1992 மார்ச்

அபூ ஃபாத்திமா இஸ்லாம் விதித்துள்ள கடமைகளுள் தொழுகையும் ஜகாத்தும் மிக பிரதான இடத்தை வகிக்கின்றன. அல்லாஹ் தனது திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் இடங்களிலெல்லாம் ஜகாத்தைப் பற்றியும் வலியுறுத்துகிறான். தொழுகையைப் பேணித் தொழாதவனுக்குக் கேடுத் தான். அவன் நரகம் புகுவான் என்பதை 19:59, 74:42,43, 107:4,5 வசனங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து தனது செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிக் கணக்கிட்டுக் கொடுக்காதவன் இணை வைப்பவனாகி நிரந்தர நரகத்தை அடைகிறான் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 9:34,35 வசனங்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. […]

{ 0 comments }

                    K.M.H. அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான். அந்த வசனம் வருமாறு: (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காகவும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிக்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.)  (9:60)

{ 0 comments }