2007 டிசம்பர்

  இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு இவற்றை சரிகண்டு மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஏற்று நடப்பவர்கள். அவர்கள் அல்குர்ஆன் அல்அஃராஃப் 7:55 இறைக் கட்டளைக்கு நேர்முரணாக தொழுகைகளுக்குப் பின்னரும், மற்றும் தங்களின் கூட்டு செயல்பாடுகளிலும், சப்தமிட்டு (துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும், கூட்டு(துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும் அவற்றை முடிக்கும் போது நபி(ஸல்) அவர்களின் பொருட்டால், ஷுஹதாக்களின் பொருட்டால், அவலியாக்களின் பொருட்டால் எங்களின் இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக யா அல்லாஹ் என்று தங்களின் பிரார்த்தனைகளை முடிக்கிறார்கள்.

{ 0 comments }

இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும். இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத் தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் […]

{ 0 comments }

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு(தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

{ 0 comments }

மு. முத்துவாப்பா, நெல்லை ஏர்வாடி. தொடர்: 5 அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! மனிதர்களாகிய நம்மிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிவதற்காகவே இறுதி நெறி நூலான திருகுர்ஆனும், முந்தய நெறி நூல்களும் அல்லாஹு ரப்புல் ஆலமீனால் இறக்கி அருளப்பட்டன. இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? (4:82) என்று சத்திய நேர்வழிகாட்டல் நூலில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் கேட்கும் கேள்விக்கு நம்முடைய பதில்தான் என்ன? அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! சிந்திக்க வேண்டாமா?

{ 0 comments }

இப்னு ஹத்தாது தொடர்:8 ஜூலை 2007 இதழ் தொடர் ஏழில் அல்லாஹ், எழுதப்படிக்கத் தெரியாத, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களை நபிமார்களாக ஏன் தேர்ந்தெடுத்தான், அதன் உண்மை இரசகியம் என்ன என்ற பில்லியன் டாலர் கேள்விக்குரிய பதிலைப் பார்த்தோம். இதிலிருந்து அரபிமொழி கற்ற மவ்லவிகள்தான் மார்க்க அறிஞர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் வழிகாட்டல்களின்படி நடப்பது கண்மூடி(தக்லீது) பகிரங்க வழிகேடு என்பதை தெளிவாக விளங்கினோம்.

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் தொடர்: 10 சென்ற தொடரில் எழுதியது போல் தர்கா, தரீக்கா புரோகித மவ்லவிகளிடம் வசமாகச் சிக்கியுள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து, அவனையே வணங்கி, வாழ்த்தி அவனிடமே உதவி தேடுவதற்குப் பதிலாக, அவனிடம் நேரடியாகக் கேட்டால் தரமாட்டான். நபிமார்கள், நாதாக்கள், அவுலியாக்கள் மூலமாகத்தான் அல்லாஹ்வை நெருங்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதனால் மக்காவுக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் அவர்கள் அங்கு கஃபத்துல்லாஹ்வை (தவாஃப்) வலம் வரும்போதும், ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஸயீ-தொங்கோட்டம் ஓடும் […]

{ 0 comments }

  K.M.H. சந்திர மாதத்தை முடிவு செய்ய பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது அவசியம்-கட்டாயம் என்று சுன்னத் ஜமாஅத்தினரும், த.த.ஜமாஅத்தினரும் அடம் பிடித்து வருகின்றனர். எனவே பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது ஷரீஅத்தில் (மார்க்க விதிமுறைகளில்) எந்த நிலையிலுள்ளது என்பதை ஆராயும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

{ 0 comments }

அபூ ஃபாத்திமா இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா? தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக […]

{ 0 comments }

மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான். உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் […]

{ 0 comments }

  இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

{ 0 comments }