 0 comments }

  A.R. முகையத்தீன், B.E., விருதுநகர். “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.” அல்குர்ஆன் 2:200.

{ 0 comments }

  ஆமீனா முஹம்மது, B.Sc., B.Ed., பொன்மலை. லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.

{ 0 comments }

அபூ ரஜீன் அல்லாஹ் உண்மையையே கூறி (அதன் மூலம் மக்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறான். (33 : 4) மனித இயல்பின்படி மறதி என்பது அனைவரிடத்திலும் காணப்படுகிறது. மனிதன் மறதியாளனாயிருப்பதன் காரணமாகவே சந்தேகம் அவனில் தோன்றுகிறது. சந்தேகமே அவனை அவ நம்பிக்கைக்கு ஆளாக்குகிறது.

{ 0 comments }

M. அப்துல் ஹமீது, திருச்சி. சமீப காலத்தில் வெளியாகிய மத்ஹபுகள் அவசியமே என்ற நூலை, ஆரம்பம் முதல் இறுதி வரை கவனமாகப் படித்து பார்த்தேன். அப்புத்தகத்தைப் படித்துப் பார்த்த பின் மத்ஹபுகள் அவசியமே இல்லை! என்ற முடிவுக்கே என்னால் வர முடிந்தது. அதற்குரிய காரணங்களைத் தொகுத்துத் தருகிறேன் சிந்தனையாளர்கள் சிந்தித்து விளங்கிக் கொள்வார்களாக.

{ 0 comments }

அபூஃபாத்திமா (“ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் […]

{ 0 comments }

  புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம் மனிதகள் – ஒன்று முதல் ஐயறிவுகளைப் பெற்றுள்ள உயிர்களிடத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டவனாக விளங்குகிறான். எதனையும் பகுத்துணரும் பக்குவத்தைப் பெற்றவனாகவும் திகழ்கின்றான். எது நன்மையான செயல்? எது தீமையான செயல்? என்பதில் அவனுக்குப் படிப்படியாகத் தெளிவும் ஏற்பட்டு விடுகின்றது.

{ 0 comments }

  அபூ உவைஸ் எந்தக் கல்வி கற்க வேண்டும், எந்தக் கல்வி கற்கக்கூடாது, என்று மார்க்கத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய கல்வியைக் கற்கவேண்டும். இறைவசனம் – இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விதித்த மார்க்க வரம்பை மீறாத தன்மையுடைய கல்வியைக் கற்க வேண்டும், மார்க்கத்திற்கு முரணாக எக்கல்வியாலும், அதனைக் கற்கக்கூடாது.

{ 0 comments }

புலவர் செ. ஜஃபர் அலீ பி.லிட்., கும்பகோணம். சமூகவியல் உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ் பல இடங்களில் திருமறையிலே தெளிவுபடுத்திக் காட்டுகின்றான்.

{ 0 comments }

அன்புசால் ஆலிம் பெரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்தக் கட்டுரையை ஆராய்ந்து படியுங்கள்.

{ 0 comments }

  புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., சமூகவியல்: பண்பாடு அமையப் பெற்றவனே மனிதனாவான். சமூகம் என்று சொல்லும்போது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதக் கூட்டத்தையே ‘சமூகம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். எந்த சமூகம் ஒழுங்கு நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு சிறப்பாக்கப்படுகின்றதோ அந்த சமூகம் உலகின் உச்சியில் வைத்து மெச்சப்படும் என்பது ஒப்புக்கொள்ளப்படும் உண்மையாகும்.

{ 0 comments }

K.M.H. அபூஅப்தில்லாஹ் (சென்ற இதழ் தொடர்ச்சி) அவர்கள் “நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள்; அவை அல்லாஹுவின் வேதமும், எனது நடைமுறையுமாகும்” என்ற நபி(ஸல்) அவர்களின் உத்தரவுப்படி குர்ஆனையும், ஹதீதையும் பின்பற்றுபவர்களாக இருக்க முடியுமே அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கக் கோருகிறோம்.

{ 0 comments }

K.M.H. அபூ அப்துல்லாஹ் (நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும் ஒருவன் தன்னை “முஸ்லிம்” என்று சொல்லிக் கொள்ள விரும்புவானேயல்லாமல் “அஹ்ல சுன்னத் – வல் – ஜமாஅத்” என்று அழைத்துக் கொள்ள விரும்ப மாட்டான். காரணம் நபி(ஸல்) அவ்வாறுற அழைத்துக் கொள்ளக் கற்றுத்தரவில்லை. ஆயினும் “அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்” என்று முஸ்லிம்களை ஒரு சாரார் குழப்பி வருவதால் அந்த அடிப்படையிலும் அதற்குச் சொந்தக்காரர்கள் குர்ஆன், ஹதீதுபடி நடப்பவர்களே என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்)

{ 0 comments }