2011 ஜுலை

அபூ ஃபத்திமா 15.06.2011 (14.7.1432) புதன்கிழமை இரவு முழுச் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதை பல வருடங்களுக்கு முன்னரே கணக்கிட்டு அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்ட சந்திர நாள் காட்டியிலும் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்டபடி 15.6.2011 இரவு கணக்கிட்டபடி முழுச் சந்திர கிரகணம் இடம் பெற்றதை உலகின் பல பகுதியினர், குறிப்பாகத் தமிழ் நாட்டில் தங்கள் கண்களால் கண்டு உறுதிப்படுத்தினர். அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

அ.ப.அ. நன்றி கீற்று இணைய இதழ் பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அதிகமுக அரசு முதல் நடவடிக்கையாகச் சமச்சீர் கல்வி பொதுப் பாடத் திட்டத்தை இந்தாண்டு நிறுத்துவதாக அறிவித்துள்ள நடவடிக்கை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோர் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நானா? நீயா? அரங்கம்! நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? அ.ப.அகமது, புதுக்கோட்டை  “”ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று சொல்வார்கள். குழந்தைகளை உருவாக்கும் பல்கலைக்ககழகம் தாய் என்றும் சொல்வார்கள். மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியமான அந்தஸ்தை வழங்குகிறது என்றும் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எப்படி தமது மனைவி, மக்களிடம் அல்லது தாயிடம் நடந்து கொள்கிறார்கள்?

“”வரலாறு திரும்பும்; இஸ்லாம் மீண்டும் எழுச்சி பெறும்!” ராணி விக்டோரியாவுக்கு லார்ட் மெல்போர்ன் அளித்த பதில்:  மெல்போர்ன் என்று சொன்னாலே நமக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற ஒரு நகரமும்  அதில் நடந்த கிரிக்கெட் போட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால் லார்ட் மெல்போர்ன் என்கிற பிரிட்டிஷ் அரசியல்வாதியின் நினைவாகத்தான் அந்த நகரத்துக்கு மெல்போர்ன் எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  இங்கிலாந்தின் பிரதமராகக் கோலோச்சியவர் தான் லார்ட் மெல்போர்ன் (1779-1848). அவரை பிரிட்டிஷ் பிரதமர்களில் பத்தோடு […]