2015 ஆகஸ்ட்

நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா மஃறிபா?

{ 0 comments }

விமர்சனம் : தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை 9.6.2015 அன்று கூடிய உயர்மட்டக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் 16.6.2015 அன்று மீண்டும் கூடி 8 பேர் கொண்ட குழு அமைத்து பீ.ஜையின் கருத்துக்கள் அனைத்தையும் தீர ஆராய்ந்துக் கொடுத்த அறிக்கையை மீள் ஆய்வு செய்து ஜமாஅத்துல் உலமா சபை கீழ்க்காணும் தீர்மானத்தை நிறை வேற்றியது.

{ 0 comments }

MTM முஜீபுதீன், இலங்கை ஜூன் 2015 தொடர்ச்சி…… இப்ராஹீம் (அலை) நிச்சயமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தான். (அல்குர்ஆன் : 37:83)  அன்றியும், திடமாக நாமே “நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவத்தை (நபித்துவத்தை)யும் இறைநெறி நூல் களையும் ஏற்படுத்தினோம். (அவர்களில்) நேர் வழி பெற்றவர்களும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன் : 57:26)

{ 0 comments }

மார்க்கத்தைத் தொழிலாக, பிழைப்பாகக் கொண்டு சம்பளத்திற்கு தொழ வைப்பவர்களை, மார்க்கப் பிரசாரம் செய்பவர்களை நாம் புரோகிதர்கள் என்று கூறி வருகிறோம். இதை மவ்லவிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நம்மீது ஆத்திரப்படுகிறார்கள். இப்போது அகராதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி : இரண்டாம் பதிப்பு மே 2008 புரோகிதம் : சடங்குகளை மத வழக்கப்படி நடத்தும் தொழில். புரோகிதர் : புரோகிதம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர். கழகத் தமிழ் அகராதி : நான்காம் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சவுதி மன்னர் அவர்களே, இளவரசர்களே, மந்திரிப் பிரதானிகளே, அறிவியல் வல்லுநர்களே, அறிஞர்களே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவரிடமும் எமது ஒரு கனிவான அதிமுக்கிய வேண்டுகோள்! எமக்கும், உங்களுக்கும், அல்லாஹ் நாடும் அவனது நல்லடியார்களுக்கும் அவனது நேர்வழியை (6:153) காட்டியருள துஆ செய்தவனாக இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

{ 0 comments }

முஹிப்புல் இஸ்லாம் இறை ஒருமையின் தனித்துவம் : படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன்; வேறுபட்டவன். “அல்லாஹ் ஒருவன்’ என துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை, ஒரே இறைவ னான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய் இணை யாய் எவரும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது காண்க. அல்குர்ஆன் : 112:1-4 அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்திற்குக் கற்றுத் தருகிறது. ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக் கடமை. […]

{ 0 comments }

அகிலங்கள் அனைத்திற்கும், அகில உலக மக்களுக்கும் ஒரே இறைவன், மக்களின் நேர்வழிக்காக ஆதித் தந்தை ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) வரை தொட ராக அனுப்பிக் கொண்டிருந்த ஹிந்துக்களின் வேதங்கள், யூதர்களின் தோரா, கிறித்தவர்களின் பைபிள் போன்ற அனைத்து (இவை அனைத்தும் புரோகிதர்களின் கரம் பட்டு மாசு பட்டு விட்டன.) இறை நூல்களில் இறுதியாக அனுப்பித் தந்த மனிதக் கரம் பட்டு மாசுபடாமல் பாதுகாப்பாக இருக்கும் அல்குர்ஆனின் 6வது அத்தியாயம் வசனம் 116-ல் கூறுவதைப் […]

{ 0 comments }