2016 பிப்ரவரி

அபூ அப்தில்லாஹ் குர்ஆன் கூறுகிறது : மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் (அல் லாஹ்விடம்) மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (49:13) இன்னும், நீங்கள் எல்லோரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் […]

எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு, 9842696165 தமிழகத்தில் ஏராளமான இயக்கங்கள் தங்களுக்கென்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு நாங்கள் மட்டும்தான் தூய்மையான முறையில் இஸ்லாத்தை போதிக்கிறோம் என்று சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய இயக்கங்களில் ஒன்றுதான் TNTJ, இந்த TNTJ, இயக்கத்தினர்கள் வகுத்துக் கொண்ட கொள்கைக்கு எதிராக யாராவது மாற்றுக் கருத்து கூறினால் உடனே இவர்கள் எங்களது ஜமாஅத்தோடு இது தொடர்பாக விவாதிக்கத் தயாரா? திராணியிருந்தால் எங்களோடு விவாதிக்க வாருங்கள் என்று ஆணவமாகக் கூறி வருகிறார்கள். மார்க்கத்தை […]

அபூ அப்தில்லாஹ் குர்ஆன் கூறுகிறது : நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்; இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப் பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, அவர் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார். (4:48) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத(பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:116) அவர்கள் அல்லாஹ்வை […]

பிப்ரவரி 2016 ரபீவுல் ஆகிர்-ஜ.அவ்வல் 1437 FEBRUARY 2016 தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஜனநாயக முறைப்படி அமைந்த தேர்தல் சில மாநிலங்களில் சமீபத்தில் வருகிறது. இத்தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடப்பதாக இருந்தால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாகச் சிந்தித்து, ஆய்வு செய்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தங்களை ஆளும் தகுதி படைத்தவர்கள் யார் என்பதை முடிவு செய்து அவர்களுக்கு வாக்களிப்பதாகும். சுயமாகச் சிந்தித்து விளங்கும் ஆற்றல் மிக்கவர்கள் நம்நாட்டில் […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : அந்நஜாத் டிசம்பர் இதழ் பக்.3-ல் இயக்கங்களின் பெயரால், இணை(ஷிர்க்்) வைக்கின் றனர் என்கிறீர்கள். மெளலவிகளை, இயக்கத் தலை வர்களை தக்லீத் செய்கிறார்கள் என்று சொன்னால் சரி. மாறாக இணை(ஷிர்க்்) வைக்கின்றனர் என்று சொல்வது சரியா?  M.அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : மார்க்கத்தில் எமது சுய கருத்தைப் புகுத்துவதை விட்டும் அல்லாஹ் எம்மைக் காப்பா னாக. குர்ஆன் கூறும் கருத்தையே கூறுகிறோம். குர்ஆன் 9:31 வசனத்தைப் படித்துப் பாருங்கள். கிறித்தவர்கள் தங்களின் […]

ஐயம் : புத்தாண்டு வாழ்த்துக் கூறலாமா? அன் பளிப்புகள், இனிப்புகள், உணவுகள் பரிமாறலாமா?  M. அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : முஸ்லிம்கள் ஹிஜ்ரி புத்தாண்டையே கொண்டாட அனுமதி இல்லை! முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு கொண்டாட்டத் தினங்கள் மட் டும்தான். ஒன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம். இரண்டாவது ஹஜ்ஜு பெருநாள் கொண் டாட்டம். இந்த இரண்டு கொண்டாட்டங்கள் அன்றி இதர கொண்டாட்டங்கள் அனைத்தும் பித்அத்-வழிகேடு நரகில்-கொண்டு சேர்க்கும். மீலாது கொண்டாட்டம் பித்அத்-வழிகேடு நரகில்-சேர்க்கும். நபி(ஸல்) அவர்களின் மீலாதைக் […]

S.M.அமீர், நிந்தவூர், இலங்கை அன்றைய கால உயர் குலமாகக் கருதப்பட்ட “”கிப்தி” குலத்தில் பிறந்தவன் எவனோ! தப்ஸீர் இப்னு கஸீர் 6:738 * அக்கால மக்களில் சிறந்தவர்களாக இருந்த இஸ்ரவேலர்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதி கீழ்த்தரமான வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்தியவன் எவனோ! * நிச்சயமாக அந்நேரம் பூமியில்(தன்) ஆதிக்க வலிமை மிக்கவன் எவனோ! (10:83, 20:24,43) * தன்னுடைய ஆட்சி அஸ்தமிப்பதற்கான அறிகுறியாக ஜெருசலத்திலுள்ள பைதுல் மக்திஸில் இருந்து புறப்பட்டு வந்த நெருப்பு ஒன்று இஸ்ரவேலர்களின் இல்லங்களை விட்டுவிட்டுத் […]

N. மஹபூப் பாஷா, வில்லிவாக்கம். 1. மனிதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைக்க அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட நபிமார்கள், என்னை இந்த வகையில் சோதனையாக்கு. இந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தை கொடு எனக் கேட்டதில்லை. ஆனால் அல்லாஹ்வாகவே மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்திடவும், சோதனையை பொறுத்துக் கொள்பவராகவும் காட்டவே அனைத்து நபிமார்களுக்கும் பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தினான். 2. ஆதம்(அலை), ஹவ்வா(அலை) ஆகிய இருவரையும் பிரித்து பல ஆண்டுகள் கழித்துத்தான் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவர்கள் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டார்கள் என்பது தெள்ளத் […]

M.S. அபூ பக்கர், அதிரை உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லாவகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது; அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள்தாம் இருக்கின்றனர். இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக்காற்று அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை […]