1987 அக்டோபர்

  K.M.H. இறைவன் ஒருவன் இருப்பானேயாகில் இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும், தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங் காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகம்; ஏன் இது அவர்களின் வாதமும்கூட.

{ 0 comments }

ஐயம் : இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ருல் ஹாஃபீ, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம்பிக்கை, நாணம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சித்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) (திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னுமாஜ்ஜா) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

{ 0 comments }

அபூ அப்துர்ரஹ்மான் (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)

{ 0 comments }

  அபூ அஸ்மா அந் நஜாத் செப்டம்பர் 87 இதழில், முஹர்ரம் மாதத்தின் சிறப்புப் பற்றிக் கூறி, அதன் அனாச்சாரங்களையும் விவரித்திருந்தோம். இதோ ஸஃபருல் முழஃப்ஃபர் எனும் வெற்றி வாய்ந்த ஸஃபர் என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதம், “எம் மாதத்தால் எத்தீங்கும் நிகழ்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ அத்தகைய ஸபர் மாதம் நம்மிடையே வந்திருக்கிறது.

{ 0 comments }

அபூமர்யம் அந்நஜாத்’ செப்டம்பர்’87 இதழில், புர்தாவிலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூழி’லுள்ள ஞானம், உங்களள் ஞானங்களின் ஒரு பகுதியே எனும் கவிதையடியை, ஹதீஸ்களின் வெளிச்சத்தில், அலசி ஆராய்தோம். அதில், குறிப்பாக அன்னை ஆயிஸா(ரழி) அவர்களைப் பற்றிய அவதூறு சம்பவத்திலிருந்து, அந்தக் கவியடி முழுமையாக ஹதீஸ்களுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டோம்.

{ 0 comments }

இப்னு ஹத்தாது நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்தார்கள்; அவர்களின் சொந்த விருப்பங்களும் நிராகரிக்கப்பட்டன என்பதற்குரிய ஆதாரங்கள்:- “(நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்”. (52:48)

{ 0 comments }

  A. முஹம்மது அலி, M.A., திருச்சி -4. திருமணம், குடும்ப வாழ்வு, இல்லற இன்பம் போன்றவற்றிற்கு, இஸ்லாம் அளித்திருக்கும் சிறப்பை, வேறு எந்த மதமும் தரவில்லையென்பது யாவரும் அறிந்ததே. “திருமணம் எனது வழிமுறை, திருமணம் புரியாதவன் என்னைச் சார்ந்தவனல்ல.” அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரழி) ஆதாரம் : முஸ்லிம், புகாரி.

{ 0 comments }

  மீண்டும் தராவீஹ் என்ற தலைப்பில் , கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய ‘அந்நஜாத்’ இதழ்களில், ‘குர்ஆனின் குர’லில் வெளிவந்த தராவீஹ் பற்றிய தவறான விளக்கங்களை விரிவாகப் பார்த்தோம். அதில், நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவில் தொழுதது 8+3 ரகஅத்கள் தான் இரண்டு நபித் தோழர்கட்கு உத்திரவிட்டது 8+3 ரகஅத்கள் தான் என்றும், உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் தொழுதது 20+3 ரகஅத்கள், அதை, உமர்(ரழி) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் தரப்படவில்லை […]

{ 0 comments }

1987 ஜூலை ‘அந்நஜாத்’ இதழில் வெளியான , ஆதம(அலை) மூஸா(அலை) விவாதம் சம்பந்தப்பட்ட ஹதீது கட்டுக்கதை என்று மேலப்பாளையம் ஜமாலுதீன் என்பவர், அந்நஜாத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதம் அர்த்தமற்ற பிதற்றலாகவும், ஈமானில்லாதவர்களின் வாதமாகவும் இருந்தால், அதைக் குப்பைக் கூடையில் எறிந்து விட்டோம். (இந்தக் கேள்வி நாஸ்திகர்களிடமிருந்து வந்திருந்தால் மதிப்புக் கொடுத்து விளக்கம் கொடுக்க முற்பட்டிருப்போம்) ஆனால் அக்கடிதத்தை காதியானிகள், தங்கள் சமாதான வழியில் வெளியிட்டிருப்பதால், காதியானிகளின் கொள்கையும் அதுதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதமாகின்றது.

{ 0 comments }

அபூஃபாத்திமா (“ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் […]

{ 0 comments }

“அந் நஜாத்” செப்டம்பர்’87 இதழில், ‘தக்லீது ஒர் ஆய்வு’ என்ற கட்டுரையில் ‘இத்திபா’ என்பதற்கு, விளங்கிப் பின்பற்றல் என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அதே கட்டுரையில், 7:3 வசனத்திலுள்ள ‘வலா தத்திபிவு’ என்ற பதமும், 2:170 வசனத்திலுள்ள ‘தத்திபிவு’ என்ற பதமும், ‘இத்திபா’ என்ற மூலத்திலிருந்து வந்தது தானே? அப்படியானால் விளங்கிப் பின்பற்றுவோம் என்றும் பொருள் கொள்ள இடமேற்படுகிறதே? P.M. முஹம்மது இபுராஹிம், நாகர்கோவில்.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அந்நஜாத் இலட்சிய இஸ்லாமிய மாத இதழ் அக்டோபர், 1987 – ஸபர், 1408 ********************************** அடியோடு நாசப்படுத்தும் அபாயமான நோய்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னுள்ள சமுதாயத்தவரின் வியாதியானது உங்களிடத்திலும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது. (அதுதான்) பொறாமையும், வெறுப்புணர்ச்சியுமாகும். இ(வ் வியாதியானது)து அடியோடு களைந்து விடக் கூடியதாகும். நான் உரோமங்களை களைந்து விடும் என்று கூறவில்லை. எனினும் அது உங்களின் சன்மார்க்கத்தின் பண்பாட்டையே களைந்து (நாசப்படுத்தி) விடும் என எச்சரிக்கிறேன். ஜுபைர்(ரழி) (அஹ்மத், […]

{ 0 comments }