2014 ஆகஸ்ட்

விமர்சனம் : மத்ஹப் (மற்றும்) பிற இயக்கங்களுக்கு பெயர் வைப்பது நபிவழி இல்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று பெயர் வைப்பது நபிவழியா? குர்ஆனில் ஆதாரம் உள்ளதா? விளக்கம் : ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று நாம் சுயமாகப் பெயர் வைத்திருப்பதாகக் கூறி இருக்கிறீர்கள். மற்ற பிரிவு இயக்கங்களை அவர்கள் சுயமாகப் பெயரைத் தெரிவு செய்து பெயரிட்டு, அதை அரசில் பதிவு செய்து சொந்தம் கொண்டாடுவது போல், நாமும் ஜமாஅத்துல் முஸ்லிமீனை சுயமாகப் பெயரிட்டு, […]

{ 0 comments }

ஐயம் : குர்பானி இறைச்சியை மாற்று மத நண்பர்களுக்குக் கொடுக்கலாமா? எனது கேள்விக்கு மார்க்க ரீதியான பதில் தர வேண்டுகிறேன். N.K.N.மீரான், ஏர்வாடி, நெல்லை தெளிவு : மவ்லவிகள், ஜகாத், ஃபித்ரா, குர்பானி போன்ற தர்மங்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று சட்டம் சொல்வதால் உங்களுக்கு இந்த ஐயம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், பெண்ணும் ஒரு விஷயத்தைத் திட்டமாகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்றை ஹலால் என்றோ, ஹராம் என்றோ சொல்வதாக […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சர்வ வல்லமை மிக்க எல்லாம் வல்ல இறைவன், என்று மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பினானோ அன்றிலிருந்தே மனிதனுக்குரிய வாழ்க்கை நெறியை தெளிவாக நேரடியாக இடைத்தரகர்களின் மேல் விளக்கம் தேவைப்படாத நிலையில், அதை நடைமுறைப்படுத்திக் காட்டத் (Practically)  தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹி மூலம் அறிவித்துக் கொண்டிருந் தான். அந்த அறிவிப்புகளின்படி தான் மனிதன் நடக்க வேண்டும். அப்படி நடப்பவர்கள் மட் டுமே சுவர்க்கம் நுழைய முடியும். அப்படி வஹி மூலம் தெளிவாக அறிவிக்கப்பட்ட ஒரே நேர் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்(ஜல்) எமக்கும் உங்களுக்கும் ரமழான் மாதத்தின் முழுப் பலன்களையும் முழுமையாக அடைய அருள் புரிவானாக! அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “”அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக் கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்(மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்கக்கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் : 42:21)

{ 0 comments }

இப்னு ஹத்தாது. கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகைகளையும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, மறுமையில் அதற்குரிய கூலியை எதிர்பார்த்துத் தொழ வேண்டிய, இமாமத் செய்ய வேண்டிய மவ்லவிகள், அந்தத் தொழுகைகளை அற்பமான காசுக்கு இங்கேயே விற்று விடுவதால் நாளை மறுமையில் தொழுகையற்றவர்களாகவே தண்டனைக்குரியவர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை குர்ஆன் 2:41, 79, 174-176, 3:187 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தூய எண்ணத்துடன் (இஃலாஸ்) அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அல்லாஹ்விடம் கூலியை-சம்பளத்தை எதிர் பார்த்துத் தொழ வைத்தால் அல்லவா நபி வழியைப் பின்பற்றித் […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது நம் நாட்டுக்கு வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தவுடன் நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள், அப்போது நடைமுறையிலிருந்த பலதரப்பட்ட கேலண்டர்களில் மிகச் சரியான ஒரு கேலண்டரைக் கண்டறியுமாறு சில அறிவியல் விற்பன்னர்களைக் கொண்டு ஒரு “கேலண்டர்” கமிட்டியை 1952ல் அமைத்தார். இந்த கமிட்டி நடைமுறையிலிருக்கும் அனைத்து வித கேலண்டர்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அவற்றில் அல்லாஹ்(ஜல்) 9:36 இறை வாக்கில் கூறி இருப்பது போல் வானங்கள், பூமியைப் படைத்த நாளிலிருந்தே சந்திரக் […]

{ 0 comments }

அபூ ஃபாத்திமா அல்குர்ஆன் அல்அஹ்ஸாப் : 33:56-ல் அல்லாஹ் கூறுகிறான். இத்தூதரின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்களும் அவருக்காக அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவருக்காகப் பிரார்த்தித்து அமைதியையும் வேண்டுங்கள்! (33:56) இந்த இறைவாக்கு இறங்கியவுடன் நபி தோழர்கள் ஸலவாத் எப்படிச் செய்வது என்று கேட்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் துஆ இதுதான்.

{ 0 comments }

“இறைவழியில் அவனுக்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய முறைப்படி முயற்சி செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்களின் தந்தையாகிய இப்ராஹீமின் மார்க்கமாகும். (அல்லாஹ்வாகிய) அவனே இதிலும் இதற்கு முன்னரும் உங்களுக்கு முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளான்……” (22:78) உங்களுக்கு(ஒவ்வொன்றையும்) எளிதாக்கவே அல்லாஹ் விரும்புகிறான். மேலும் பலவீனமான நிலையில் மனிதன் படைக்கப் பட்டுள்ளான். (4:28) (மேலும் பார்க்க : 54:17,22,32,40)

{ 0 comments }