1986 ஆகஸ்ட்

இப்னு ஹத்தாது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து […]

{ 0 comments }

அபூ சுமையா, நாகை. கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”. சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும். வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!.. என்ன கேவலம்! சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சென்ற இதழில், பலவீனமான(லயீஃப்) ஹதீதகளைக் கொண்டு அமல் செய்யலாம் என்ற கருத்து, குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முரண்படுகின்றது; ஆகவே அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று என்ற விபரத்தை அறிந்தோம். முன்கரான ஹதீதுகள்:- இந்த இதழில், முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது குறித்து ஆராய்வோம்.

{ 0 comments }

புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்.,  அல் – அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம். மனிதர்களுள் நன்மையை ஏவும் ஒரு குழு இருப்பதைப் போல், நன்மைகளைத் தடுத்து, தீமைகளை நன்மைகளைப்போல் உருவகப்படுத்தி மக்கள் சமுதாயத்தைப் படுகுழியில் வீழ்ச்சியுறச் செய்வதில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதுதான் “சுயநலக் கும்பல்”! எங்கே தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, உண்மைகளை மறைத்து, பொய்களை இட்டுக்கட்டி – சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் குளிர்காய்ந்து, தங்களின் வளமான வாழ்வைத் […]

{ 0 comments }

அபூஷர்புன்னிஸா இன்று பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் ‘இஸ்லாம்’ பல விஷயங்களில் தனித்தன்மை பெற்று விளங்குவதை அறிவுடைய எவரும் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கே நாம் சுட்டிக்காட்டுகிறோம். பரம்பரை அடிப்படையில் ஒருவன் அல்லது ஒரு இனம் தன்னையோ அல்லது தங்களையோ உயர்வாகக் கருதிக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. நடத்தையும், கொள்கையும் சரியாக அமையாத போது எவ்வளவு உயர்ந்தவரின் சந்ததியாக இருந்தாலும் அல்லாஹ் அந்த உறவுக்கு எந்த மதிப்பும் வழங்க மாட்டான் […]

{ 0 comments }

மவ்லவி M. அப்துல் ஜலீல் உமரி, மதனீ மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையானாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபாடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதற்குத் தெளிவான விளக்கத்தைத் திருக்குர்ஆன் மட்டுமே தர முடியும். இதோ குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். “மனிதர்கள் ஓரே சமுதாயமாகவே […]

{ 0 comments }

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: ஆறு நோன்பில் இரண்டு தான் வைத்தேன். இன்னும் நான்கு  நோன்பு வைக்கவில்லை. ‘களா’ செய்யலாமா? P.S. ஜியாவுத்தீன், யாகாதிர் டிரேடிங் கம்பெனி, சங்கரன்பந்தல். பதில்: ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது சுன்னத். தவறவிட்டுவிட்டால் ‘களா’ செய்வதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. கேள்வி: பால், வாசனைப் பொருட்கள், பெண்கள் இம்மூன்றும் எனக்கு மிகவும் விருப்பமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆலிம் பயான் செய்தார். அந்த ஹதீஸ் […]

{ 0 comments }

இப்னு மர்யம் நமது முன்னோர்கள்   “பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று […]

{ 0 comments }

முகம்மது அலி M.A., ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் “அந்த நபிமார்கள் […]

{ 0 comments }

இப்னு எஹ்யா, சங்கரன் பந்தல் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது. குழப்பத்தைத் தீர்க்க வேண்டியவர்களே குழம்பிப் போய் நிற்கின்றனர். தெளிவு படுத்த வேண்டியவர்களே தெளிவின்றி நிற்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் மார்க்கம் ஒரு […]

{ 0 comments }

சிறுவர் பகுதி மவ்லவி P.S. அலாவுதீன், தொண்டி. *********************************   ஏகத்துவத்தின் பல வகைகளும் அதன் பயன்களும்:- கேள்வி: அல்லாஹ் திருத்தூதர்களை எதற்காக அனுப்பினான்? பதில்: தன்னை வணங்குவதற்காக மக்களை அழைப்பதற்காகவும் தனக்கு இணை கற்பிக்கும் பாவத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவுமே அல்லாஹ் திருத்தூதர்களை அனுப்பினான். “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்! (இறைவனல்லாதவற்றை வணங்கத் தூண்டும்) ‘தாகூத்’களை விட்டு விலகி விடுங்கள்! என்று (மக்களை அழைப்பதற்காகவே) ஒவ்வொரு சமுதாயத்தவரிலும் நாம் ஒரு திருத்தூதரை நிச்சயமாக அனுப்பினோம். (அல்குர்ஆன் 16: 36)

{ 0 comments }

  கடல் கடந்து சென்ற தமிழ் முஸ்லீம்கள் துபையில் “இஸ்லாமிய இளைஞர் இயக்கம்” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திய போது P.S. அலாவூதீன் ஆலிம் அவர்கள் எழுதிய கடிதம் இது. கடிதமென்றாலும் இதுவே ஒரு கட்டுரை போல் அமைந்துள்ளதால் அதனை அப்படியே இங்கு இடம் பெறச் செய்கிறோம். இந்த மடலை அனுப்பித் தந்த சகோதரர் K.M. அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றி. (ஆசிரியர்) பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…..) தங்களின் மடல் வரப்பெற்று பேரானந்தம் அடைந்தோம். பொதுவாகவே […]

{ 0 comments }

‘ரொட்டி’ அடுக்க வாருங்கள்!! K. முஹம்மது கெளஸ், திருச்சி-8. தலைப்பார ரொட்டி பாத்திஹா – இது ஒன்றும் நவீன பாத்திஹா அன்று. மிகப்பழமையான பாத்திஹா தான். குடும்பத்தில் மூத்தவர்களுக்கு, அதுவும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே ஓதும் ஓர வஞ்சணையான பாத்திஹா இது. ஒரு நபரின் திருமண நாளுக்கு முந்திய நாள், அல்லது சுன்னத் (விருத்தசேதனம்) செய்வதற்கு முந்திய நாள் இந்நிகழ்ச்சியைச் செய்யும் பழக்கம் இன்று வரை நெல்லை மாவட்டத்தில் வழக்கத்திலுள்ளது. ரொட்டி அடுக்க வாருங்கள் என வீட்டுக்கு […]

{ 0 comments }

“திருக்குர்ஆன் வசனங்களை நீங்கள் தவறாக மொழி பெயர்க்கின்றீர்கள்” என்று சிலர் கூறுகின்றனர். அல்லாஹ் சிலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “அவைகள்” என்று குறிப்பிடுகிறான். நீங்கள் அந்த இடங்களில் “அவர்கள்” என்று மொழி பெயர்ப்புச் செய்துள்ளீர்கள். அதாவது சிலைகளைப்பற்றி இறங்கிய வசனங்களை நல்லடியார்களுக்குப் பயன் படுத்தியுள்ளீர்கள்! தமிழ் தர்ஜுமாக்களில் “அவைகள்” என்றே பொருள் செய்யப்பட்டுள்ளன” என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே! இதற்குச் சரியான விளக்கம் என்ன? -மவ்லவி முஹம்மது யூசுப், பொட்டல்புதூர்.

{ 0 comments }

ஹஜ் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான். “உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!” (அல்குர்ஆன் 108 :2) என்று அல்லாஹ் கூறுகிறான்.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் 1986 ஆகஸ்ட் துல்ஹஜ் 1406 நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஆசிரியர்: மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் உலவி நஜாத்தை ஆர்வத்துடன் படித்து வருகின்ற அன்புச் சகோதரர்களே! உங்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதுகண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம். “கடுமையான சொற்கள் பிரயோகிக்க வேண்டாம்” என்று பல வாசகர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதை ஏற்று, இந்த இதழில் முடிந்த அளவு அவற்றைத் தவிர்த்துள்ளோம். எனினும் ஒரு சில இடங்களில் காரம் […]

{ 0 comments }