2013 செப்டம்பர்

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் (ஆய்வு, அப்பாஸ் அலி MISC, தொகுப்பு : M.G.ஃபாரூக்) என்ற 7 பக்க ஆக்கத்தில் அந்நஜாத் ஜூன் 2012 இதழில் வெளியான கலாநிதி யு.எல்.ஏ. அஷ்ரப் Ph.D., Al-Azhar  எழுதி இருந்த “”விரலைச் சுட்டிக் காட்டுவதே நபி வழி! ஆட்டுவது நபிவழி அல்ல” என்ற ஆக்கத்திற்கு மறுப்புத் தெரிவித்து எழுதி இருந்தார்கள்.  அதற்குரிய  பதிலே  இது! தொழுகை அமர்வில் விரலசைத்தல் பற்றிய விமர்சனம் [PDF]  

ஐயம் : தராவீஹ், தஹஜ்ஜத், கியாமுல்லைல், கியாமு ரமழான், வித்ர் இத்தொழுகைகளின் விபரம் தரவும். தராவீஹ் என்ற பெயரால் முன்னிரவில் தொழுவதற்கும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கும் ஆதாரத்துடன் தெளிவாக குர்ஆன், ஹதீஃத் வழியில் விளக்கம் தரவும். அபூபக்கர், சிங்கார், சென்னை-79. தெளிவு : ஹதீஃத் நூல்களில் தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு ரமழான், வித்ர் போன்ற பதங்கள் மட்டுமே காணப்படுகின்றன. “”தராவீஹ்” என்ற பதத்தை குர்ஆனிலோ, ஹதீஃதிலோ அறவே பார்க்க முடியவில்லை. மேலும் தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு […]

ஆகஸ்டு 2013 தொடர்ச்சி….. MTM. முஜீபுதீன், இலங்கை பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:- இணைவைப்போரை அன்றைய (உஹதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி(ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹத் மலைக் கண வாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்களைத் தலைவராக நியமித்து, ‘(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர […]

அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி! இது நமது முன்னோர்கள் கூறிய அமுத மொழி. ஆம்! ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான ஆட்சி நடத்தினால் நிச்சயமாக மக்களும் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான வாழ்க்கை வாழும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் உண்டா? அதற்கு மாறாக இன்றைய ஆட்சியாளர்கள் யார்? அவர்களின் உண்மையான நிலை என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.