2013 ஜனவரி

எஸ்.ஹலரத் அலி, ஜித்தா டிசம்பர் 2012 தொடர்ச்சி…. நபி(ஸல்) அவர்களின் துஆவிலும் செவிச் சிறப்பைக் காணலாம். அல்லாஹ்வே என்னைக் கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக! எனது கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப் படுத்துவாயாக. யஹ்யாபின் ஸாத்(ரழி)முஅத்தா. செவிப்புலன் ஏன் சிறப்புப் பெறுகிறது என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாகக் கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் […]

MTM முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2012 தொடர்ச்சி … உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார்; அவருக்கு செவி கொடுப்பீர்களாக! (உபாகமம்: 18:15) உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப் பதையயல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (உபாகமம் : 18:18)

இவ்வுலக வாழ்க்கை அற்பமான தற்காலிகப் பரீட்சை வாழ்க்கை; மறு உலக வாழ்க்கையே அசலான நித்திய வாழ்க்கை. பரீட்சையில் வெற்றி பெறுகிறவர்கள் நிரந்தரமாக இன்பம் அனுபவிக்கும் சுவர்க்கத்தை பெறுவார்கள். தோல்வியுறுகிறவர்கள் நிரந்தரமாகக் கடும் வேதனைகள் அனுபவிக்கும் நரகத்தை அடைவார்கள் என்பது தன்னந்தனியனான ஏகன் இறைவன் அளித்துள்ள இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மை நாம் வாழும் இந்தப் பூமிப் பந்தை இதர கோளங்களோடு ஒப்பிடும் போது நாம் வாழும் பூமி ஒரு […]