1986 அக்டோபர்

மர்ஹும் (ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபாஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபாஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?” என்று சென்னையைச் சேர்ந்த சகோதரர் நூர் முகம்மது அவர்களும், மதுரை நரிமேட்டைச் சேர்ந்த கலீபா குலாம் ஹுஸைன் சுஹரவர்தீ என்பவரும் கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு விளக்கமாக இந்தக் கட்டுரை […]

{ 0 comments }

S.N. குத்புதீன், B.A., செய்த தவறை நியாயப்படுத்தல் அரண்மனையில் – அஜீஸின் வீட்டிற்குள் நடந்த இச்சம்பவம் அரண்மனையில் இருந்தவர்கள் மூலமாக வெளி உலகுக்கு அம்பலமாகியது. குறிப்பாக இந்த நிகழ்ச்சி பெண்களிடையே வெகு வேகமாகப் பரவியது. தங்களிடையே இதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

{ 0 comments }

மவ்லவி K.M. இக்பால் மதனீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! நபிமொழி. நூல்கள்: புகாரி, அஹ்மத். “ஒளூ செய்வதற்காக எந்தெந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்” என்று சென்ற இதழில் கண்டோம். “அந்தத் தண்ணீரில் தூய்மையான பொருட்கள் கலந்து விட்டால் அதைப் பயன்படுத்தலாமா” என்பதை ஆராய்வோம்.

{ 0 comments }

மவ்லவி. S. கமாலுத்தீன், ஜமாலி, மதனீ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

{ 0 comments }

பீ.ஜே உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)    இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்!

{ 0 comments }

முகம்மது அலி, M.A., “ஸலவாத்துன்னாரிய்யா” என்பது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல, மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்-அத்” -பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது – என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதை இந்த இதழில் காண்போம்.

{ 0 comments }

 இப்னு மர்யம். தவறான ஐயமும் தக்க விளக்கமும் “மவ்லிது ஓதலாம், ஓத வேண்டும்” என்று கூறுபுவர்களின் முதல் ஆதாரமான முன்னோர்கள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கை குர்ஆனின் தெளிவான வசனங்களால் தகர்த்தெறியப்பட்ட பின்பும் தங்கள் மனோ இச்சையை சிலர் விடுவதற்குத் தயாராக இல்லை. மாறாக அதை எப்படியேனும் நியாயப்படுத்திட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகின்றனர்.

{ 0 comments }

மெளலவி A. அலாவுதீன் பாக்கவி, ஆற்றங்கரை. நெஞ்சு பொறுக்குதில்லையே! கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தல் கால் ஊன்றுதல்’ பக்தி சிரத்தையோடு நடை பெறுகிறது! அதாவது திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னதாக திருமண வீட்டார், ஊர்த் தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் “இத்தனை மணிக்கு பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை […]

{ 0 comments }

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா?     அல்லாஹ்வின் அடிமை (ஊர் இல்லை) 

{ 0 comments }

எழுபது வருடங்களாக ‘பள்ளிவாசல் யானை’ என்று பெருமையோடு நெல்லை மாவட்டத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பவனி வந்து கொண்டிருந்த பொட்டல்புதூர் மொய்தீன் பிச்சையை (ஹபீப் ராஜா) காலன் பறித்த போது சுற்று வட்டாரங்களில் இருந்து பெருமூச்சோடும், கண்ணீரோடும் பல்லாயிரம் மக்கள் செலுத்திய இறுதி அஞ்சலி, ஏட்டில் எழுத இயலாத பாசம் கலந்த நிகழ்ச்சியாகும்.

{ 0 comments }

அபூ முஸ்லிம் ஆண்மைக் கழகு தாடி வளர்த்தல் (“இஸ்லாத்தில் புறத்தோற்றம்” என்ற புதிய பகுதியை இந்த இதழிலிருந்து தொடங்குகிறோம். இந்த தொடரில், தாடி, மீசை, தலைமுடி, ஆடை அணிதல் போன்ற பிரச்சனைகள் இடம் பெறும் இந்த இதழில் தாடி பற்றிய விளக்கம் காண்போம்) முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி […]

{ 0 comments }

மவ்லவி P.S.அலாவுத்தீன். இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் கேள்வி: நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப் படுவதற்கு நிபந்தனைகள் யாவை?

{ 0 comments }

அபூயாகூப் உம்ரீ, பரங்கிப்பேட்டை “அல்லாஹ் போதுமானவன்” என்ற சொற்றொடரை அடிக்கடி நம்மவர்கள் பயன்படுத்துவதை நாம் செவியுறுகிறோம். அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற தர்ஹாக்களில் தவம் கிடப்பதைக் காணும் போது, “அல்லாஹ் இவர்களுக்குப் போதவில்லை” என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஏதோ சம்பிரதாயத்திற்காக இந்த சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்களேயன்றி அதன் பொருளை அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

{ 0 comments }

அபூ அப்துல்லாஹ் சென்ற நான்கு இதழ்களில் பலவீனமான (லயீஃப்) இட்டுக் கட்டப்பட்ட (மவ்லுஃ) ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், அவற்றைக் கொண்டு அமல்கள் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள், அவை தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தும், அவை இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழ வேரூன்றிய காரணங்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஆசிரியர்: மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் உலவி அக்டோபர் 1986 ஸபர் 1407 ******************************** “நஜாத்” உதயமானபின் தமிழகத்தில் நல்லதொரு மாறுதலை நாம் காண்கிறோம். ஆலிம்கள், படித்தவர்களில் பலரும் மனம் திறந்து நஜாத்தை வரவேற்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ். இன்னொரு புறத்தில், மிரட்டல்களும், வசைமொழிகளும் வந்து கொண்டுதானிருக்கின்றன. எதுவரினும் நம்முடைய நிலையில் மாற்றம் எதுவுமில்லை. எல்லாவற்றுக்கும் எங்களைத் தயார்படுத்திக் கொண்டு தான் களத்தில் இறங்கி இருக்கிறோம். மஞ்சள் பத்திரிகைகளுக்கும், பச்சை […]

{ 0 comments }

‘தஸ்பீஹ் மணி வைத்துக் கொள்ளலாம்’ என்று குர்ஆனின் குரலில் எழுதி அதற்கு ஆதாரமாக, ஸஅத்பின் அபீ வக்காஸ்(ரழி) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெர்களுடன் ஒரு பெண்மணியிடம் சென்றார்கள். அப்பெண்மணிக்கு தனக்கு முன்னால் ஈச்சங் கொட்டைகளையோ, அல்லது பொடிக் கற்களையோ வைத்துக் கொண்டு தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார் என்று திர்மிதீ, அபூதாவூது ஆகிய நூல்களில் இடம் பெற்றதாக ஒரு ஹதீஸை எழுதியுள்ளனர். நீங்கள் தஹ்பீஹ் மணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று எழுதி இருந்தீர்கள், இதற்கு விளக்கம் […]

{ 0 comments }