2010 நவம்பர்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் பாபரி மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் 6.12.1992ல் காவி வெறியர்களால் இடிபடுவதற்கு 34 மாதங்களுக்கு அதாவது சுமார் 3 வருடங்களுக்கு முன்னரே மார்ச் 1990 அந்நஜாத் இதழ் பக்கம் 27 முதல் 36 வரை இடம் பெற்ற கட்டுரையை இங்கு மறுபதிப்பாக இடம் பெறச் செய்துள்ளோம். -ஆசிரியர்

ஐயம் : என் மீது கடமையாகும் ஜக்காத்தில் என்னிடம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு நன்கொடை கேட்டு வருபவரிடம் இது ஜக்காத் நிதி என குறிப்பிட்டால் அது வேண்டாம்; உங்கள் சொந்த பணத்தில்தான் தரவேண்டும். இது ஜக்காத் ஏழைகளுக்கும் மற்ற தேவையுள்ளவர்களுக்குத்தான் போய் சேரவேண்டும். பள்ளி கட்டுமான பணிக்கு கொடுக்க (அ) வாங்க குர்ஆன், ஹதீஸ்படி கூடாது என்கிறார். சரியான விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படிதான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா?  அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி! சமீபத்தில் நமது இந்திய நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் காக நமது நாடு 70 ஆயிரம் கோடி செலவிட்டதாக வும், அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் பரப்பி வருகின்றன. நடைபெற்ற ஊழல்களை விசாரித்துக் கண்டறிய சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல நாடுகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நடந்தேறியுள்ள இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் அனைத்து நாடுகளின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி நமது நாட்டுக்குப் […]