1987 செப்டம்பர்

அபூஃபாத்திமா இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணனாதாகும், என்று சொன்னவுடன், தக்லீது செய்யக் கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீதுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந் நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் தக்லீது ஆகும் என்று உடனே சொல்லி […]

{ 0 comments }

ஜூலை 87 இதழில் வெளியான “முஸ்லிம் எதிர்ப்பு மூளைச் சலவையே” என்னும் கட்டுரையில், குஸ்வந்தசிங்கின் எழுத்துக்கள் இஸ்லாத்திற்கு முரணானவை. அவை அந்நஜாத்தில் இடம் பெறலாமா? அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மாற்று மத மக்களுக்கு உபகாரங்கள் செய்வது, அவர்களுக்கு மத வழிபாட்டுச் சுதந்திரம் கொடுப்பது, அந்த வகைக்குப் பொருளுதவி செய்வது இவை அனைத்தும் தீமைக்குத் துணை போவதாக இருக்கிறதே? (விமர்சனத்தின் சுருக்கம்) – A. அஹமது ஜலாலுதீன், மதுரை.

{ 0 comments }

அறிவுப்போட்டி -2 முடிவு: 1987 மார்ச் இதழின் 52-ம் பக்கம் வெளியான குர்ஆனில் முரண்பாடா? பகுதி 2, மற்றும் 1987 ஏப்ரல் இதழின் 14ம் பக்கம் வெளியானன சகோதரர் சீனிவாசன் கடிதம், அதே இதழின் 15-ம் பக்கத்திலுள்ள, குர்ஆனில் முரண்பாடா? பகுதி 2. ஒரு திருத்தம். இவை அனைத்தையும் பார்வையிட்டுப் பல சகோதரர்கள் தங்கள் தங்கள் விளக்கங்களை அந்நஜாத்திற்கு அனுப்பி இருந்தார்கள் . அவை அனைத்தையும் ஆசிரியர் குழு பரிசீலனை செய்தது. பரிசு பெறும் அளவிற்கு முழுமையான […]

{ 0 comments }

  அபூஅஸ்மா மாதங்களின் பெயரால் இடைச்செருகல்கள் : சென்ற ஆகஸ்ட் இதழில் மத்ஹபுகளின் பெயரால் இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இதோ புனிதமிகு முஹர்ரம் மாதம் வந்திருக்கிறது. இம்மாதத்தின் புனிதத்தைக் கூட பார்க்காமல், சில புண்ணியவான்கள் (?) புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருப்பதைப் பார்ப்போம்.

{ 0 comments }

  ஐயம் : குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? M. முஹம்மத் அல்தாஃப் – திருச்சி. தெளிவு : அல்லாஹ் திருக்குர்ஆனில் கீழ்க்காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகின்றான். “நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில்(அது) இருக்கிறது.”

{ 0 comments }

அபூமர்யம் சென்ற ஆகஸ்ட் இதழில் புர்தாவிலுள்ள “மேலும் லவ்ஹுல் மஹ்ஃபூமிலுள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு பகுதியே” என்னும் கவிதையின் அடியை திருக்குர்ஆனின் அடிப்படையில் அலசிப் பார்த்து, அது முற்றாக அல்குர்ஆனுக்கு முரண்பட்டிருப்பதையறிந்தோம், இதோ இப்பொழுது அதை ஹதீஸுகளின் அடிப்படையில் அலசிப் பார்ப்போம்.

{ 0 comments }

அபூ அப்துர் ரஹ்மான் ”என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் அன்றி உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். ” (3: 31) என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி) நூல்கள் : புகாரீ, அஹ்மத்

{ 0 comments }

  இப்னு ஹத்தாது சென்ற ஆகஸ்ட் இதழில் அல்குர்ஆன் 3:7 வசனத்தின் தமிழ்மொழி பெயர்ப்பையும், இந்த வசனம் பற்றி ஹதீது நூல்களில் பதிவாகியுள்ள ஒரு ஹதீதின் தழிழ் மொழிப் பெயர்ப்பையும் பார்த்தோம்.

{ 0 comments }

  K.M.H. அபூ அப்துல்லாஹ் நாஸ்திக நண்பர்கள் “இறைவனைக் காட்டுங்கள்; கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம்” என்று பிடிவாதம் செய்கின்றனர். இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர், அதிசமான ஒரு காட்சியையோ, ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன், அதனையே தெய்வமாகவோ, தெய்வாம்சம் பெற்றதாகவோ, ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் உண்மையான இறைவன், இந்த மனிதனது பார்வையிலோ, புலன்களின் உய்த்துணர்விலோ வர முடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயமாக இறைவனாக இருக்க […]

{ 0 comments }

  A. முஹம்மது அலி, M.A., திருச்சி-4. தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு, பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.

{ 0 comments }

  புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம் மனிதகள் – ஒன்று முதல் ஐயறிவுகளைப் பெற்றுள்ள உயிர்களிடத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டவனாக விளங்குகிறான். எதனையும் பகுத்துணரும் பக்குவத்தைப் பெற்றவனாகவும் திகழ்கின்றான். எது நன்மையான செயல்? எது தீமையான செயல்? என்பதில் அவனுக்குப் படிப்படியாகத் தெளிவும் ஏற்பட்டு விடுகின்றது.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ் செப்டம்பர் 1987 முஹர்ரம் 1408 மார்க்கத்தில் பிரிவுகள் இல்லை! (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஓரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகாவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக […]

{ 0 comments }