2012 ஜூலை

ராசிக் அலீ, திருச்சி குறுகிய வட்டம்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்து வோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயங்களில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கின்றான். அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (60:8,9)

அபூ அப்தில்லாஹ் கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!! என்று ஒளவைப் பாட்டிக் கூறியுள்ளார். ஆக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு மிகமிக அற்பமான அறிவு, (குர்ஆன் 17:85) இந்த அற்பமான அறிவைக் கொண்டு உலகளவில் அல்ல, அண்ட சராசரங்களை விட மிகமிக அதிகமான முழுமையான அறிவுள்ள ஏகன் இறைவனுடன் போட்டி போட முடியுமா? அற்பமான அறிவுடைய மனிதனின் ஆய்வில் உருவானதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் என்றால் மக்களில் அதிகமானோரின் விருப்பப்படி நடைபெறும் ஆட்சி என்று பொருள்.

திருகுர்ஆனைப்பற்றி விஞ்ஞானிகள்! PDF

அல்குர்ஆன் ஆல இம்ரான்: 3:102 இறைக் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1433 வருடத்திய ரமழான் மாதம் 20.07.2012 வெள்ளியன்று ஆரம்பித்து 17.08.2012 அதே வெள்ளியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 18.08.2012 சனி 1433 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.