1987 மார்ச்

  ஐயம் : “நல்லடியார்களான ஆண்களுக்கு மறுமையில் ‘ஹுருல் ஈன்கள்’ கொடுக்கப்படுவார்கள்” என்பது உண்மையா?உண்மையென்றால் நல்லடியார்களான பெண்களுக்கும் ‘ஆண் ஹுருல் ஈன்கள்’ உண்டா? கணவனும், மனைவியும் சுவர்க்க வாசியாக இருக்கும் போது, கணவன் மட்டும் ஹுருல் ஈன்களிடம் உல்லாசமாக இருந்தால் மனைவி என்ன நினைக்க கூடும்? இம்மையில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களை மறுமையிலும் அல்லாஹ் சேர்த்து வைப்பானா?

{ 0 comments }

“தற்கொலை செய்தவனுக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழாதது ஒரு கண்டிப்புக்குத் தான்” என்ற சிலர் பத்வா தருகிறார்களே! இது போன்று ஒருவன் மனைவியை மூன்று முறை தலாக் சொல்லி விட்டால் இன்னொருவனுக்கு அவனை மணமுடித்து அவன் தலாக் விட்ட பிறகு தான் முதல் கணவன் அவளை மணம் செய்ய வேண்டும்” என்ற சட்டமும் ஒரு கண்டிப்புக்காகச் சொல்லப்பட்டதாக இருக்குமென்று கூறுவார்களோ?

{ 0 comments }

1. (நபியே!) நீர் கூறும்! (இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து விட்டு (மற்றவைகளை) அவனுக்கு இணையாக்குகிறீர்களா? (அல்குர்ஆன் 44:9)

{ 0 comments }

மவ்லவி S. கமாலுத்தீன் மதனீ நமக்குப் பின்னால் நபிவழி நபி(ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்களைப் பின்பற்றுவது எவ்வாறு நபித் தோழர்கள் மீது கடமையாக இருந்ததோ, அவ்வாறே அவர்களின் மரணத்திற்குப் பின்னரும் அவர்களைப் பின்பற்றுவது நபித் தோழர்கள் மீதும், மற்ற ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும், என்பதை பல இறை வசனங்கள் வலியுறுத்துகின்றன. நபி(ஸல்) அவர்களின் தூது அவர்களுடைய மரணத்தோடு முடிந்து விட்டதல்ல. காரணம், அவர்கள் இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவர்கள். அவர்களுக்குப் பின் […]

{ 0 comments }

(காலம் சென்ற மவ்லவி P.S. அலாவதீன் அவர்களால் எழுதப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சங்கரன்பந்தல் நகர ஜமாஅத்துல் உலமாவின் சார்பாக இது பிரசுரம் செய்யப்பட்டது. இந்த மாதத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை என்பதால் இப்போது வெளியிடப்படுகின்றது) உங்களுக்கு வற்றாத செல்வமும் வளமான வாழ்வும் வேண்டுமா? அரைக்கிலோ மைதாவும் அளவான சர்க்கரையும் 50 கிராம் பொட்டுக் கடலையும் முற்றிய தேங்காய்த் துருவலும் கொஞ்சம் கசகசாவும் எள்ளும் தேவை.

{ 0 comments }

K.M.H. அபூ அப்துல்லாஹ் நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 11/4லட்சம் நபிமார்கள் செய்து வந்த தூய பணியான, அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ்வவொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளனத. சுமார் 11/4 லட்சம் நபிமார்கள் செய்த பணியினைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.

{ 0 comments }

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவற்றை நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள் : புகாரி, அஹ்மத் சிறுநீர் கழித்த பின்னர் மலம் கழித்த பின் சுத்தம் செய்வதற்கு தண்ணீரோ, கற்களோ போதுமானது என்பதை முன்பு கண்டோம். தண்ணீரால் சுத்தம் செய்வதே மிகவும் சிறந்தது என்பதையும் பார்த்தோம். மலம் கழித்து சுத்தம் செய்வதற்கே தண்ணீரோ, கற்களோ போதும் என்றால், சிறு நீர் கழித்தபின் சுத்தம் செய்யத் தண்ணீரோ, கற்களோ, போதுமானது என்று யாரும் உணரலாம். தண்ணீரால் சுத்தம் செய்ய […]

{ 0 comments }

இப்னு மர்யம் “சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.

{ 0 comments }

 மவ்லவி P.S. அலாவுத்தீன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகை கேள்வி: இணை கற்பிக்கும் பாவத்தில் சிறிய வகை என்பது யாது? பதில்: ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வதையே இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது.

{ 0 comments }

அபூ முஹம்மத்  தொப்பியும் தலைப்பாகையும் ஆண்கள் தங்கள் தலையில் தொப்பி, தலைப்பாகை அணிந்து கொள்வது பற்றி தமிழக முஸ்லிம்களிடம் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. சிலர் “எல்லா நேரங்களிலும் தொப்பியுடன் தான் காட்சி தர வேண்டும்; அது சுன்னத்” என்கிறார்கள்.

{ 0 comments }

(தராவீஹ் பற்றி தனி நூல் ஒன்று தயாராகிக் கொண்டுள்ளது. அதற்கிடையில், நாம் ஏற்கனெவே வாக்களித்திருந்தபடி குர்ஆனின் குரலில் வெளிவந்த தராவீஹ் கட்டுரையை இங்கே விமர்சனம் செய்கிறோம்) முதலில், “பித்அத் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையைத் துவக்கினார்கள். தராவீஹ் பற்றிய எல்லா ஐயங்களும் அந்தக் கட்டுரைத் தொடரில் தெளிவு படுத்தப்படும் என்று அவர்களால் சொல்லப்பட்டது. அந்தக் கட்டுரையில் தராவீஹ் பற்றி தெளிவான ஆதாரங்கள் எதுவுமில்லை. ஒரு சில குறிப்புகள் தான் தராவீஹ் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் காண்போம்.

{ 0 comments }

மவ்லவி அபூ சுமைய்யா மிஸ்பாஹி “அந் நஜாத்” வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த “இஸ்லாமிய மாநாடு” எதிர் பார்த்ததை விட சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்!

{ 0 comments }

மார்ச் 1987 – ரஜப் 1407 அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வரும் போதும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியனியாகச் சேருவதை நீர் காணும் போதும் உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக!

{ 0 comments }