2015 ஜனவரி

விமர்சனம் : முஸ்லிம்களிடையே நிறைந்து காணப்படும் ஷிர்க், குஃப்ர், பித்அத்களைக் கடுமையாகச் சாடுகிறார். வரதட்சணைக் கல்யாணம், பெண் வீட்டுச் சாப்பாடு, திருமணச் சடங்குகள் இவை அனைத்தும் மாற்று மதக் கலாச்சாரங்கள், மஹர் கொடுத்து மணம் முடிப்பதும், மாப்பிள்ளை வலீமா விருந்து கொடுப்பதும் தான் நபிவழி என்று பகிரங்கமாகக் கூறி வருகிறார். அவரது இந்தக் கொள்கைக்கே மாறாக அப்படி நடக்கும் அனாச்சாரத் திருமணங்களில் கலந்து கொள்கிறார். பெண் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுகிறார். இது என்ன கொள்கை? விளக்கம் : […]

M.T.M முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2014 தொடர்ச்சி…… இதேபோல் ஏனைய திருநாமங்களும் அல்லாஹ் ஒருவன். அவனுக்கு நிகராக எவையும் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக அவதானியுங்கள். 2. அல்லாஹ் அவ்வல் – (முதலானவன் -ஆதி) 3. அல்லாஹ் ஆகிர் – (முடிவானவன்-அந்தம்) 4. அல்லாஹ் பாரீ – (உருவாக்குபவன்) 5. அல்லாஹ் பாத்தின் – (முடிவானவன்-அந்தம்) 6. அல்லாஹ் பதீவு – (முன்மாதிரி இன்றி படைத்தவன்) 7. அல்லாஹ்வு பர்ரு – […]

– அபூ அப்தில்லாஹ் ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். சோதனையில் வெற்றி பெறச் செய்தான். ஆதம் (அலை) அவர்கள் செய்த தவறுக்குப் பின் இவ்வுலகிற்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து நேர்வழி காட்டல் வரும். அதன்படி நீரும் உமது வாரிசுகளும் நடந்தால் வெற்றி பெறுவீர்கள். எனது நேர்வழி காட்டலைப் புறக்கணித்து, உங்கள் பகிரங்க விரோதியான ஷைத்தானின் வழிகாட்டல்படி, உங்கள் மனோ இச்சைப்படி நடந்தால் நீங்கள் சென்றடைவது மீளா நரகம் என்று […]

முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் :9942696165 உலக அளவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள், கேவலப்படுத்தப்படுகிறார்கள். பற்பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் இதுபோன்று முஸ்லிம்களின் அவல நிலைகள் பலவற்றைக் குறித்துப் பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் கட்டுரைகள் வெளி வருவதையும், பேச்சாளர்களில் சிலர் இது குறித்து ஆவேசமாக உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம்மீது கடமையாக ஆகிவிட்டது. (குர்ஆன் 22:38, 30:47, 10:103) என்று அல்லாஹ் குர்ஆனில் உத்திரவாதம் […]

எஸ்.ஹலரத் அலி.-திருச்சி-7 உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் […]

பால்வழி  (Milky Way) மண்டலத்திலுள்ள அனைத்துக் கோள்களையும் படைத்து, அவற்றில் மிகவும் சிறிய பூமியையும் படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் ஒரே இறைவன் படைத்துள்ளான். அவற்றில் ஓரறிவு, ஈரறிவு என ஐயறிவு வரை எண் ணற்ற ஜீவராசிகளைப் படைத்துள்ளான். அவற்றில் ஆறறிவுப் படைப்பாக ஜின்னை, மனிதனை மட்டுமே படைத்துள்ளான் இறைவன். பூமியில் படைக்கப் பட்ட அனைத்து ஜீவராசிகளும் இவ்வுலகோடு அழிக்கப்பட்டுப் போகும் ஜின், மனிதர்களைத் தவிர. மனிதர்களும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஜின்களும் மட்டுமே இவ்வுலகில் சோதனை […]