2011 மே

விமர்சனம்: 13.3.2011 அன்று மேலப்பாளையத்தில் தமிழக முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவினரும், மதகுருமார்களும், தலைவர்களும் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல எனத் தீர்மானம் ஏகோபித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். நீங்கள் அவர்களை முஸ்லிம்கள் இல்லை காஃபிர்கள் எனக் கூறக் கூடாது என்கிறீர்கள். ஒட்டுமொத்த ஆலிம் அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயமும் கூறுவதை ஏற்பதா? நீங்கள் மாத்திரம் தனிப்பட்டுக் கூறுவதை ஏற்பதா? அவர்கள் அனைவரையும் விட நீங்கள் அறிவாளியா? அப்துல்லாஹ், திருச்சி.

{ 0 comments }

ஐயம் : அன்புள்ள சகோதரர் அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய அக்டோபர் 2010, பிப்ரவரி 2011, மார்ச் 2011 ஆகிய மூன்று இதழ்கள் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி, நன்றி. உலக மக்கள் எல்லாரும் நேர்வழியினைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே நம் எல்லோரது பேரவா. ஆனால் பொய் சொல்வது, பெரும் பாவம் என்பதும் ´ஷிர்க்கு என்பதும் நன்கு தெரிந்ததே. தாங்கள் பொய்யரே என்று நானும், நான் பொய்யனே என்று தாங்களும் நினைத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

{ 0 comments }

 Y.முஹம்மது ஹனிஃபா, திருச்சி நபியே! பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “”அவை மனிதர்களுக்கு, காலங்களையும் ஹஜ்ஜையும் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189) உலகெங்கும் 19.03.2011 அன்று மெகா பெளர்ணமி என்று பிரகடனம் செய்து அதை அங்கீகரித்துக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கும்போது உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த பெளர்ணமியால் ஏதாகிலும் மாற்றம் ஏற்படுகிறதா, பூமியின் சுழற்சியில் வானிலையில், கடலலையில், தட்பவெப்பத்தில் மற்றும் இது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது […]

{ 0 comments }

தோழர் பஷீர், பொறியாளர், அண்மையில் லிபியாவிலிருந்து திரும்பியவர் நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்! இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும்.

{ 0 comments }

அமெரிக்காவிலிருந்து ஒரு நவீன விசைப் பொறி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட் டால், அந்தப் பொறியை தயாரித்த அமெரிக்க நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அப்பொறியை இயக்குகிறோம். ரஷ்யாவிலிருந்து பொறி இறக்குமதி செய்யப்பட்டால் ரஷ்ய நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அதை இயக்குகிறோம். ஆக ஒரு விசைப்பொறி எந்த நாட்டினரால் தயாரிக்கப்படுகிறதோ அந்த நாட்டினரின் வழிகாட்டல்தான் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கப் பொறிக்கு ரஷ்யாவின் வழிகாட்டலோ, ரஷ்யப் பொறிக்கு அமெரிக்க வழிகாட்டலோ பின்பற்றப்படுவதில்லை.

{ 0 comments }