2017 மே

அபூ அப்தில்லாஹ் ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதார பூர்வமான ஹதீஃத்கள் : 1. ஸைத் பின் ஸாபித்(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து, உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே […]

நஸீர் அஹ்மது, குன்னூர் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாவும். அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்… நாம் இன்று அல்லாஹ்வுக்கு எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். இப்படி உலகத்தில் 99.99% ஆத முடைய மக்கள் வழிகேட்டில் இருக்க கூடிய சமயத்தில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தீனையும், நபிவழியிலும், குர்ஆனின் ஒளியிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு சமுதாயம் இன்று நம் வாழ் நாளிலே உருவாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணத்தினால் நாமும், நம் குடும்பத்தாரும், நம் […]

அபூ ஃபாத்திமா அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது: உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள். புகாரீ : […]

 அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… ஒட்டுமொத்த மவ்லவிகள், உலமாக்கள், ஷேக்குகள், ஸலஃபிகள் குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை நஞ்சென வெறுக்கும் இரகசியம்! அபூ அப்தில்லாஹ் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, மனிதக் கருத்துக்களை முற்றிலுமாக நீக்கி குர்ஆன் ஆதாரபூர்வ மான ஹதீஃத்கள் மட்டுமே எடுத்து வைக்கும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த மவ்லவிகளும், அவர்களது பக்தகோடிகளும் ஏன் மக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதை மிகமிகக் கடுமையாகத் தடுக்கிறார்கள் என்ற இரகசியத்தை இங்கு அம்பலப்படுத்தியுள் […]

அபூ அப்திர்ரஹ்மான் நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் ஆலிம் கள், மவ்லவிகள் என வீண் பெருமை பேசும் மவ்லவி கள் (பார்க்க : 7:146) தலைப் பிறையை மேற்கில் சூரியன் மறைந்தபின் பார்த்துப் பிறைப் புறக்கண் ணுக்குத் தென்பட்டால் மட்டுமே மாதத்தைத் துவங்க வேண்டும். இன்றைய நவீன கண்டுபிடிப் பான கணக்கீட்டின்படி மாதத்தைத் துவங்குவது கூடாது, ஹராம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் எந்தளவு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்படுகிறது என்பதை வரிசை யாகப் பார்ப்போம். […]

இப்னு ஹத்தாது நாளின் ஆரம்பம் ஃபஜ்ராக இருந்தால் முதலில் பகல், அடுத்து வருவது இரவு; மஃறிபாக இருந்தால் முதலில் இரவு அடுத்து வருவது பகல். இப்போது கீழ்க்காணும் குர்ஆன் வசனங்கள் பகலுக்குப் பின் இரவு என்கின்றனவா? அதற்கு மாறாக இரவுக்குப் பின் பகல் என்கின்றனவா? நீங்களே படித்து அறியுங்கள்! 1. சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தத்தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40) 2. சூரியன் மீதும், அதன் […]

ஹழரத் அலி அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ் வதற்குத் தேவையான ஏராளமான அருட்கொடை களை தனது தனிப்பட்ட பெருங் கருணையினால் வழங்கி வருகிறான். இந்த அருட்கொடைகளில் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தண்ணீர் என்பதை அனைவரும் அறிவோம். இந்த தண்ணீருக்கு அடிப்படை ஆதார மாக அனைவரும் விளங்கக்கூடிய மழையை அல்லாஹ் நிறுத்திவிட்டால் மனிதர்கள் மட்டு மின்றி காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம். மழை பொழிய வேண்டிய காலங்களில் மழை […]

அல்குர்ஆன் வழிகாட்டுகிறது : நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியா சிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னை யும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர் களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (9:34) (நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரக நெருப் பில் […]

””குரங்கு கையில் கிடைத்த பூமாலை’’ என்ற தொரு பழமொழி; அதுபோல் மனிதக் குரங்கு கள் கையில் மத்திய, மாநில ஆட்சிகள் கிடைத்துள்ளன. இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு மனிதத் தன்மையோ, மனிதாபமோ இருப்பதாகத் தெரிய வில்லை. அப்படி ஆட்சியாளர்களுக்கு மனிதப் பண் பாடுகளோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ இருந்தால் மக்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், மக்கள் பணத்தை முழுக்க முழுக்க தவறான வழி களில் கோடி கோடியாகச் சுருட்ட முற்படுவார் களா? இன்றைய அரசியல், மூலதனமே இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை […]