1986 நவம்பர்

அல்லாஹ்வின் வல்லமையை விளக்கி அண்ணலார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அல்லாஹ் கூறுகிறான்:- எனது அடியார்களே! நான் நிச்சயமாக (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் அதை ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள் தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்ளைத் தவிர, ஆகவே நேர் வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

{ 0 comments }

மவ்லவி K.M. முஹம்மது இக்பால் மதனீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்!  (நபிமொழி) நூல்கள்: புகாரி, அஹ்மத் ஒளூச் செய்தல் தொழுவதற்கு முன்னால் கட்டாயம் ஒளூ செய்ய வேண்டும்! ஒளூ இல்லாமல் தொழுதால் அது தொழுகையாகாது.

{ 0 comments }

மவ்லவி K.S. ரஹ்மதுல்லா (இம்தாதி) கோட்டாறு. கோட்டாறில் சென்ற ஜுலை மாதம் நடந்த விவாத அரங்க பற்றி முஸ்லிம் முரசு ஏடு தவறான பல தகவல்களை “கண்டதும் கேட்டதும்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. கதைப் புத்தகத்தில் எழுதப்படுகின்ற விஷயத்துக்கு அறிஞர் உலகம் மதிப்பு ஏதும் தரக் கூடாது என்ற எண்ணத்தில் அதற்கு மறுப்பேதும் எழுதத் தோன்றவில்லை.

{ 0 comments }

  மெளலவி O.N. முஹம்மது பஷீர் மிஸ்பாஹி பாஜில் மன்பஈ இன்று முஸ்லிம் சமுதாய பாமரர்களைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் பல ஷிர்க்கான சம்பிரதாயங்களில் தாயத்தும் ஒன்னறு. இன்று சிலர் தங்களின் தொப்பையை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் ஒரு குறுக்கு வழி தான் தாயத்து, தகடு, கயிறு முடியுதல் போன்ற பித்தலாட்டச் செயல்கள். இச்செயல்கள் யாவும் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல்களாகும். இச்செயல்களை குர்ஆனும், ஹதீசும் வன்மையாகக் கண்டிருக்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான்:

{ 0 comments }

P. ஜைனுல் ஆபிதீன் கஃபத்துல்லாஹ் இடம் பெயர்ந்ததா? இமாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது. கஃபத்துல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம். இது கதைச் சருக்கம். இந்தக் கதை பல வகைகளில் விரிவு படுத்தப்பட்டு பல விதமாக சொல்லப்படுகின்றது. “இந்தக் கதை சரியானது தானா?” என்று நாம் ஆராய்வோம்!

{ 0 comments }

மவ்லவி P.S. அலாவுத்தீன். அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வகைகளில் மிகப் பெரும் வகை கேள்வி: அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது எது? பதில்: அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவமாகும்.

{ 0 comments }

மெளலவி S. கமாலுத்தீன் மதனீ நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படி தொகுக்கப் பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிய ஆரம்பிப்பதற்கு முன்னால் நபி வழி என்றால் என்ன? நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவனுக்குரிய தண்டனை என்ன? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.

{ 0 comments }

சென்ற அக்டோபர் மாத ரஹ்மத் இதழில் “ஆலிம்கள் குமுறுகிறார்கள்” என்ற தலைப்பில் அத்திக் கடை மற்றும் பொதக்குடியைச் சேர்ந்த 18 ஆலிம்களின் கடிதம் ஒன்றை பிரசுரம் செய்திருக்கிறார் அதன் ஆசிரியர். மாநில ஜமாஅத்துல் உலமாவின் செயலாளர் என்ற முறையில் எழுதப்பட்ட கடிதத்தை சபையில் தன்னிச்சையாக தனது பத்திரிக்கையில் வெளியிட்டு சர்வாதிகாரி போல் அவர் நடந்து கொண்டிருப்பது, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதைப்பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை.

{ 0 comments }

முகம்மது அலி, M.A., ஸலவாத்’ சொல்வதனால் ஏற்படக் கூடிய சிறப்புகளையும், ஸலவாத்தின் பொருளையும், அதன் காரணத்தையும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ‘ஸலவாத்’ எவை? பிற்காலத்தில் உருவாக்கப்பட்டட ‘ஸலவாத்’ எவை? என்பதையும் இதுவரை நாம் பார்த்தோம்.

{ 0 comments }

  ரஹ்மத் ஆசிரியருக்கு பகிரங்க கடிதம் மரியாதைக்குரிய ‘ரஹ்மத்’ ஆசிரியருக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அக்டோபர் இதழில் “இஸ்லாமிய சட்ட விளக்கம்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தை உங்கள் மனம்போன போக்கில் எழுதி இருக்கிறீர்கள்! நஜாத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள். இது பற்றிய உண்மையை மக்களுக்கு அறிவிப்பதற்காக – இந்தப் பகிரங்கக் கடிதம் எழுதப்படுகிறது. உங்கள் பத்திரிகை வாயிலாகவே இதற்கு பதிலை எதிர்பார்க்கிறோம்.

{ 0 comments }

அபூ முஹம்மத் தலைமுடி வளர்த்தல் தவறானதல்ல! நம் தமிழகத்தில் நீண்ட காலமாக தலைமுடிப் பற்றி தவறான கருத்து நிலவி வருகின்றது. “உண்மையான முஸ்லிம் தலையை மொட்டை அடித்துக் கொள்வதே சிறந்தது” என்ற எண்ணம் மேலோங்கியுள்ளதை நாம் காண முடிகின்றது. தலையில் முடி வளர்ப்பது தவறு என்றும் கருதப்படுகின்றது. “இஸ்லாம் தலைமுடி பற்றி என்ன சொல்கிறது?” என்பதை நாம் விரிவாகப் பார்ப்போம்.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்! அல்லாஹ்வின் அருளால் நஜாத் தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது வாசக நேயர்கள் நன்கறிந்த உண்மை. அதே நேரத்தில் நஜாத்தின் வாயிலாக இஸ்லாமிய சமுதாயம் அடைந்து வரும் பெரும் பயனைக் கண்டு, மெளலவிகள் குமுறுகிறார்களாம், ஆலிம்கள் குழம்புகிறார்களாம். ஆம்! குமுறுவார்கள்: கொந்தளிப்பார்கள். காரணம் காலா காலமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லிய உண்மைகளை உலகுக்கு உணர்த்தாமல் அதையும், இதையும் அவரும் இவரும் சொன்னதையெல்லாம் மார்க்கமென மக்களுக்கு அறிமுகம் செய்து இந்த ஆலிம்களும், […]

{ 0 comments }